Today the youth of India is full of new confidence, succeeding in every sector: PM Modi
December 23rd, 11:00 am
PM Modi addressed the Rozgar Mela and distributed more than 71,000 appointment letters to newly appointed youth in Government departments and organisations. PM Modi underlined that in the last one and a half years, around 10 lakh permanent government jobs have been offered, setting a remarkable record. These jobs are being provided with complete transparency, and the new recruits are serving the nation with dedication and integrity.PM Modi distributes more than 71,000 appointment letters to newly appointed recruits
December 23rd, 10:30 am
PM Modi addressed the Rozgar Mela and distributed more than 71,000 appointment letters to newly appointed youth in Government departments and organisations. PM Modi underlined that in the last one and a half years, around 10 lakh permanent government jobs have been offered, setting a remarkable record. These jobs are being provided with complete transparency, and the new recruits are serving the nation with dedication and integrity.Prime Minister Narendra Modi to distribute over 71,000 appointment letters under Rozgar Mela
December 22nd, 09:48 am
PM Modi will distribute more than 71,000 appointment letters to newly appointed recruits. He will also address the gathering on this occasion. Rozgar Mela is a step towards fulfilment of the commitment of PM Modi to accord highest priority to employment generation.The relationship between India and Kuwait is one of civilizations, seas and commerce: PM Modi
December 21st, 06:34 pm
PM Modi addressed a large gathering of the Indian community in Kuwait. Indian nationals representing a cross-section of the community in Kuwait attended the event. The PM appreciated the hard work, achievement and contribution of the community to the development of Kuwait, which he said was widely recognised by the local government and society.Prime Minister Shri Narendra Modi addresses Indian Community at ‘Hala Modi’ event in Kuwait
December 21st, 06:30 pm
PM Modi addressed a large gathering of the Indian community in Kuwait. Indian nationals representing a cross-section of the community in Kuwait attended the event. The PM appreciated the hard work, achievement and contribution of the community to the development of Kuwait, which he said was widely recognised by the local government and society.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 'ஓராண்டு நிறைவில் முன்னேற்றம்' நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
December 17th, 12:05 pm
கோவிந்த் நகரில் நான் கோவிந்த் தேவ் அவர்களுக்கு வணக்கங்களைச் செலுத்துகிறேன். அனைவருக்கும் என் வணக்கங்கள்!ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 'ஓராண்டு முடிவில் முன்னேற்றம்' நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
December 17th, 12:00 pm
ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டு நிறைவையொட்டி கொண்டாடப்பட்ட ஓராண்டு முடிவில் முன்னேற்றம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அவர், ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக ராஜஸ்தான் அரசுக்கும், ராஜஸ்தான் மக்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களின் ஆசீர்வாதங்களைப் பெறும் அதிர்ஷ்டம் தமக்கு கிடைத்தது என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தானின் வளர்ச்சிப் பணிகளுக்கு புதிய திசை காட்டுவற்கும் வேகத்தை அதிகரிப்பதற்கும் மேற்கொண்ட முயற்சிகளுக்காக ராஜஸ்தான் முதலமைச்சர் மற்றும் அவரது குழுவினரை திரு மோடி பாராட்டினார். முதலாம் ஆண்டு வரவிருக்கும் பல ஆண்டு வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார். இன்றைய நிகழ்ச்சி அரசின் ஓராண்டு நிறைவைக் குறிப்பது மட்டுமின்றி, ராஜஸ்தானின் பிரகாசமான ஒளியையும் ராஜஸ்தானின் வளர்ச்சித் திருவிழாவையும் அடையாளப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தான் எழுச்சி உச்சி மாநாடு 2024-க்கு அண்மையில் தாம் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்த திரு மோடி, உலகெங்கிலும் உள்ள பல முதலீட்டாளர்கள் அதில் கலந்து கொண்டதாகவும், இன்று ரூ .45,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் ராஜஸ்தானில் தண்ணீர் தொடர்பாக எதிர்கொள்ளும் தடைகளுக்கு பொருத்தமான தீர்வை வழங்கும் என்றும், இந்தியாவுடன் மிகவும் நன்கு இணைக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தானை மாற்றும் என்றும் அவர் கூறினார். இந்த வளர்ச்சிப் பணிகள் அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கும், ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும், சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும். ராஜஸ்தானின் விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் பாராட்டு
December 16th, 09:35 pm
ஆசியக் கோப்பை போட்டியில் பட்டம் வென்ற இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அணியின் அபரிமிதமான மன உறுதியையும் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.இலங்கை அதிபர் உடனிருந்த கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
December 16th, 01:00 pm
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அதிபர் திசநாயகவை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபராக உங்களின் முதலாவது வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபர் திசநாயகவின் வருகை எங்கள் உறவுகளில் புதிய உத்வேகத்தையும் சக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கூட்டாண்மைக்கான எதிர்கால தொலைநோக்கை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எங்கள் பொருளாதார கூட்டணியில் முதலீடு சார்ந்த வளர்ச்சி, இணைப்பு ஆகியவற்றுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். எங்கள் கூட்டணியின் முக்கிய தூண்களாக கட்டமைப்பு, டிஜிட்டல் மற்றும் எரிசக்தி இணைப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே மின்சாரத் தொகுப்பு இணைப்பு மற்றும் பல்பொருள் பெட்ரோலிய குழாய்கள் அமைப்பதை நோக்கி நாங்கள் பணியாற்றுவோம். சம்பூர் சூரிய மின்சக்தி திட்டம் துரிதப்படுத்தப்படும். இதற்கும் கூடுதலாக, இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு திரவ இயற்கை எரிவாயு வழங்கப்படும். இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற இரு தரப்பினரும் முயற்சி செய்யப்படும்.அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு நிறைவையொட்டி மக்களவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் ஆற்றிய உரை
December 14th, 05:50 pm
இது நம் அனைவருக்கும் – நமது சக நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தை நேசிக்கும் மக்களுக்கும் மிகுந்த பெருமைக்குரிய தருணமாகும். ஜனநாயகத்தின் திருவிழாவை மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாட வேண்டிய தருணம் இது. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் 75 ஆண்டுகாலப் பயணம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும் இந்தப் பயணத்தின் மையத்தில் நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தெய்வீகப் பார்வை உள்ளது, அவர்களின் பங்களிப்புகள் நாம் முன்னேறும்போது தொடர்ந்து நம்மை வழிநடத்துகின்றன. அரசியலமைப்புச் சட்டம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடுவது உண்மையிலேயே ஒரு முக்கியமான தருணமாகும். இந்தக் கொண்டாட்டத்தின் போது நாடாளுமன்றமும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியையும், இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு நிறைவையொட்டி மக்களவையில் சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
December 14th, 05:47 pm
அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு நிறைவையொட்டி மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்திற்குப் பதிலளித்து, பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். அவையில் உரையாற்றிய திரு மோடி, ஜனநாயகத்தின் இந்தத் திருவிழாவை நாம் கொண்டாடுவது இந்தியாவின் அனைத்து மக்களுக்கும், ஜனநாயகத்தை மதிக்கும் உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் பெருமை மற்றும் கவுரவம் அளிக்கும் விஷயமாகும் என்று குறிப்பிட்டார். நமது அரசியலமைப்பின் 75 ஆண்டுகால குறிப்பிடத்தக்க மற்றும் மகத்தான பயணத்தில் நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தொலைநோக்கு பார்வை மற்றும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், 75 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனநாயக விழாவை கொண்டாடுவதற்கான நேரம் இது என்று கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கொண்டாட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தங்கள் கருத்துக்களை வெளியிட்டது குறித்து திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து தெரிவித்தார்.ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024-ல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 11th, 05:00 pm
செங்கோட்டையில் இருந்து ஒரு விஷயத்தை நான் எப்போதும் குறிப்பிட்டு வந்திருக்கிறேன் என்பதை நீங்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அனைவரும் இணைவோம், அனைவரின் முயற்சியும் முக்கியம் என்று நான் கூறியுள்ளேன். இன்றைய பாரதம் அனைவரின் கூட்டு முயற்சிகளின் மூலமே துரித வேகத்தில் முன்னேறிச் செல்ல முடியும். இந்த கொள்கைக்கு இன்று ஒரு உதாரணம் அமைந்துள்ளது. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானின் இந்த பிரம்மாண்டமான இறுதிப் போட்டிக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களைப் போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுடன் இருக்கும் போதெல்லாம், புதிய நுண்ணறிவுகளைக் கற்றுக்கொள்ளவும், புரிந்து கொள்ளவும் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது. உங்கள் அனைவரிடமிருந்தும் எனக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. உங்களைப் போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு 21+ம் நூற்றாண்டு பாரதத்தைப் பார்ப்பதில் ஒரு தனித்துவமான கண்ணோட்டம் உள்ளது. அதனால்தான் உங்கள் தீர்வுகளும் தனித்துவமானவைகளாக இருக்கின்றன. இப்போது, இந்த ஹேக்கத்தானில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழுக்கள் என்ன பணியாற்றி வருகின்றன என்பதை அறிய நான் ஆர்வமாக உள்ளேன். உங்கள் கண்டுபிடிப்புகள் பற்றி அறிய மிகவும் ஆவலாக உள்ளேன். எனவே, ஆரம்பிக்கலாம்!நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024 பங்கேற்பாளர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்
December 11th, 04:30 pm
நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024-இன் பிரமாண்ட நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இளம் கண்டுபிடிப்பாளர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், செங்கோட்டையில் இருந்து ஆற்றிய உரைகளில் 'அனைவரும் இணைவோம்' என்ற நடைமுறையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதை நினைவுபடுத்தினார். நவீன இந்தியா ஹேக்கத்தானின் மாபெரும் இறுதிப் போட்டிக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன் என்று கூறிய பிரதமர், இளம் கண்டுபிடிப்பாளர்கள் மத்தியில் தான் இருக்கும்போது, புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும், புரிந்து கொள்ளவும் தனக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்று குறிப்பிட்டார். இளம் கண்டுபிடிப்பாளர்களிடம் இருந்து தாம் அதிகம் எதிர்பார்ப்பதாக தெரிவித்த பிரதமர், 21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவை வித்தியாசமாகப் பார்க்கும் தொலைநோக்குப் பார்வையை அவர்கள் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். எனவே, உங்கள் தீர்வுகளும் வேறுபட்டவை, ஒரு புதிய சவால் வரும்போது, நீங்கள் புதிய மற்றும் தனித்துவமான தீர்வுகளைக் கொண்டு வருகிறீர்கள் என்று திரு மோடி கூறினார். கடந்த காலத்தில் ஹேக்கத்தான் போட்டிகளில் பங்கேற்றதை நினைவுகூர்ந்த பிரதமர், ஹேக்கத்தான் போட்டிகளின் வெளியீடு குறித்து தான் ஒருபோதும் ஏமாற்றம் அடைந்ததில்லை என்றார். நீங்கள் எனது நம்பிக்கையை நீங்கள் வலுப்படுத்தியுள்ளீர்கள் என்று கூறிய அவர், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட தீர்வுகள் பல்வேறு அமைச்சகங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.“காங்கிரஸ் இந்தியாவின் கல்வி முறையை அழிவுக்குள் தள்ளியது, பிரதமர் மோடி அதை மீட்டெடுத்தார்”: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
December 10th, 05:30 pm
மத்திய கல்வி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் கல்வியறிவு விகிதத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் கிராமப்புற கல்வியறிவு விகிதம் 2023-24 இல் 77.5% ஆக கணிசமாக அதிகரித்துள்ளது, இது பெண்களின் கல்வியறிவு அதிகரிப்பால் உந்தப்பட்டது.ஹரியானா மாநிலம் பானிபட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
December 09th, 05:54 pm
ஹரியின் இருப்பிடம் ஹரியானா, இங்கே, உள்ள அனைவரும் 'ராம் ராம்' என ஒருவருக்கொருவர் மனமார வாழ்த்திக் கொள்கின்றனர்.எல்.ஐ.சியின் பீமா சகி திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
December 09th, 04:30 pm
மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் நிதி உள்ளடக்கம் குறித்த உறுதிப்பாட்டின் அடிப்படையில், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பீமா சகி திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஹரியானா மாநிலம் பானிபட்டில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, கர்னாலில் உள்ள மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். அப்போது உரையாற்றிய திரு மோடி, மகளிருக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கி இந்தியா மற்றொரு வலுவான அடியை எடுத்து வைக்கிறது என்று கூறினார். இன்று மாதத்தின் 9 வது நாளாக இருப்பது சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் எண் 9 நமது புனிதங்களில் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது மற்றும் நவராத்திரியின் போது வணங்கப்படும் நவ துர்க்கையின் ஒன்பது வடிவங்களுடன் தொடர்புடையது என்று அவர் கூறினார். இன்றைய தினம் பெண் சக்தியை வழிபடும் நாளாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.அகமதாபாத்தில் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரை
December 09th, 01:30 pm
மதிப்பிற்குரிய சுவாமி கௌதமானந்தா ஜி மகராஜ் அவர்களே, ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தின் மதிப்புமிக்க துறவிகளே, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய அனைத்து சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே, வணக்கம்!குஜராத்தில் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
December 09th, 01:00 pm
குஜராத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தா ஜி மகராஜ், ராமகிருஷ்ண மடம் மற்றும் அந்த இயக்கத்தின் துறவிகள், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உள்ளிட்ட அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். சாரதா தேவி, குருதேவ் ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோருக்கு திரு மோடி மரியாதை செலுத்தினார். ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்த மகாராஜின் பிறந்த நாளையொட்டி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024- இன் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
December 09th, 11:00 am
ராஜஸ்தான் ஆளுநர் திரு ஹரிபாவ் பகடே அவர்களே, மாநில முதலமைச்சர் திரு பஜன்லால் ஜி சர்மா அவர்களே, ராஜஸ்தான் அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தொழில்துறை நண்பர்களே, பல்வேறு நாடுகளின் தூதர்களே, தூதரகப் பிரதிநிதிகளே, பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களேராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
December 09th, 10:34 am
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024 மற்றும் ராஜஸ்தான் உலகளாவிய வர்த்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், ராஜஸ்தானின் வெற்றிப் பயணத்தில் இன்று மற்றுமொரு சிறப்பான நாள் என்று குறிப்பிட்டதோடு ஜெய்ப்பூரில் உள்ள பிங்க் சிட்டியில் நடைபெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சி மாநாடு 2024-ல் பங்கேற்ற தொழில்துறை மற்றும் வர்த்தகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், பிரதிநிதிகளுக்கு வாழ்த்தும் தெரிவித்தார். இந்தப் பிரம்மாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக ராஜஸ்தான் அரசையும் அவர் பாராட்டினார்.