அசாம் மாநிலம் குவஹாத்தியில் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் பிரதமர் ஆற்றிய உரை

February 19th, 08:42 pm

அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, எனது அமைச்சரவை சகா திரு அனுராக் தாக்கூர் அவர்களே, அசாம் அரசின் அமைச்சர்களே, சிறப்பு விருந்தினர்களே, நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள திறமையான இளம் விளையாட்டு வீரர்களே,

வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் பிரதமர் உரையாற்றினார்

February 19th, 06:53 pm

வடகிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களில் நடைபெறும் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார். கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியின் சின்னமான வண்ணத்துப்பூச்சி வடிவில் உள்ள ‘அஷ்டலட்சுமி’யை பிரதமர் எடுத்துரைத்தார். வடகிழக்கு மாநிலங்களை 'அஷ்டலட்சுமி' என்று அடிக்கடி அழைக்கும் பிரதமர், இந்த விளையாட்டுகளில் ஒரு பட்டாம்பூச்சியை சின்னமாக இடம் பெறச் செய்வது, வடகிழக்கின் அபிலாஷைகள் எவ்வாறு புதிய சிறகுகளைப் பெறுகின்றன என்பதற்கான அடையாளமாகும் என்று கூறினார்.

கோவாவில் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 26th, 10:59 pm

கோவா ஆளுநர் திரு. பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை அவர்களே, முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்களே, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்களே, மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த எனது பிற சகாக்களே, மேடையில் உள்ள பிரதிநிதிகளே, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா அவர்களே, அனைத்து வீரர்கள், உதவி ஊழியர்கள், பிற அதிகாரிகள் மற்றும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்துள்ள இளம் நண்பர்களே…, இந்திய விளையாட்டுகளின் பிரமாண்ட பயணம் இப்போது கோவாவை அடைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வண்ணங்களும், உற்சாகமும் உள்ளது. கோவாவின் காற்றில் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது. 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

கோவாவில் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் தொடங்கி வைத்தார்

October 26th, 05:48 pm

கோவாவின் மார்கோவாவில் உள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் 28 இடங்களில் 43-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.

வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 23rd, 02:11 pm

உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, மேடையில் அமர்ந்துள்ள உத்தரப்பிரதேச அரசின் அமைச்சர்களே, விளையாட்டு உலகின் சிறப்பு விருந்தினர்களே மற்றும் காசியைச் சேர்ந்த எனது அன்பான குடும்ப உறுப்பினர்களே!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் திரு.நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார்

September 23rd, 02:10 pm

வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 104 வது அத்தியாயத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 27th, 11:30 am

எனதருமை குடும்பத்தாரே, வணக்கம். மனதின் குரலின் ஆகஸ்ட் மாதப் பகுதியில் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நிறைவான வரவேற்பை அளிக்கிறேன். இப்படி முன்பு எப்போதாவது நடந்திருக்கிறதா என்று நினைவில் இல்லை, அதாவது மழைக்கால மாதங்களில் இருமுறை மனதின் குரல் நிகழ்ச்சி இடம் பெற்றதாகத் தெரியவில்லை, ஆனால் இந்த முறை அப்படித்தான் நடக்க இருக்கிறது. மழைக்காலம் அதாவது மஹாசிவனுடைய மாதம், உற்சவம் மற்றும் உல்லாசம் நிறைந்த காலம். சந்திரயானுடைய வெற்றியின் கொண்டாட்டம் இந்த உற்சவச் சூழலுக்கு பல பங்கு உல்லாசத்தைச் சேர்த்திருக்கிறது. சந்திரயான் சந்திரனுக்குப் பயணித்து மூன்று நாட்களுக்கும் கூடுதலாக ஆகியிருக்கிறது. இந்த வெற்றி எத்தனை பெரியது என்றால், இதைப்பற்றி நாம் எத்தனை விவாதித்தாலும், அது குறைவே. நான் இன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் வேளையிலே, என்னுடைய பழைய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது. …….

சீனாவில் நடைபெற்ற 31-வது உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்களின் சிறந்த செயல் திறனுக்குப் பிரதமர் பாராட்டு

August 08th, 08:37 pm

31-வது உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் 11 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள இந்திய வீரர்களின் செயல்திறனைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். 1959-ம் ஆண்டில் இந்த விளையாட்டுப் போட்டி தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவின் மிகச் சிறந்த செயல்திறன் இது என்று கூறியுள்ள பிரதமர், இந்த வெற்றிக்காக விளையாட்டு வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.