சுதந்திர தினத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் தீபா மாலிக் உட்பட விளையாட்டு ஆளுமைகள் சிறப்பு அழைப்பாளர்களாக இருந்தனர். இவர்களுடன் கலந்துரையாட பிரதமர் மோடி வந்தபோது அவரை சந்திக்க விளையாட்டு ஆளுமைகளிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. இதனால் சக்கர நாற்காலியில் இருந்த தீபா மாலிக்கை தாண்டிச் செல்வதற்கு அவர்கள் முயன்றனர். இதை பார்த்த பிரதமர் முதுகுத் தண்டில் பலத்த காயமடைந்து அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கும் அவரை தொந்தரவு செய்யாதீர்கள் என்று மற்றவர்களை வலியுறுத்தினார்.
இந்தச் சம்பவம் பற்றி எடுத்துரைத்த தீபா மாலிக் பிரதமர் மோடிக்கு தம்மீதான அக்கறையால் தாம் நெகிழ்ச்சியடைந்ததாகவும், மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறினார். தம்மைத் தாண்டி பிரதமரை நோக்கி செல்வதற்கு விளையாட்டு ஆளுமைகள் முயற்சி செய்தபோது பிரதமர் மோடி எவ்வாறு அவர்களைத் தடுத்து நிறுத்தினார் என்பதை அவர் நினைவு கூர்ந்தார். விளையாட்டு வீரர்கள் அவர் மீது விழுந்துவிடாமல் இருக்க பிரதமர் ஒரு கையை தமது தலையின் பின்னால் வைத்து பாதுகாத்தாக தீபா மாலிக் கூறினார்.
“தம்மைத் தாண்டி பிரதமரிடம் செல்வதற்கு விளையாட்டு ஆளுமைகள் முயற்சி செய்தனர். அப்போது மோடி அவர்கள் விரைந்து வந்து எனது தலைக்குப் பின்னால் அவரது கையை வைத்து மற்றவர்கள் என்மீது விழாதபடி பாதுகாத்தார். எனது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டிருப்பதால் எனக்கு தொந்தரவு தர வேண்டாமென்று அவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். எனது முதுகுத் தண்டு காயம் பற்றி பிரதமர் நினைவில் வைத்திருந்து என்னை பாதுகாத்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.” என்று தீபா கூறினார்.
I’ve had the privilege of interacting with Hon. PM @narendramodi ji many a times. One interaction that I will never forget was when Modiji himself wheeled my wheelchair to the stage! Watch this story and more more here: https://t.co/GildVTP7Oy@PMOIndia @BJP4India
— Deepa Malik (@DeepaAthlete) March 27, 2022