காட்டாட்சி முறையை அனுமதிக்க மாட்டோம் என்று பிகார் மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்: பிரதமர் மோடி

November 01st, 04:01 pm

பிகார் மாநிலம் பாகாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ``மாநிலத்தில் காட்டாட்சியை அனுமதிக்க மாட்டோம் என பிகார் மக்கள் முடிவு செய்துவிட்டதை முதல்கட்ட வாக்குப் பதிவின் போக்கு தெளிவாகக் காட்டியுள்ளது'' என்று கூறினார். இப்போதைய தேர்தலில், நிதிஷ்குமார் தலைமையில் நிலையான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசைத் தேர்வு செய்ய மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

பிகாரில் சாப்ரா, சமஸ்டிபூர், மோட்டிஹரி, பாகா ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார்

November 01st, 03:54 pm

தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்த பிரதமர் மோடி, சாப்ரா, சமஸ்டிபூர், மோட்டிஹரி மற்றும் பாகாவில் இன்று பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார். ``பிகாரில் அடுத்த அரசுக்கும் நிதிஷ் பாபு தான் தலைமை ஏற்பார் என்பது முதலாவது கட்ட வாக்குப் பதிவிலேயே தெளிவாகிவிட்டது. எதிர்க்கட்சிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளன. அவர்களுடைய வெறுப்பை பிகார் மக்கள் மீது காட்ட வேண்டாம் என்று அவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.''

பிகாரின் சிறப்பு வாய்ந்த தொழிற்சாலைகளும், சர்க்கரை ஆலைகளும் காட்டாட்சி முறை காரணமாக மூடப்பட்டன: பிரதமர்

November 01st, 02:55 pm

மோட்டிஹரியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர், காங்கிரஸ்-ஆர்.ஜே.டி. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ``காட்டாட்சி முறை'' மீண்டும் வந்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். பிகாரில் சிறப்பு வாய்ந்தவையாக இருந்த அனைத்துத் தொழிற்சாலைகளும், சர்க்கரை ஆலைகளும் காட்டாட்சி முறையால் மூடப்பட்டன என்று அவர் கூறினார்.

பீகாரில் ‘இரட்டை இளவரசர்களை’’ தேசிய ஜனநாயக கூட்டணி முறியடிக்கும்: பிரதமர் மோடி

November 01st, 10:50 am

சப்ராவில் நடந்த தேர்தல் பேரணியில் மெகா கூட்டணி பற்றி விமர்சித்த பிரதமர் மோடி, சிறந்த எதிர்காலத்திற்கு, ‘‘சுயநல’’ சக்திகளை விரட்ட வேண்டும் என மக்களிடம் வலியுறுத்தினார். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதை, சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு சுட்டிக் காட்டுகிறது என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

PM Modi addresses Public Meeting in Surat, Gujarat

December 07th, 04:30 pm

Addressing a public meeting in Surat, Prime Minister Narendra Modi hit out at the Congress for their mis-governance in the country for over fifty years. Shri Narendra Modi stated that the BJP’s only agenda was development.

PM’s interaction through PRAGATI

March 23rd, 06:09 pm