Telephone Conversation between PM and President of the Republic of Uganda
April 09th, 06:30 pm
Prime Minister Shri Narendra Modi had a telephone conversation today with H.E. President Yoweri Kaguta Museveni of the Republic of Uganda.பிரதமரின் உகாண்டா அரசு முறைப் பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா-உகாண்டா கூட்டறிக்கை
July 25th, 06:54 pm
உகாண்டா குடியரசின் அதிபர் மாண்புமிகு யோவேரி காகுடா முசவேணி அழைப்பின் பேரில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உகாண்டாவில் 2018 ஜூலை 24,25 தேதிகளில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அவருடன் மத்திய அரசின் உயர்நிலை அதிகாரிகள், வர்த்தகர்கள் கொண்ட உயர்நிலைக் குழு சென்றிருந்தது. கடந்த 21 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் உகாண்டாவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.உகாண்டா நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரை
July 25th, 01:00 pm
உகாண்டா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் இன்று இந்தியாவும், ஆப்பிரிக்காவும் நம்பிக்கை, பாதுகாப்பு, இளமை, புதுமை, துடிப்போடு கூடிய மக்கள் என்பதாக நம்பிக்கையோடு மிகப்பெரிய எதிர்காலத்தின் வாயிலில் நிற்கின்றன; ஆப்பிரிக்கா முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உகாண்டா எடுத்துக்காட்டு. பாலியல் சமத்துவம், வளரும் கல்வி மற்றும் சுகாதாரத் தரம் மற்றும் விரியும் உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு ஆகியவற்றை கண்டு வருகிறது உகாண்டா. இது வளரும் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான மாகாணமாக உள்ளது. இங்கு புதுமை வேகமாக வளர்ந்து வருவதை காண்கிறோம். இந்தியாவில் இருக்கும் நாங்கள் ஆழமான நட்பின் பந்தத்தின் காரணமாக ஆப்பிரிக்காவின் வெற்றியை கொண்டாடுகிறோம்.இந்தியா-உகாண்டா வர்த்தக அமைப்பில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
July 25th, 12:41 pm
இந்தியா-உகாண்டா வர்த்தக அமைப்பில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் உகாண்டாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளை இந்தியா எப்போதும் ஆதரிக்கிறது மற்றும் இந்தியாவும் உகாண்டாவும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொள்கின்றன என்று பிரதமர் மோடி கூறினார்பிரதமரின் உகாண்டா சுற்றுப் பயணத்தின் போது இந்தியாவுக்கும் உகாண்டாவுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பட்டியல்
July 24th, 05:52 pm
பிரதமரின் உகாண்டா சுற்றுப் பயணத்தின் போது இந்தியாவுக்கும் உகாண்டாவுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பட்டியல்கூட்டறிக்கை நிகழ்ச்சியில் உகாண்டா அதிபர் யோவேரி முசிவெனியுடன் பிரதமர் மோடி
July 24th, 05:49 pm
பிரதமர் நரேந்திர மோடி, உகாண்டா அதிபர் யோவேரி முசிவெனி தலைமையில் இந்தியாவும் உகாண்டாவும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொள்கின்றன. உகாண்டாவுக்கு, உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் பால் துறைக்குச் சுமார் 200 மில்லியன் டாலர்களைப் பிரதமர் மோடி கடனாக வழங்கினார்.பிரதமர் மோடி உகாண்டா சென்றடைந்தார்.
July 24th, 05:12 pm
இந்தியாவுக்கும் உகாண்டாவுக்கும் இடையில் கலாச்சார மற்றும் பொருளாதாரப் பிணைப்பை இங்கு வாழும் இந்தியர்கள்தான் ஏற்படுத்துகின்றனர். உகாண்டா அதிபரும், நாட்டில் வாழும் இந்தியர்கள் குறித்துப் புகழ்ந்து பேசினார். அவர்களின் கடுமையான உழைப்புக்காகவும் உகாண்டாவின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் வித்திடும் இந்தியர்களை அவர் வெகுவாகப் பாராட்டினார். பிரதமர் பேசும்போது, உகாண்டா வாழ் இந்தியர்களை அரவணைத்துக் கொண்டதற்கு அதிபர் முஸ்வெனிக்கு நன்றி தெரிவித்தார்’ என்று அவர் தெரிவித்தார்.