கர்நாடகாவின் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள கோடேகால் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டல் மற்றும் திறப்பு விழாவில் பிரதமரின் உரை
January 19th, 12:11 pm
கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட் அவர்களே, முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை அவர்களே, எனது அமைச்சரவை நண்பர் திரு பகவந்த் கூபா அவர்களே, கர்நாடக மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர சகோதரிகளே!கர்நாடகாவில் கோடேகால் பகுதியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பல்வேறு திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
January 19th, 12:10 pm
பிரதமர் கர்நாடகாவின் கோடேகால், யாத்கிர் போன்ற பகுதிகளில் இன்று (19.01.2023) பல்வேறு திட்டங்களுக்கு குறிப்பாக நீர்ப்பாசனம், குடிநீர் மற்றம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் யாத்கிர் கிராமங்களுக்கான குடிநீர் விநியோகத் திட்டம், பதாதாலிருந்து மரதாகி எஸ் அந்தோலா என்எச் 150சி பசுமை நெடுஞ்சாலையில் 65.5 கிலோ மீட்டர் அளவிலான 6 வழிச்சாலைத் திட்டம், நாராயண்பூர் இடது கரை கால்வாய் விரிவாக்கத்தின் கீழ் புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.