Tribal society is the one that led the fight for centuries to protect India's culture and independence: PM Modi
November 15th, 11:20 am
PM Modi addressed Janjatiya Gaurav Diwas, emphasizing India's efforts to empower tribal communities, preserve their rich heritage, and acknowledge their vital role in nation-building.பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
November 15th, 11:00 am
பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் மாநிலம் ஜமுயில் இன்று ரூ.6,640 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பழங்குடியினர் தின நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோரைப் பிரதமர் வரவேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சியில் இணைந்த எண்ணற்ற பழங்குடியின சகோதர சகோதரிகளையும் பிரதமர் வரவேற்றார். கார்த்திகை பூர்னிமா, தேவ் தீபாவளி, ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் 555-வது பிறந்த நாள் ஆகியவை அனுசரிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, அதற்காக இந்திய குடிமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் நாள் என்பதால் குடிமக்களுக்கு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் கூறினார். இந்தியக் குடிமக்கள், குறிப்பாக பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இன்றைய பழங்குடியினர் கௌரவ தினத்திற்கு முன்னோட்டமாக கடந்த 3 நாட்களில் தூய்மை இயக்கம் ஜமுயில் நடைபெற்றது என்று பிரதமர் குறிப்பிட்டார். தூய்மை இயக்கத்திற்காக, ஜமுய் நிர்வாகம், குடிமக்கள், குறிப்பாக பெண்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.18-வது கிழக்காசிய உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 07th, 01:28 pm
கிழக்காசிய உச்சிமாநாட்டில் மீண்டும் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதிபர் திரு விடோடோவின் சிறப்பான தலைமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இக்கூட்டத்தில் பார்வையாளராக கிழக்கு தைமூர் பிரதமர் திரு சனானா குஸ்மாவோ அவர்களை நான் அன்புடன் வரவேற்கிறேன்.20-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு மற்றும் 18-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
September 07th, 11:47 am
ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில், ஆசியான்-இந்தியா விரிவான திட்டமிடல் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், அதன் எதிர்காலப் பாதையை வகுப்பது குறித்தும் பிரதமர் ஆசியான் நாடுகளின் கூட்டாளிகளுடன் விரிவான விவாதங்களை நடத்தினார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆசியான் மையத்தை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், இந்தியாவின் இந்தோ-பசிபிக் பெருங்கடலின் முன்முயற்சி மற்றும் இந்தோ-பசிபிக் குறித்த ஆசியான் கண்ணோட்டம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை எடுத்துரைத்தார். ஆசியான்-இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த மறுஆய்வை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.20-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 07th, 10:39 am
மேதகு அதிபர் ஜோகோ விடோடோ அவர்களே,15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு
August 23rd, 03:30 pm
15-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை பிரமாண்டமாக ஏற்பாடு செய்ததற்காகவும், எங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காகவும் எனது அன்பு நண்பர் அதிபர் ராமஃபோசாவுக்கு நான் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமரின் காணொலி உரை
August 18th, 02:15 pm
இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் சார்பாக, இந்தியாவிற்கும், எனது சொந்த மாநிலமான குஜராத்திற்கும் உங்களை மிகவும் அன்புடன் வரவேற்கிறேன். உங்களை வரவேற்பதில் என்னுடன் 2.4 மில்லியன் மருத்துவர்கள், 3.5 மில்லியன் செவிலியர்கள், 1.3 மில்லியன் துணை மருத்துவ பிரிவினர், 1.6 மில்லியன் மருந்தாளுநர்கள் மற்றும் இந்தியாவில் சுகாதாரத் துறையில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான மற்றவர்கள் உள்ளனர்.ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் உரை
August 18th, 01:52 pm
குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸை இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் அழைப்பு
August 16th, 02:39 pm
உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸை இந்தியாவிற்கு வருகை தருமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். தனது கடைசி பயணத்தின் போது தலைமை இயக்குநரை 'துளசி பாய்' என்ற பெயரில் அழைத்தது போல், திரு மோடி, டாக்டர் டெட்ரோசை அப்பெயரிலேயே அழைத்தார்.கோவாவில் 9-வது உலக ஆயுர்வேத மாநாட்டின் நிறைவுநாள் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 11th, 04:15 pm
அழகிய நிலப்பரப்பான கோவாவில் நடைபெறும் உலக ஆயுர்வேத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திரண்டுள்ள இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். உலக ஆயுர்வேத மாநாட்டின் வெற்றிக்காக உங்கள் அனைவருக்கும் நான் மனப்பூர்வமாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நடப்பு ஆண்டு ஜி-20 அமைப்பு கூட்டம் இந்தியாவில் நடைபெறுவதுடன், அதற்கு தலைமையும் தாங்குகிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதே இந்த ஆண்டின் ஜி-20 மாநாட்டின் கருப்பொருளாகும். உலக ஆயுர்வேத மாநாட்டில் உலகம் முழுவதுக்குமான சுகாதாரம் குறித்த பேச்சுக்களுடன் இந்த கருப்பொருள் குறித்தும் நீங்கள் விவாதித்தீர்கள். ஆயுர்வேத மருத்துவ முறையை பாரம்பரிய மருத்துவ முறையாக உலகின் 30க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் ஒன்றிணைந்து மேலும் அதிக நாடுகள் ஆயுர்வேத முறையை அங்கீகரிக்கும் வகையில் எடுத்துச்செல்ல வேண்டும்.PM addresses valedictory function of 9th World Ayurveda Congress
December 11th, 04:00 pm
PM Modi addressed the valedictory function of the 9th World Ayurveda Congress. He also inaugurated three National Ayush Institutes. Dwelling upon the philosophical underpinnings of Ayurveda the PM said, Ayurveda goes beyond treatment and promotes wellness, as he pointed out that the world is shifting towards this ancient way of life after going through various changes in trends.Our youth should be skilled, confident and practical, NEP is preparing the ground for this: PM Modi
July 07th, 02:46 pm
PM Modi inaugurated Akhil Bhartiya Shiksha Samagam on implementation of the National Education Policy in Varanasi. The Prime Minister said that the basic premise of the National Education Policy was to take education out of narrow thinking and connect it with the modern ideas of the 21st century.PM inaugurates Akhil Bhartiya Shiksha Samagam on implementation of NEP
July 07th, 02:45 pm
PM Modi inaugurated Akhil Bhartiya Shiksha Samagam on implementation of the National Education Policy in Varanasi. The Prime Minister said that the basic premise of the National Education Policy was to take education out of narrow thinking and connect it with the modern ideas of the 21st century.ஜெர்மனியில் ஜி7 உச்சி மாநாட்டில் “ஒன்றாக மேலும் வலிமையடைவோம்: உணவுப் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல்” குறித்த கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 27th, 11:59 pm
உலகளாவிய பதற்றமான சூழ்நிலையில் நாம் இன்று சந்திக்கிறோம். இந்தியா எப்போதும் அமைதிக்கு ஆதரவாக இருந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையிலும், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக பாதையையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த புவிசார் அரசியல் பதற்றத்தின் தாக்கம் ஐரோப்பாவில் மட்டும் அல்ல. எரிசக்தி மற்றும் உணவு தானியங்களின் விலை உயர்வு அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. குறிப்பாக, வளரும் நாடுகளின் எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த சவாலான நேரத்தில், தேவைப்படும் பல நாடுகளுக்கு இந்தியா உணவு தானியங்களை வழங்கியுள்ளது. கடந்த சில மாதங்களில் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியாக சுமார் 35,000 டன் கோதுமையை அனுப்பியுள்ளோம். மேலும், அங்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகும், நிவாரணப் பொருட்களை வழங்கிய முதல் நாடு இந்தியாதான். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய எங்களது அண்டை நாடான இலங்கைக்கும் நாங்கள் உதவுகிறோம்.ஜெர்மனியில் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் ‘மேம்பட்ட எதிர்காலத்திற்கு முதலீடு செய்தல்: பருவநிலை, எரிசக்தி, சுகாதாரம்’ என்ற அமர்வில் பிரதமரின் உரை
June 27th, 07:47 pm
உலக நாடுகளின் வளர்ச்சி இலக்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இடையே அடிப்படை மோதல் இருப்பதாக துரதிஷ்டவசமாக கருதப்படுகிறது. ஏழை நாடுகளும், ஏழை மக்களும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாக மற்றொரு தவறான கருத்தும் உள்ளது. ஆனால் ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தியா இந்தக்கருத்தை முற்றிலும் மறுக்கிறது. பழங்கால இந்தியா, அபரிமிதமான செழிப்பைக் கண்டுள்ளது; அதைத்தொடர்ந்து பல ஆண்டுகள் அடிமைப் போக்கையும் நாங்கள் சகித்துக் கொண்டிருந்தோம்; தற்போது ஒட்டுமொத்த உலகிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதாரமாக சுதந்திர இந்தியா திகழ்கிறது. இந்தக் காலகட்டத்தில் சுற்றுச்சூழல் சார்ந்த உறுதிப்பாட்டை இந்தியா இம்மியளவும் விட்டுத் தரவில்லை. உலக மக்கள் தொகையில் 17% பேர் இந்தியாவில் வசிக்கிறார்கள். இருந்தபோதும் சர்வதேச கரியமிலவாயு வெளியிடுவதில் எங்களது பங்களிப்பு வெறும் 5% மட்டுமே. இயற்கையுடன் இணைந்த கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட எங்களது வாழ்க்கைமுறையே இதற்கு முக்கிய காரணம்.Democracy is in DNA of every Indian: PM Modi
June 26th, 06:31 pm
PM Modi addressed and interacted with the Indian community in Munich. The PM highlighted India’s growth story and mentioned various initiatives undertaken by the government to achieve the country’s development agenda. He also lauded the contribution of diaspora in promoting India’s success story and acting as brand ambassadors of India’s success.ஜெர்மனியின் முனிச்சில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடல்
June 26th, 06:30 pm
ஜெர்மனியின் முனிச்சில் உள்ள ஆடி டோமில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றி, அவர்களுடன் கலந்துரையாடினார். ஜெர்மனியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான துடிப்புமிக்க இந்திய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.Transformative changes are taking place in every sector in the emerging 'New India': PM
June 22nd, 06:15 pm
PM Modi addressed the BRICS Business Forum. In his remarks, PM Modi said, Today when the whole world is focusing on post-COVID recovery, then the role of BRICS countries will continue to remain very important again.Prime Minister’s participation in the 14th BRICS Summit
June 21st, 03:00 pm
At the invitation of President Xi Jinping, Prime Minister Shri Narendra Modi will be attending the 14th BRICS Summit hosted by China in virtual format on 23-24 June 2022. This includes a High Level Dialogue on Global Development with guest countries on June 24.அகமதாபாதின் போபாலில் இன்-ஸ்பேஸ் தலைமையக துவக்க விழாவில் பிரதமரின் உரை
June 10th, 08:51 pm
மத்திய அமைச்சர் திரு அமித் ஷா அவர்களே, குஜராத் முதல்வர் திரு பூபேந்திர பட்டேல் அவர்களே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.ஆர். பாட்டில் அவர்களே, இன்-ஸ்பேஸ் தலைவர் திரு பவன் கோயங்கா அவர்களே, விண்வெளித் துறை செயலாளர் திரு எஸ். சோமநாத் அவர்களே, இந்திய விண்வெளி துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் இதர பிரமுகர்களே.