புதுதில்லியில் உள்ள பாரத் டெக்ஸ் 2024-இல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 26th, 11:10 am
எனது அமைச்சரவை சகாக்களான பியூஷ் கோயல் அவர்களே, தர்ஷனா ஜர்தோஷ் அவர்களே, பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் மூத்த தூதர்களே, மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகளே, ஆடை மற்றும் ஜவுளி உலகின் கூட்டாளிகளே, இளம் தொழில்முனைவோர்களே, தாய்மார்களே, அன்பர்களே! பாரத மண்டபத்தில் நடந்த பாரத டெக்ஸில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! இன்றைய நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது. பாரதத்தின் இரண்டு பெரிய கண்காட்சி மையங்களான பாரத மண்டபம் மற்றும் யசோபூமி ஆகியவற்றில் ஒரே நேரத்தில் நடப்பதால் இது சிறப்பு வாய்ந்தது. 3,000 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள்... 100 நாடுகளைச் சேர்ந்த 3,000 வாங்குபவர்கள்... 40,000 க்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்கள்... இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.புதுதில்லியில் பாரத் டெக்ஸ் 2024-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்
February 26th, 10:30 am
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வுகளில் ஒன்றான பாரத் டெக்ஸ் 2024-ஐ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.Armed forces have taken India’s pride to new heights: PM Modi in Lepcha
November 12th, 03:00 pm
PM Modi addressed brave jawans at Lepcha, Himachal Pradesh on the occasion of Diwali. Addressing the jawans he said, Country is grateful and indebted to you for this. That is why one ‘Diya’ is lit for your safety in every household”, he said. “The place where jawans are posted is not less than any temple for me. Wherever you are, my festival is there. This is going on for perhaps 30-35 years”, he added.இமாச்சலப் பிரதேசத்தின் லெப்சாவில் தீரமிக்க வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார் பிரதமர்
November 12th, 02:31 pm
வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், தீபாவளி பண்டிகையின் ஒருங்கிணைப்பும், வீரர்களின் தைரியத்தின் எதிரொலிகளும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவொளியின் தருணம் என்று குறிப்பிட்டார். நாட்டின் கடைசி கிராமமான எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த கிராமங்கள் இப்போது முதல் கிராமமாகக் கருதப்படுகிறது. அங்கு வீரர்களுக்கு பிரதமர் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.புதுதில்லியில் 9வது ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
October 13th, 11:22 am
140 கோடி இந்தியர்கள் சார்பாக, ஜி-20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாட்டில் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். இந்த உச்சிமாநாடு, ஒரு விதத்தில், 'மஹாகும்ப்' அல்லது உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடாளுமன்ற நடைமுறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டமாகும். உங்களைப் போன்ற அனைத்துப் பிரதிநிதிகளும் வெவ்வேறு நாடாளுமன்றங்கள் செயல்படும் பாணியில் அனுபவம் பெற்றவர்கள். இத்தகைய வளமான ஜனநாயக அனுபவங்களைக் கொண்ட உங்கள் பாரதப் பயணம் எங்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.9வது ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
October 13th, 11:06 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள யஷோபூமியில் 9 வது ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டை (பி20) இன்று தொடங்கி வைத்தார். 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்திற்கான நாடாளுமன்றங்கள்' என்ற கருப்பொருளுடன் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் பரந்த கட்டமைப்பின் கீழ் இந்த உச்சி மாநாட்டை இந்திய நாடாளுமன்றம் நடத்துகிறது.9-வது ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சிமாநாட்டை (பி 20) அக்டோபர் 13 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
October 12th, 11:23 am
புதுதில்லியில் உள்ள யசோபூமியில் 9-வது ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சிமாநாட்டை (பி 20) பிரதமர் திரு. நரேந்திர மோடி அக்டோபர் 13 அன்று காலை 11 மணியளவில் தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் பரந்த கட்டமைப்பின் கீழ் இந்த உச்சிமாநாட்டை இந்திய நாடாளுமன்றம் நடத்துகிறது.ஜி 20 பல்கலைக்கழக இணைப்பு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
September 26th, 04:12 pm
நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் எனது இளம் நண்பர்களே! இன்று பாரத் மண்டபத்தில் இருப்பதை விட அதிகமானோர் இணையதளத்தில் மூலம் இணைந்துள்ளனர். ஜி-20 பல்கலைக்கழக இணைப்பு கனெக்ட் என்ற இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் வரவேற்கிறேன். அனைத்து இளைஞர்களையும் வாழ்த்துகிறேன்.ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் உரை
September 26th, 04:11 pm
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தியாவின் இளைஞர்களிடையே இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பற்றிய புரிதலை உருவாக்கவும், பல்வேறு ஜி20 நிகழ்வுகளில் அவர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜி20 பாரத் தலைமைத்துவத்தின் மகத்தான வெற்றி: தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை, இந்தியாவின் ஜி20 தலைமை: வசுதைவ குடும்பகம்; ஜி20 பல்கலைக்கழக இணைப்பு திட்டத்தின் தொகுப்பு; மற்றும் ஜி20 இல் இந்திய கலாச்சாரத்தை காட்சிப்படுத்துதல் என்ற 4 வெளியீடுகளையும் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 18th, 11:52 am
நமது நாட்டின் 75 ஆண்டுகால நாடாளுமன்றப் பயணத்தையும், புதிய அவைக்குள் நுழைவதற்கு முன்பு மீண்டும் அந்த உத்வேகமூட்டும் தருணங்களையும் நினைவுகூரும் இந்த சந்தர்ப்பத்தின் பின்னணியில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்திலிருந்து விடைபெறுகிறோம். சுதந்திரத்திற்கு முன்பு, இந்த சபை இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்று அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, இது நாடாளுமன்ற மாளிகை என்று அழைக்கப்பட்டது. இந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான முடிவு வெளிநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் எடுக்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் இந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்தில் எனது சக நாட்டு மக்களின் வியர்வை சிந்தப்பட்டது, இந்த உண்மையை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. எனது சக நாட்டு மக்களின் கடின உழைப்பு இதில் செலுத்தப்பட்டது, அந்த பணமும் எனது நாட்டு மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது என்று பெருமையுடன் கூறுவோம்.நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மக்களவையில் பிரதமரின் உரை
September 18th, 11:10 am
இதில் அவையில் உரையாற்றிய பிரதமர், புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடத்திற்கு நடவடிக்கைகள் மாற்றப்படுவதற்கு முன்பு, இந்தியாவின் 75 ஆண்டு கால நாடாளுமன்றப் பயணத்தை நினைவுகூர இன்று ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். பழைய நாடாளுமன்ற கட்டடம் குறித்துப் பேசிய பிரதமர், இந்த கட்டடம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலாக செயல்பட்டதாகவும், சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய நாடாளுமன்றமாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த கட்டடத்தை கட்டுவதற்கான முடிவு வெளிநாட்டு ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்டிருந்தாலும், இந்தியர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பணம் ஆகியவை தான் இந்தக் கட்டடத்தில் பயன்படுத்தப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார். 75 ஆண்டுகால பயணத்தில், அனைவரது மரபுகள் மற்றும் பாரம்பரியங்களில் மிகச் சிறந்தவற்றை இந்த அவை உருவாக்கியுள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறினார். நாம் புதிய கட்டடத்திற்கு மாறினாலும் இந்தப் பழைய கட்டடம் வரும் தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் இது இந்திய ஜனநாயகப் பயணத்தின் பொன்னான அத்தியாயம் என்றும் அவர் கூறினார்.நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் பிரதமரின் அறிக்கையின் தமிழாக்கம்
September 18th, 10:15 am
சந்திரயான்-3- நிலவுப் பயண வெற்றியால், நமது மூவர்ணக் கொடி விண்ணில் பட்டொளி வீசிப் பறக்கிறது. சிவசக்தி புள்ளி புதிய உத்வேகத்தின் மையமாக மாறியுள்ளது, மேலும் திரங்கா புள்ளி நம்மை பெருமையால் நிரப்புகிறது. உலகில் இத்தகைய சாதனைகள் நிகழும்போது, அவை நவீனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்து காணப்படுகின்றன. இந்த திறனை உலகிற்குக் காட்டும்போது, அது இந்தியாவின் வாயிலுக்கு ஏராளமான சாத்தியக்கூறுகளையும் வாய்ப்புகளையும் கொண்டு வருகிறது. ஜி 20 மாநாட்டின் வரலாறு காணாத வெற்றி, உலகெங்கிலும் உள்ள தலைவர்களை 60 க்கும் மேற்பட்ட இடங்களில் வரவேற்றது, சிந்தனை அமர்வுகள், உண்மையான உணர்வில் கூட்டாட்சி கட்டமைப்பின் வாழ்க்கை அனுபவம், ஜி 20 என்பதே நமது பன்முகத்தன்மை மற்றும் தனித்துவத்தின் கொண்டாட்டமாக மாறியது. ஜி 20 அமைப்பில் உலகளாவிய தெற்கின் குரலாக இருப்பதில் இந்தியா எப்போதும் பெருமை கொள்ளும். ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கு நிரந்தர உறுப்பினர் உரிமை மற்றும் ஒருமித்த ஜி20 பிரகடனம் போன்ற முன்னேற்றங்கள் இந்தியாவுக்கு ஒளிமயமான எதிர்காலத்தைக் குறிக்கின்றன.யஷோபூமியை நாட்டுக்கு அர்ப்பணித்து, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 17th, 06:08 pm
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் இந்த அற்புதமான கட்டிடத்தில் கூடியுள்ள அன்பான சகோதர சகோதரிகளே, 70 க்கும் மேற்பட்ட நகரங்களிலிருந்து இந்த திட்டத்தில் இணைந்த எனது சக குடிமக்களே, இதர சிறப்பு விருந்தினர்களே எனது குடும்ப உறுப்பினர்களே!துவாரகா செக்டார் 21ல் இருந்து ‘யஷோபூமி துவாரகா செக்டார் 25’ வரை விமானநிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் சேவை விரிவாக்கத்தை பிரதமர் திறந்து வைத்தார்
September 17th, 05:01 pm
யஷோபூமி துவாரகா செக்டார் 25ல், துவாரகா செக்டார் 21ல் இருந்து புதிய மெட்ரோ நிலையம் ‘யஷோபூமி துவாரகா செக்டர் 25’ வரை தில்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் சேவையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். புதிய மெட்ரோ நிலையம் மூன்று சுரங்கப்பாதைகளைக் கொண்டிருக்கும் - 735மீ நீளமுள்ள சுரங்கப்பாதை நிலையத்தை கண்காட்சி அரங்குகள், மாநாட்டு மையம் மற்றும் மத்திய அரங்குடன் இணைக்கிறது; துவாரகா விரைவுச்சாலையின் குறுக்கே நுழைவதை/வெளியேறுவதை இணைக்கும் மற்றொன்று; மூன்றாவது, மெட்ரோ நிலையத்தை ‘யஷோபூமி’யின் எதிர்கால கண்காட்சி அரங்குகளின் லாபியுடன் இணைக்கிறது.இந்தியா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டமான யசோபூமியை புதுதில்லியில் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
September 17th, 12:15 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள துவாரகாவில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டமான 'யசோபூமி'யை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். 'யசோபூமி' ஒரு அற்புதமான மாநாட்டு மையம், பல கண்காட்சி அரங்குகள் மற்றும் பிற வசதிகளைக் கொண்டுள்ளது. விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பாரம்பரிய கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான 'பி.எம் விஸ்வகர்மா திட்டத்தை' அவர் தொடங்கி வைத்தார். பிரதமர் விஸ்வகர்மா லோகோ, டேக்லைன் மற்றும் போர்ட்டலையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தனிப்பயனாக்கப்பட்ட முத்திரைத் தாள், உபகரண கையேடு மற்றும் வீடியோவையும் அவர் வெளியிட்டார். 18 பயனாளிகளுக்கு விஸ்வகர்மா சான்றிதழ்களை பிரதமர் வழங்கினார்.புதுதில்லியில் உள்ள துவாரகாவில் 'யஷோபூமி' என்று அழைக்கப்படும் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டத்தை செப்டம்பர் 17 அன்று பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
September 15th, 04:37 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி 17.09.2023 அன்று காலை 11 மணிக்கு புதுதில்லியில் உள்ள துவாரகாவில் 'யஷோபூமி' என்று அழைக்கப்படும் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் (ஐ.ஐ.சி.சி) முதல் கட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தில்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையை துவாரகா செக்டார் 21 முதல் புதிய மெட்ரோ நிலையம் 'யஷோபூமி துவாரகா செக்டார் 25' வரை நீட்டிப்பதற்கான பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.