அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.ஜி-7 உச்சிமாநாட்டின் மக்கள் தொடர்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 14th, 09:54 pm
முதலாவதாக இந்த உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுத்ததற்காகவும் நமக்கு அன்பான விருந்து உபசாரம் அளித்ததற்காகவும் பிரதமர் மெலோனிக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதிபர் ஓலஃப் ஷோல்ஸ்-க்கு நான் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். ஜி-7 உச்சிமாநாடு தனித்துவமானது, வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்தக் குழுவின் 50-வது ஆண்டின் ஜி-7 நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.ஜி7 உச்சிமாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் பகுதி குறித்த பரப்புரை அமர்வில் பிரதமர் பங்கேற்பு
June 14th, 09:41 pm
இத்தாலியின் அபுலியாவில் இன்று நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் பகுதி குறித்த பரப்புரை கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். குழுவின் 50-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் வாழ்த்து தெரிவித்தார்.'தாயின் பெயரில் ஒரு மரம்' இயக்கத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
June 05th, 02:21 pm
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி தாயின் பெயரில் ஒரு மரம் என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார். தில்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் அரச மரக்கன்றை திரு மோடி நட்டார். நமது புவியின் நலனுக்காக அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா பல கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு, நாடு முழுவதும் வனப்பகுதியை அதிகரிக்க வழிவகுத்தது என்று தெரிவித்தார். நீடித்த வளர்ச்சியை நோக்கிய நமது முயற்சிக்கு இது மிகப்பெரியது என்று திரு மோடி மேலும் கூறினார்உலக சுற்றுச்சூழல் தினம் 2023 நிகழ்வையொட்டி காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 05th, 03:00 pm
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி உங்கள் அனைவருக்கும், நமது நாட்டினருக்கும், உலகின் மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கைவிடும் இயக்கம் என்பது இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தின கருப்பொருளாகும், உலகளாவிய முன்முயற்சிக்கு முன்னதாகவே, இந்தியா இந்த திசையில் கடந்த 4-5 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றுவதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கான பணியை 2018-ல் இரண்டு நிலைகளில் இந்தியா தொடங்கியது. ஒருபக்கம், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நாம் தடை செய்துள்ளோம், மறுபக்கம் பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சியை நாம் கட்டாயமாக்கியுள்ளோம். இதன் காரணமாக இந்தியாவில் உருவாகும் மொத்த வருடாந்திர பிளாஸ்டிக் கழிவுகளில் 75 சதவீதமாக உள்ள சுமார் 30 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது கட்டாயமாகியுள்ளது. இந்த வரம்புக்குள் சுமார் 10 ஆயிரம் உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும், வணிக நிறுவனங்களும் வந்துள்ளன.உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டிய சந்திப்பில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்
June 05th, 02:29 pm
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி உலகின் அனைத்து நாடுகளுக்கும் தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தின கருப்பொருளான, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கைவிடும் இயக்கம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்தியா இந்த திசையில் கடந்த 4-5 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கான பணியை 2018-ல் இரண்டு நிலைகளில் இந்தியா தொடங்கியது என்று பிரதமர் தெரிவித்தார். “ஒருபக்கம், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நாம் தடைசெய்துள்ளோம், மறுபக்கம் பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சியை நாம் கட்டாயமாக்கியுள்ளோம்” என்று அவர் கூறினார். இதன் காரணமாக இந்தியாவில் உருவாகும் மொத்த வருடாந்திர பிளாஸ்டிக் கழிவுகளில் 75 சதவீதமாக உள்ள சுமார் 30 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது கட்டாயமாகியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இந்த வரம்புக்குள் சுமார் 10 ஆயிரம் உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும், வணிக நிறுவனங்களும் வந்துள்ளன.ஜெர்மனியில் ஜி7 உச்சி மாநாட்டில் “ஒன்றாக மேலும் வலிமையடைவோம்: உணவுப் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல்” குறித்த கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 27th, 11:59 pm
உலகளாவிய பதற்றமான சூழ்நிலையில் நாம் இன்று சந்திக்கிறோம். இந்தியா எப்போதும் அமைதிக்கு ஆதரவாக இருந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையிலும், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக பாதையையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த புவிசார் அரசியல் பதற்றத்தின் தாக்கம் ஐரோப்பாவில் மட்டும் அல்ல. எரிசக்தி மற்றும் உணவு தானியங்களின் விலை உயர்வு அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. குறிப்பாக, வளரும் நாடுகளின் எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த சவாலான நேரத்தில், தேவைப்படும் பல நாடுகளுக்கு இந்தியா உணவு தானியங்களை வழங்கியுள்ளது. கடந்த சில மாதங்களில் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியாக சுமார் 35,000 டன் கோதுமையை அனுப்பியுள்ளோம். மேலும், அங்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகும், நிவாரணப் பொருட்களை வழங்கிய முதல் நாடு இந்தியாதான். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய எங்களது அண்டை நாடான இலங்கைக்கும் நாங்கள் உதவுகிறோம்.ஜெர்மனியில் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் ‘மேம்பட்ட எதிர்காலத்திற்கு முதலீடு செய்தல்: பருவநிலை, எரிசக்தி, சுகாதாரம்’ என்ற அமர்வில் பிரதமரின் உரை
June 27th, 07:47 pm
உலக நாடுகளின் வளர்ச்சி இலக்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இடையே அடிப்படை மோதல் இருப்பதாக துரதிஷ்டவசமாக கருதப்படுகிறது. ஏழை நாடுகளும், ஏழை மக்களும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாக மற்றொரு தவறான கருத்தும் உள்ளது. ஆனால் ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தியா இந்தக்கருத்தை முற்றிலும் மறுக்கிறது. பழங்கால இந்தியா, அபரிமிதமான செழிப்பைக் கண்டுள்ளது; அதைத்தொடர்ந்து பல ஆண்டுகள் அடிமைப் போக்கையும் நாங்கள் சகித்துக் கொண்டிருந்தோம்; தற்போது ஒட்டுமொத்த உலகிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதாரமாக சுதந்திர இந்தியா திகழ்கிறது. இந்தக் காலகட்டத்தில் சுற்றுச்சூழல் சார்ந்த உறுதிப்பாட்டை இந்தியா இம்மியளவும் விட்டுத் தரவில்லை. உலக மக்கள் தொகையில் 17% பேர் இந்தியாவில் வசிக்கிறார்கள். இருந்தபோதும் சர்வதேச கரியமிலவாயு வெளியிடுவதில் எங்களது பங்களிப்பு வெறும் 5% மட்டுமே. இயற்கையுடன் இணைந்த கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட எங்களது வாழ்க்கைமுறையே இதற்கு முக்கிய காரணம்.லைஃப் இயக்கத்தின் துவக்கம் விழாவில் பிரதமரின் உரை
June 05th, 07:42 pm
இன்றைய தருணமும், தேதியும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளன. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை என்ற லைஃப் இயக்கத்தை நாம் துவக்குகிறோம். “ஒரே ஒரு பூமி” என்பது இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தின் முழக்கமாகும். “இயற்கையுடன் இணைந்த நிலையான வாழ்வு” என்பது அதன் மையப் பொருள்.PM launches global initiative ‘Lifestyle for the Environment- LiFE Movement’
June 05th, 07:41 pm
Prime Minister Narendra Modi launched a global initiative ‘Lifestyle for the Environment - LiFE Movement’. He said that the vision of LiFE was to live a lifestyle in tune with our planet and which does not harm it.‘மண்ணைக் காப்போம் இயக்கம்‘ குறித்த நிகழ்ச்சியில் பிரதமர் 5 ஜுன் அன்று கலந்து கொள்கிறார்‘
June 04th, 09:37 am
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விஞ்ஞான் பவனில், 5 ஜுன் அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.Start-ups are reflecting the spirit of New India: PM Modi during Mann Ki Baat
May 29th, 11:30 am
During Mann Ki Baat, Prime Minister Narendra Modi expressed his joy over India creating 100 unicorns. PM Modi said that start-ups were reflecting the spirit of New India and he applauded the mentors who had dedicated themselves to promote start-ups. PM Modi also shared thoughts on Yoga Day, his recent Japan visit and cleanliness.உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
June 05th, 11:05 am
பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகமும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுதல் அமைச்சகமும் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த உலகச் சுற்றுச்சூழல் தின நிகழ்வில் பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வின் போது பூனாவில் இருந்து கலந்து கொண்ட விவசாயி ஒருவரிடம் பிரதமர் கலந்துரையாடினார். அப்போது அந்த விவசாயி இயற்கை முறை விவசாயம் மற்றும் வேளாண்மையில் உயிரி எரிபொருளின் பயன்பாடு குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.உலகச் சுற்றுச்சூழல் தின நிகழ்வில் பிரதமர் உரை
June 05th, 11:04 am
பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகமும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுதல் அமைச்சகமும் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த உலகச் சுற்றுச்சூழல் தின நிகழ்வில் பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வின் போது பூனாவில் இருந்து கலந்து கொண்ட விவசாயி ஒருவரிடம் பிரதமர் கலந்துரையாடினார். அப்போது அந்த விவசாயி இயற்கை முறை விவசாயம் மற்றும் வேளாண்மையில் உயிரி எரிபொருளின் பயன்பாடு குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.ஜூன் 5 அன்று நடைபெற உள்ள உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற உள்ளார்
June 04th, 07:39 pm
2021 ஜூன் 5 அன்று நடைபெற உள்ள உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகின்றன.12-ம் வகுப்பு மாணவர்கள், அவர்களது பெற்றோருடன் பிரதமர் மேற்கொண்ட திடீர் கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள்
June 03rd, 09:42 pm
பிரதமர் மோடி; நான் இப்போதுதான் வந்திருக்கிறேன். ஆனால், நான் உங்களுக்கு இடையூறு செய்ய விரும்பவில்லை. தேர்வு குறித்த பதற்றம் இல்லாததால், நீங்கள் மகிழ்ச்சியான சூழலில் உள்ளீர்கள். நீங்கள் எல்லோம் எப்படி இருக்கிறீர்கள்?கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மெய்நிகர் அமர்வில் எதிர்பாராத வகையில் பிரதம மந்திரி கலந்து கொண்டார்
June 03rd, 09:41 pm
கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் வகுப்பில் கலந்து கொள்வதற்காக 12ஆம் வகுப்பு மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கூடியிருந்தனர். எந்தவிதமான முன்னேற்பாடும் இன்றி ஆச்சரியப்படத்தக்க வகையில் திடீரென பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி இந்த அமர்வில் கலந்து கொண்டார். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ரத்து செய்ததன் அடிப்படையில் கல்வி அமைச்சகம் இந்த அமர்வை ஏற்பாடு செய்திருந்தது. தங்களுக்கு இடையில் பிரதம மந்திரியை பார்த்த மாணவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.PM reiterates the pledge to preserve the planet’s rich biodiversity
June 05th, 12:20 pm
On the occasion of World Environment Day, the Prime Minister, Shri Narendra Modi in a tweet said, “On #World Environment Day, we reiterate our pledge to preserve our planet’s rich biopersity.தூய்மையான கிரகத்திற்கான தமது உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்
June 05th, 09:45 am
உலக சுற்றுச்சூழல் தினமான இன்று தூய்மையான கிரகத்திற்கான தமது உறுதிப்பாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.சமூக வலைதள மூலை ஜூன் 6, 2018
June 06th, 07:23 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.