ஜியாமென் -ல் வளரும் சந்தைகளும் & வளரும் நாடுகளும் என்பதன் மீதான பேச்சுவார்த்தை” என்ற தலைப்பில் பிரதமர் பேசினார்
September 05th, 09:22 am
ஜியாமென் -ல் வளரும் சந்தைகளும் & வளரும் நாடுகளும் என்பதன் மீதான பேச்சுவார்த்தை” என்ற தலைப்பில் பிரதமர் பேசினார். நிகழ்ச்சியில் பேசிய மோடி, “அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சி” என்பது தான் இந்திய வளர்ச்சியின் அடிப்படை ஆகும் என குறிப்பிட்டார். இந்தியா வளர்ச்சிக்கான தனது சொந்த குறிகோளை செயாலாற்றுவதுடன், வளர்ந்து வரும் சக நாடுகளுடன் நீண்ட கால கூட்டாளித்துவத்தையும் கொண்டுள்ளது என பிரதமர் மேலும் கூறினார்.ஜியாமென்-ல் 9வது பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
September 04th, 04:19 pm
ஜியாமென்-ல் 9வது பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, உறுப்பு நாடுகளிடையே வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் எனக் கூறினார். அன்னிய நேரடி முதலீடு முன்பு எப்போதும் இல்லாத வகையில் 40% அதிகரித்து உலகின் மிகச்சிறந்த வெளிப்படையான பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறி வருவதாக பிரதமர் கூறினார்.சீனாவின் ஜியாமென்னில் நடைபெறும் 9வது பிரிக்ஸ் மாநாட்டின் போது நடந்த பிரதமரின் சந்திப்புகள்
September 04th, 12:39 pm
மாநாட்டின் போது, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தினார்பிரிக்ஸ் தலைவர்களின் ஜியாமென் பிரகடனம்
September 04th, 12:18 pm
9வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரிக்ஸ் தலைவர்களின் பிரகடனத்தில் உறுப்புநாடுகளிடையே நடைமுறையில் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நியாயமான மற்றும் சீரான சர்வதேச பொருளாதார நிலைமையை உருவாக்க உலகளாவிய பொருளாதார நடைமுறைகளில் ஒத்துழைப்பையும் தகவல் பரிமாற்றத்தையும் மேம்படுத்துவது குறித்து அதில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச மற்றும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையையும் இது வலியுறுத்தியுள்ளது.பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
September 04th, 09:46 am
பிரிக்ஸ் அமைப்பு ஒத்துழைப்பிற்கான வலிமையான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என்று கூறிய பிரதமர், நிச்சயமற்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருந்த உலகின் நிலைதன்மையையும் வளர்ச்சியையும் ஏற்படுத்த பங்காற்றியுள்ளது எனக் குறிப்பிட்டார். வேளாண்மை, எரிசக்தி, விளையாட்டு, சுற்றுசூழல் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் மேலும் ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.பிரதமர் மோடி சீனாவின் ஜியாமென் சென்றடைந்துள்ளார்
September 03rd, 06:12 pm
பிரதமர் மோடி சீனாவின் ஜியாமென் சென்றடைந்துள்ளார். அவர் அங்கு நடைபெறும் 9வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வார். அவரது இந்த பயணத்தின் போது, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் அவர் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்.