நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஓராண்டுகால நிகழ்வைக் குறிக்கும் வகையில் நேதாஜியின் பிரம்மாண்ட சிலை இந்திய நுழைவுவாயிலில் நிறுவப்பட உள்ளது

January 21st, 07:46 pm

மாபெரும் விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை நினைவுபடுத்தும் வகையிலும் ஓராண்டு கால கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரம்மாண்ட சிலை ஒன்றை இந்தியா நுழைவாயிலில் நிறுவ அரசு முடிவு செய்துள்ளது. பளிங்குக் கல்லால் உருவாக்கப்படவிருக்கும் இந்தச் சிலை நமது விடுதலைப் போராட்டத்தில் நேதாஜியின் தீவிரமான பங்களிப்புக்குப் பொருத்தமான அஞ்சலியாக இருப்பதோடு அவருக்கு நாடு கடன் பட்டிருப்பதன் அடையாளமாகவும் இருக்கும். இந்தச் சிலைக்கான பணி நிறைவுபெறும்வரை நேதாஜியின் முப்பரிமாண மெய்நிகர் சிலை ஒன்று அதே இடத்தில் அமைக்கப்படும்.

இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரமாண்ட சிலை நிறுவப்படும்: பிரதமர்

January 21st, 03:00 pm

இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரமாண்ட சிலை நிறுவப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலை கட்டி முடிக்கப்படும் வரை, அந்த இடத்தில் அவரது முப்பரிமாணப் படிப்பைச் (ஹாலோகிராம்) சிலையை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி அவரது பிறந்தநாளில் பிரதமர் திறந்து வைப்பார்.

“விடுதலையின் அமிர்தப் பெருவிழாவிலிருந்து இந்தியாவின் பொற்காலத்தை நோக்கி" என்ற நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை

January 20th, 10:31 am

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவிலிருந்து பொற்கால இந்தியாவை நோக்கிய பயணத்துக்கான மிகப்பெரும் பிரச்சாரத்தை பிரம்ம குமாரிகள் அமைப்பு இன்று தொடங்கியுள்ளது.

'சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழாவிலிருந்து தங்க இந்தியாவை நோக்கி' என்பது குறித்த தேசிய விழாவைப் பிரதமர் தொடங்கிவைத்து முக்கிய உரையாற்றினார்

January 20th, 10:30 am

'சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழாவிலிருந்து தங்க இந்தியாவை நோக்கி' என்பது குறித்த தேசிய விழாவைத் தொடங்கிவைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி முக்கிய உரை நிகழ்த்தினார். பிரம்ம குமாரிகளின் ஏழு முன்முயற்சிகளையும் அவர் தொடங்கிவைத்தார்.

PM Interacts with Young Artificial Limbs Beneficiaries

April 27th, 06:05 pm

PM Interacts with Young Artificial Limbs Beneficiaries