“ஆசியான்-இந்தியா: பகிரப்பட்ட விழுமியங்கள், பொது இலக்குகளும்” என்ற தலைப்பில் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் ஆசியான் – இந்தியா நல்லுறவு குறித்த தனது பார்வையை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசியான் அமைப்பின் உறுப்பு நாடுகளில் வெளியாகும் முன்னணி நாளிதழ்களில் அக்கட்டுரை வெளியாகியுள்ளது. அவரது கட்டுரையிலிருந்து:
ஆசியான் – இந்தியா: பகிரப்பட்ட விழுமியங்கள்,
பொது இலக்குகள்
-நரேந்திர மோடி
குடியரசு தினம் கொண்டாடப்படும் இன்றைய தினத்தில் ஆசியான் அமைப்பின் நாடுகளைச் சேர்ந்த 10 முக்கிய விருந்தினர்களை நமது தலைநகர் தில்லிக்கு அழைத்து கவுரப்படுத்தும் வாய்ப்பு 125 கோடி இந்தியர்களுக்கு கிடைக்கும்.
ஆசியான்-இந்தியா நல்லுறவின் 25 ஆவது ஆண்டையொட்டி ஆசியான் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாட்டை நடத்தும் அரிய வாய்ப்பை நான் பெற்றேன். நம்முடன் அவர்கள் இருப்பது ஆசியான் நாடுகள் நம்மிடம் முன்னெப்போதும் இல்லாத வகையில் காட்டும் சிறப்பும் நல்லெண்ணமும் ஆகும். அதற்கு கைம்மாறாக இந்த இதமான குளிர்காலக் காலையில் இந்தியா அவர்களது இதமான நட்பை இந்தியா பாராட்டுகிறது.
இது சாதாரண நிகழ்வல்ல. உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினர், அதாவது 190 கோடிப் பேர் வாழும் இந்திய – ஆசியான் நாடுகளுக்கு இடையிலான நட்புறவை இன்னும் ஆழமாக்கும் வகையில் அமைந்த இந்த நிகழ்வு வரலாற்றுச் சிறப்புள்ள மகத்தான பயணத்தில் ஒரு மைல் கல் ஆகும்.
இந்திய – ஆசியான் நல்லுறவுக்கு 25 வயது ஆகியிருக்கலாம். ஆனால், இந்தியாவுக்கும் தெற்காசிய பகுதிக்குமான உறவு பல்லாயிரம் ஆண்டுப் பழைமையானது. அமைதி, நட்பு, சமயம், பண்பாடு, கலை, வணிகம், மொழி, இலக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது இந்த உறவு. இந்த உறவுகள் மிகப் பெரிய பன்மைத்த தன்மையுள்ள இந்திய, தெற்காசிய நாடுகளின் அனைத்துக் கூறுகளிலும் இன்றைக்கும் இடம்பெற்றுள்ளது. இது நமது மக்களிடையில் வித்தியாசமான வசதியையும் பரஸ்பர அறிமுகத்தையும் அளிக்கிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு உலகில் ஏற்படும் மகத்தான மாற்றங்களை ஏற்பதற்கு இந்தியா தயாராகிவிட்டது. அத்துடன், பல நூற்றாண்டுகளாகக் கொண்டிருக்கும் மென்மைத் தன்மையால் கிழக்கு நாடுகளை நோக்கி அணுகத் தொடங்கியது. அதையடுத்து, கிழக்கு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா புதிய பயணத்தைத் தொடங்கியது. இந்தியாவைப் பொறுத்தவரையில், பெரும்பாலான நமது முக்கிய கூட்டாளிகளும் சந்தைகளும் ஆசியான் நாடுகள் முதல் கிழக்காசியா வரையிலும், வட அமெரிக்கா முதல் கிழக்கு நாடுகள் வரையிலும் சார்ந்தவையாக அமைந்துள்ளன. மேலும், தெற்காசிய நாடுகளும் ஆசியான் நாடுகளும் நில வழியாகவும், நீர் வழியாகவும் அண்டை நாடுகளாகத் திகழ்கின்றன. அவை கிழக்கை நோக்கிய நமது அணுகுமுறைக்குச் சாதகமாகவும் கீழைசார் கொள்கை சட்டத்துக்கு (Act East Policy) அனுசரணையாக கடந்த மூன்று ஆண்டுகளாகவும் இருந்து வருகின்றன.
இந்த அடிப்படையில், இந்தியாவும் ஆசியான் அமைப்பும் பேச்சுவார்த்தைக் கூட்டாளி என்ற நிலையிலிருந்து ராஜீய கூட்டாளிகளாக உருமாறியுள்ளன. முப்பது வகையான வழிமுறைகளின் மூலம் விரிவான இந்தக் கூட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆசியான் அமைப்பின் ஒவ்வொரு உறுப்பு நாடுகளுடனும் ராஜீய, பொருளாதார, பாதுகாப்புக் கூட்டாளிகளாக வளர்ந்து வருகிறோம். இவ்வாறு இணைந்து செயல்படுவதன் மூலம் நமது கடல் பகுதிகள் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருக்கின்றன. நமது வர்த்தகம், முதலீடுகள் அடிக்கடி பல மடங்காக அதிகரித்துள்ளன. ஆசியான் இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளி ஆகும். இந்தியா ஆசியான் அமைப்பில் ஏழாவது இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் தலைமையில் அமைந்துள்ள ஆசியான் அமைப்பு இந்தியாவின் முன்னணி முதலீட்டு ஆதாரமாகத் திகழ்கிறது. இந்தியாவின் இந்த மண்டலத்தில் உருவான திறந்த வர்த்தக உடன்பாடுகள் மிகப் பழமையானவையும் எப்போதும் மிகுந்த வரவேற்புக்குரியதாகவும் அமைந்துள்ளன என்பது கவனிக்கத் தக்கது.
வான்வழித் தொடர்பு விரைவாக விரிவடைந்துள்ளன. மேலும் நெடுஞ்சாலைகளையும் தெற்காசிய- ஆசிய மண்டலத்துக்கு இடையில் அவசர கதியிலும் அவசிய கதியிலும் விரிவுபடுத்தி வருகிறோம். வளர்ந்து வரும் இணைப்புகள் நமது அணுக்கத்தை வலுப்படுத்தியுள்ளது. தெற்காசிய நாடுகளில் விரைந்து முன்னேறும் சுற்றுலா வளம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியாவை இத்தகைய நடைமுறை உருவாக்கியுள்ளது. இந்த மண்டலப் பகுதிக்குப் பன்முகமாகப் புலம்பெயர்ந்து வாழும் 60 லட்சம் இந்தியர்கள் நமக்கு மிகப் பெரிய மானுடப் பாலமாக அமைந்துள்ளனர்.
ஆசியான் அமைப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு நாடுகளைப்பற்றியும் தனது கருத்துகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார். அவை வருமாறு:
தாய்லாந்து:
தாய்லாந்து இநதியாவின் மிக முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக உயர்ந்துள்ளது. அத்துடன் ஆசியான் அமைப்பில் இந்தியாவில் முதலீடு செய்யும் மிக முக்கிய முதலீட்டாளர்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இரு தரப்பு வர்த்தக உறவுகள் இருமடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளன. இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உறவுகள் பல் வேறு துறைகளில் பரந்துபட்டவை. தெற்கு மற்றும் தெற்காசிய மண்டத்தில் முக்கியமான கூட்டாளிகளாக இந்தியாவும் தாய்லாந்தும் இருக்கின்றன. ஆசியான், தெற்காசிய உச்சி மாநாடு (East Asia Summit) மற்றும் வங்காள விரிகுடாப் பகுதி பலதர்பபட்ட தொழில்நுட்ப, பொருளாதாரக் கூட்டமைவின் முன்னெடுப்பு நடவடிக்கை (Bimstec) ஆகியவற்றிலும் மேகாங், கங்கா ஒத்துழைப்பு (Mekong Ganga Cooperation), ஆசிய ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை (Asia Cooperation Dialogue), இந்தியப் பெருங்கடல் சங்கம் (Indian Ocean Rim Association) ஆகியவற்றிலும் வலுவான கூட்டாகத் திகழ்ந்துள்ளது.
தாய்லாந்து மன்னர் புமிபால் உத்லயதேஜ் (King Bhumibol Adulyadej) மறைந்தபோது, தாய்லாந்து சகோதர சகோதரிகளுடன் இந்தியாவும் இணைந்து துயரத்தில் பங்கு கொண்டது. புதிய மன்னர் மேன்மை தங்கிய மஹா வஜ்ரலோங்கோரன் போதிந்தர தேவயவரங்கன் (King Maha Vajiralongkorn Bodindradebayavarangkun) வாழ்த்திப் பிரார்த்தனை செய்ததிலும் தாய்லாந்து நண்பர்களுடன் இணைந்தோம்.
வியட்நாம்:
அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்து விடுதலைப் போர் நடத்தியது, பாரம்பரியம், நல்லுறவு ஆகியவற்றில் இந்தியாவுக்கு நெருக்கமானது வியட்நாம். காலனியாதிக்கத்துக்கு எதிராக மகாத்மா காந்தியும் ஹோசிமின்னும் வீரமாகப் போராடினர். வியட்நாம் பிரதமர் நிகுயன், தான் துங் (Nguyễn Tấn Dũng) இந்தியாவுக்கு 2007ம் ஆண்டு வருகை புரிந்தபோது, இரு தரப்பு நாடுகளும் ராஜீய உறவுக்கான உடன்பாட்டில் (Strategic Partnership agreement) கையெழுத்திட்டன. அந்த ராஜீய உறவு 2016ம் ஆண்டு வியட்நாம் நாட்டுக்கு நான் பயணம் சென்றபோது, ஒருங்கிணைந்த ராஜதந்திர கூட்டாண்மையாக (Comprehensive Strategic Partnership) விரிவடைந்தது.
வியட்நாமுடன் கொண்டுள்ள நமது உறவு வளர்ந்து வுரும் பொருளாதார, வணிக்கத் தொடர்பாக விரிவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு வர்தகம் 10 ஆண்டுகளில் 10 மடங்காக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பு இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான ராஜதந்திர கூட்டாண்மையின் மிக முக்கியமான தூணாக விஸ்வரூபம் அடைந்துள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை இன்னொரு முக்கிய ஒத்துழைப்பாகத் திகழ்கிறது.
மியான்மர்:
இந்தியாவும் மியான்மர் நாடும் 16 ஆயிரம் கி.மீ நீளமுள்ள எல்லையில் கடல் எல்லையிலும் நில எல்லையிலும் உறவாடுகின்றன. இருநாடுகளின் கலாசார, சமய பாரம்பரியங்கள் ஆழமாக ஊடுருவியுள்ளன. அத்துடன் நமது பொதுவான பவுத்த பாரம்பரியம் வரலாற்றுக் காலங்களில் நெருக்கமாக்கியுள்ளது. ஷ்வேதகன் பக்கோடா கோபுரத்தைப் போல் ஜொலிப்பது வேறொன்றுமில்லை. இந்திய தொல்லியல் துறையின் துணையோடு மியான்மரில் உள்ள பாகான் ஆனந்தா ஆலயத்தைப் புதுப்பிக்க மேற்கொள்ளும் ஒத்துழைப்பு இரு தரப்பு பாரம்பரியத்தைப் பேணிக்காக்கும் சிறந்த செயலாகும்.
காலனி ஆதிக்கத்தின்போது, இரு தரப்புத் தலைவர்களுக்கு இடையில் அரசியல் பிணைப்புகளை ஏற்பட்டன. அது நம்பிக்கை தந்தது, சுதந்திர் பெறுவதற்கு, பொது எதிரியுடன் போராட உதவியது. யாங்கூன் நகருக்கு மகாத்மா காந்தியடிகள் பலமுறை பயணம் மேற்கொண்டார். பால கங்காதர திலகர் பல ஆண்டுகளாக யாங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்திய சுதந்திரத்துக்காக விடுத்த அறைகூவல் மியான்மர் மக்களின் ஆன்மாவை உசுப்பிவிட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு கடந்த பத்தாண்டுகளில் இரு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. அத்துடன் முதலீடுகள் வலுவாக இருக்கின்றன. அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு இந்திய மியான்மர் நல்லுறவில் குறிப்பிடத் தக்க இடத்தை வகிக்கிறது. தற்போது அளிக்கப்படும் நிதியுதவியின் மதிப்பீடு 173 கோடி டாலர் உதவி ஆகும். இந்தியாவின் வெளிப்படைத் தந்மையான கூட்டு மியான்மரின் தேசிய முன்னுரிமைத் திட்டங்களுக்குத் துணைபுரிகின்றன. ஆசியான் கூட்டாண்மையில் பெருந்திட்டத்துடன் இவை இணைந்திருப்பதும் குறிப்பிடத் தக்கது.
சிங்கப்பூர்:
இந்திய கூட்டாண்மையின் பாரம்பரியம் மிக்க சாளரமாக சிங்கப்பூர் திகழ்கிறது. இது இன்றும் என்றும் சாதகமான முன்னேற்றத்துக்கு உறுதுணையாகும். இந்தியாவுக்கும் ஆசியான் அமைப்புக்கும் சிங்கப்பூர் ஒரு பாலமாகத் திகழ்கிறது. இன்று அந்நாடு கீழை நாடுகளுக்கு வாயிலாக விளங்குகிறது. பெரிய உலகளாவிய ராஜதந்திர பங்காளியாகவும் இருக்கிறது. இது பல மண்டல, உலக அளவிலான பேரவைகளில் நமது பங்கினை பரிமளிக்கச் செய்கிறது. சிங்கப்பூரும் இந்தியாவும் ராஜதந்திர கூட்டாளிகளாகும்.
நமது அரசியல் உறவுகள் நல்லெண்ணம், நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்பையிலானவை. நமது பொருளாதார உறவு இரு நாடுகளின் ஒவ்வொரு அம்சத்தையும் கருத்தில் கொள்வதாக அமைந்துள்ளது. இந்தியாவின் முன்னணி இலக்காகவும் முதலீட்டுக்கான ஆதாரமாகவும் சிங்கப்பூர் திகழ்கிறது.
ஆயிரக் கணக்கான இந்திய நிறுவனங்கள் சிங்குப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இந்தியாவின் 16 நகரங்களுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் 240 நேரடி வாராந்திர விமானப் போக்குவரத்து நடைமுறையில் உள்ளது. சிங்கப்பூரின் சுற்றுலாப் பயணிகளில் மூன்றாவது இடத்தில் இந்தியர்கள் வகிக்கிறார்கள்.
சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரத் தன்மைப் பேணும் தன்மையும், திறமையை மதிக்கும் போக்கும் வலுவான செயல்பாடு மிக்க இந்தியர்களுக்கு ஊக்கமளிக்கின்றன. அதுவே இரு தரப்பு ஒத்துழைப்புக்குப் பங்களித்து வருகிறது.
பிலிப்பைன்ஸ்:
இரு மாதங்களுக்கு முன் நான் மேற்கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டுப் பயணம் மிகவும் திருப்தி அளித்தது. ஆசியான் – இந்தியா, EAS போன்ற உச்சி மாநாடுகளில் பங்கேற்பதுடன் பிலிப்iபன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடேர்டேவும் (Duterte) நானும் நமது நல்லுறவை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் பிரச்சினை அற்ற உறவை முன்னெடுப்பதற்கும் விரிவாகப் பேசியுள்ளோம். சேவைகளிலும், நமது வளர்ச்சி விகிதத்திலும் நம் இரு நாடுகளும் வலுவாக இருக்கின்றன. நமது இரு நாடுகளின் வர்த்தகமும் வணிகமும் பெரிய நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.
வளர்ச்சி மற்றும் ஊழல் ஒழி்பபுப் பணிகளில் அதிபர் டுடேர்டே ஈடுபடட்டு வருவதை நான் பெரிதும் பாராட்டுகிறேன். இதுபோன்ற விஷயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படலாம். நிதி, உலகளாவிய அடையாள அட்டைகள், எல்லோரும் வங்கிச் சேவைகளை எளிதில் பெறுவது, சமூக நலப் பலன்கள் பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்தல், பணமில்லா பணப் பரிமாற்றம் ஆகியவை குறித்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் நான் பெரும் மகிழச்சி அடைகிறேன்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் எல்லோருக்கும் மலிவான விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வது இன்னொரு முக்கியமான விஷயமாகும். அதில் உதவுவதற்குத் தயாராக இருக்கிறோம். மும்பை முதல் மார்வாய் வரையில் பயங்கரவாதத்துக்குப் பாரபட்சமே இல்லை. அந்த சவாலை எதிர்கொள்வதற்கு நமது ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகிறோம்.
மலேசியா:
இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் தற்போது நிலவும் உறவுகள் விரிவானவை. பல துறைகளில் பரவி நிற்பவை. மலேசியாவும் இந்தியாவும் ராஜீய உறவைப் பகிர்கின்றன. உலகின் பல தரப்பட்ட மண்டல அளவிலான பேரவைகளில் நாம் இரு நாடுகளும் ஒத்துழைத்து வருகிறோம். 2017ம் ஆண்டில் மலேசிய பிரதமர் இந்தியாவுக்கு வந்ததன் மூலம் இரு தரப்பு உறவுகளில் நீண்டகாலம் பயன்தரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியான் அமைப்பில் உள்ள நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள உறவைப் பொறுத்தவரையில் மலேசியா மூன்றாவது பெரிய நாடாக அமைந்துள்ளது. இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தகம் கடந்த பத்தாண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவும் மலேசியாவும் இரு தரப்பு ஒருங்கிணைந்த பொருளாதார உறவுக்கான உடன்பாட்டை 2011 ஆ்ம் ஆண்டு முதல் மேற்கொண்டுள்ளன. ஆசியான் வணிகத்திலும் உலக வர்த்தக அமைப்பின் செயல்பாட்டுக்கும் உரிய பங்களிப்பைச் செலுத்துவதால் இந்த உடன்பாடு மிகவும் புதுமையானது.
இரட்டை வரிவிதிப்பு முறையைத் தவிர்ப்பதற்காக 2012ஆம் ஆண்டு மேமாதம் இரு நாடுகளும் கையெழுத்திட்ட திருத்த உடன்பாடும் சுங்கச் சேவையில் ஒத்துழைப்பு வகை செய்யும் 2013ம் ஆண்டு உடன்பாடும் இரு தரப்பு முதலீடுகள், வர்த்தகம் ஆகியவற்றுக்கு வழியமைத்துள்ளன.
புரூனே:
இந்தியாவுக்கும் புரூனே நாட்டுக்கும் இடையிலான வர்த்தக உறவு கடந்த பத்தாண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவும் புரூனே நாடும் ஐ.நா (UN)., அணிசாரா நாடுகள் அமைப்பு (NAM), காமன்வெல்த், (Commonwealth) ஆசிய மண்டல கூட்டமைப்பு (ARF) ஆகிய அமைப்புகளில் இணையாக இடம்பெற்றுள்ளன. வளர்ந்து வரும் வலுவான பாரம்பரியமும் பண்பாட்டு இணைவும் கொண்ட நாடுகளாக இரண்டும் உள்ளன. பல்வேறு சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளும் பொதுவான நிலையில் இருக்கின்றன. புரூனே சுல்தான் (மன்னர்) இந்தியாவில் 2008ம் ஆண்டு மே மாதம் மேற்கொண்ட பயணம் இரு தரப்பு உறவில் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. அதைப் போல் அதைப்போல் 2016ம் ஆண்டில் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் புரூனே சென்றதும் குறிப்பிடத் தக்கது.
லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசு:
இந்தியாவுக்கும் லாவோ நாட்டுக்கும் இடையிலான உறவுகள் விரிவானவை. பல துறைகளில் பரந்துப்ட்டவை. லாவோ நாட்டில் மின்சாரப் பகிர்மானம் வேளாண்மை ஆகியவற்றைச் செயல்படுத்துவதில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தியாவும் லாவோ நாடும் பலதரப்பு அமைப்புகளில் ஒத்துழைத்து வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் குறைவாக இருக்கின்றன என்றாலும் லாவோ நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் சரக்குகளுக்கு சுங்க வரிச் சலுகை அளிப்பதற்கான திட்டம் அந்நாட்டின் ஏற்றுமதிக்கு ஊக்கமளிக்கும். அது போல் சேவைத் துறைகளிலும் இந்தியாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆசியான் அமைப்பில் மேற்கொள்ளப்படும் முதலீட்டு உடன்பாட்டைச் செயல்படுத்துவது இவற்றுக்கு உதவும்.
இந்தோனேசியா:
இந்தியப் பெருங்கடலில் 90 கடல் மைல் அளவே பரந்திருக்கும் இந்தோனேசியா இந்தியாவுடன் தொடர்ச்சியான நாகரிகத்தைக் கொண்டுள்ளது. இந்த உறவு இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலவுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் பாலி யாத்திரையாக (Balijatra) இருக்கட்டும், இந்தோனேசியாவின் பல பகுதிகளில் நடத்தப்படும் ராமாயண, மகாபாரத கலைநிகழச்சிகளாகட்டும், இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் உள்ள தொப்புள் கொடி உறவைக் காட்டுகின்றன.
வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) அல்லது பினைகா துங்கால் இல்கா (Bhinneka Tunggal Ika) ஆகியவை இரு நாடுகளும் கடைப்பிடிக்கும் மிக முக்கியமான சமூக விழுமியங்களாகும். அதைப் போல் பொதுவான ஜனநாயக மதிப்பீடுகளும் ச்டடங்களும் அமைந்துள்ளன.
இன்று, அரசியல் பொருளாதாரம், பாதுகாப்பு, பண்பாடு, மக்கள் துறைகள் ஆகியவற்றில் இரு நாடுகளின் நல்லுறவு, ஆகியவை ஒத்துழைப்பு பரந்து விருந்துள்ளன. ஆசியான் நாடுகளில் இந்தோனேசியா மிகப் பெரிய வர்த்தக கூட்டாளியாக நீடிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இரு தரப்பு வர்த்தகம் இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. அதிபர் ஜோக்கோ விடோடோ (Joko Widodo) 2016ம் ஆண்டில் இந்தியாவில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் நீண்ட காலப் பலனுக்கான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கம்போடியா:
இந்தியாவுக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான நட்புறவு நாகரிகத் தொடர்பில் ஆழமாக வேரூன்றியது. ஆங்கூர் ஆலயம் இரு நாடுகளின் பாரம்பரிய, சமய தொடர்பின் மிகப் பெரிய அடையாளமாகும். அதை 1986 முதல் 1993ம் ஆண்டு வரையில் இந்தியா புதுப்பித்தது பெருமைக்குரியது. இது போல் ட்சா ப்ரோஹ்ம் ஆலயத்தை (Ta-Prohm) மேம்படுத்துவதிலும் இந்த மதிப்புமிக்க நல்லுறவை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. கம்போடியாவில் கேமர் ரோவின் ஆட்சி வீழ்ந்த பிறகு, அந்நாட்டு அரசை1981ம் ஆண்டு அங்கீகரித்த முதல் நாடு 1991ம் ஆண்டு. பாரிஸ் அமைதி உடன்பாட்டிலும் இந்தியா பெரிய பங்கை ஆற்றியது. இந்த பாரம்பரிய உறவு வலுப்பட்டு வருகிறது. கம்போடியாவின் கட்டமைப்புக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது. அத்துடன் மனித ஆற்றல் மேம்பாடு, திறன் மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பண்பாட்டுப் பரிமாற்றம், சமூக மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், சுற்றுலா என பல துறைகளிலும் ஒத்துழைப்பு நல்கப்பட்டு வருகின்றன.
ஆசியான் அமைப்பில் கம்போடியாவுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தியா ஆசியான் அமைப்பில் இது தொடர்பாகப் பல பணிகளை ஆற்றி வருகிறது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை ஆசியான் உள்ளிட்ட பல அமைப்புகளில் தொ டர்ந்து நீடிக்கிறது.
இந்தக் கூட்டின் வலிமை மற்றும் விரிதிறன் ஆகியவை உறவின் அடிப்படையில் வலுவாக அமைந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் பொதுவான எதிர்காலம் குறித்த பார்வை உள்ளது. இறையாண்மையில் நம்பிக்கை, அர்ப்பணிப்பு உணர்விலான கட்டமைப்பு, எந்த நாடாக இருந்தாலும் சமமாகப் பாவித்ாதல் வணிகத்தில் இதர துறைகளிலும் ஆதரவு தருதல் ஆகியவை இரு நாடுகளுக்கும் பொதுவான குணமாகும்.
ஆசியான் – இந்தியா உறவு மேலும் தொடரும். வளரும். வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார முதிர்ச்சி உள்ளிட்ட பலவற்றில் இந்தியாவும் ிஆசியான் நாடுகளும் வலுவான பொருளாதாரக் கூட்டினை அமைக்கும். தொடர்புகளும் தடொரும். அதிகரிக்கும். தெற்காசிய நாடுகளுடனான தொடர்பு வலுவான பொருளாதாரக் கூட்டிணைவை வலுப்படுத்தும்.
பாரதப் பிரதமர் என்கிற முறையி்ல், ஆண்டுதோறும் நடைபெறும் ஆசியான் மற்றும் ிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளில் உச்சி மாநாடுகளில் நான்கு முறை பங்கேற்றுள்ளேன். ஆசியான் நாடுகளின் ஒற்றுமை, தலைமைப் பண்பை உறுதிசெய்யும் வகையில் செயல்ப்ட்டுளேளேன்
கடந்த ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற 70வது ஆண்டாகும். இச்சூழலில் இந்த ஆண்டு ஒரு மைல்கல்லாகும். 50 ஆண்டுகளில் ஆசியான் பொன்னெழுத்தில் பொறிக்கத் தக்க நிலையை ஏட்டியுள்ளது. நமது எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளலாம்.
70வது ஆண்டில் இந்தியா தனது இளையரோர் பலத்துடன் உற்சாகத்தை வெளிப்படுத்துகிறது. உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியா உலகில் முன்னணியில் இருக்கிறது. அத்துடன் ஸ்திரத் தன்மையும் கொண்டுள்ளது. இந்தியாவில் வர்த்தகம் தொடங்குவது நாளுக்கு நாள் எளிதாகி வருகிறது.
புதிய இந்தியாவை உருவாக்குவதில் ஆசியான் அமைப்பின் நாடுகள் இணைந்து செயல்புடம் என நம்புகிறேன்.
ஆசியான் முன்னேற்றத்தை நான் பெரிதும் போற்றுகிறேன். தெற்காசிய நாடுகள் மோசமான போருக்கு ஆளாகிய காலத்தில் பிறந்தேன் நான். அப்போது இந்த மண்டலத்தில் ஸ்திரத் தன்மையில்லை. ஆசியான அமைப்பு பல தளங்களில் 10 நாடுகளை இணைத்து பின்னணியில் இருந்தது. எதிர்காலத் தேவை குறித்தும் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டது. உயர்ந்த லட்சியத்தைத் தொடர்வதற்கும், சவால்களை எதிர்கொள்ளவும் திறமை நம்மிடம் உள்ளது. நமது டிஜிட்டல் தொழில்நுட்ப ஆற்றல், புதுமையாக்கம், இணைவு ஆகியவை வேகமாகவும் நமது வாழ்க்கையை மாற்றிவருகிறது.
நம்பிக்கையுள்ள எதிர்காலம் அமைதியில் கட்டப்பட வேண்டும். இது மாற்றம், ஏற்றம் ஆகியவற்றுக்கானது. இகது வரலாற்றில் ஏப்போதோதான் நடக்கும். ஆசிான் அமைப்பும் இநதியாவும் நிறைய வாய்ப்புகளைப் பெற்றுள்ளன. எனவே, நம் காலத்திய ஸ்திரமற்ற தனமை, பதற்றச் சூழல் ஆகியவற்றை மாற்றி, ஸ்திரத்தன்மை, அமைதியை எதிர்காலத்தில் நமது மண்டலத்திலும் உலகிலும் நிலைநாட்டவேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. அதற்கான திட்டத்தை வகுத்துச் செயல்படவும் வேண்டும்.
இந்தியார்கள் எப்போதும் சூரியோதயத்துக்காகவும் வாய்ப்புகளுக்காகவும் கிழக்கின் மீதே பார்வை செலுததுவர். தற்போது இந்திய பசிபிக் மண்டலத்தில் இந்தியாவின் எதிர்காலமும் நமது பொதுவான இலக்குகளும் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. ஆசியான் இந்தியா கூட்டு அதில் முக்கியப் பங்காற்றும். தில்லியில், ஆசியான் அமைப்பும் இந்தியாவும் அதற்கான உறுதிமொழியை ஏற்கின்றன.
ஆசியான் நாடுகளில் வெளியாகும் இதழ்களில் இடம்பெறும் பிரதமரின் உரை கீழ்க்கண்ட இணையதளங்களிலும் காணலாம்:
https://www.bangkokpost.com/opinion/opinion/1402226/asean-india-shared-values-and-a-common-destiny
https://www.businesstimes.com.sg/opinion/asean-india-shared-values-common-destiny
https://www.globalnewlightofmyanmar.com/asean-india-shared-values-common-destiny/
https://www.mizzima.com/news-opinion/asean-india-shared-values-common-destiny
https://www.straitstimes.com/opinion/shared-values-common-destiny
https://news.mb.com.ph/2018/01/26/asean-india-shared-values-common-destiny/