PM Modi inaugurates and lays foundation stone of multiple development projects in Delhi worth over Rs. 12,200 crore
January 05th, 12:15 pm
The Prime Minister Shri Narendra Modi inaugurated and laid the foundation stone of multiple development projects worth over Rs 12,200 crore in Delhi. The key focus of projects is to enhance regional connectivity and ensure ease of travel. The Prime Minister also undertook a ride in Namo Bharat Train from Sahibabad RRTS Station to New Ashok Nagar RRTS Station.ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் ஆற்றிய உரை
November 16th, 10:15 am
100 ஆண்டுகளுக்கு முன்பு, இந்துஸ்தான் டைம்ஸ் வணக்கத்திற்குரிய பாபுவால் தொடங்கப்பட்டது . அவர் குஜராத்தி மொழி பேசுபவர். 100 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு குஜராத்தியை நீங்கள் அழைத்திருக்கிறீர்கள். நான், ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் கடந்த 100 ஆண்டுகளாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்துடன் தொடர்புடைய அனைவருக்கும், இதை வளர்ப்பதற்கு பங்களிப்பு செய்தவர்களுக்கும், போராடியவர்களுக்கும், சவால்களை எதிர்கொண்டவர்களுக்கும், உறுதியாக நின்றவர்களுக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் இன்று பாராட்டுக்கு உரியவர்கள், மரியாதைக்குரியவர்கள். 100 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்தது உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் அனைவரும் இந்த அங்கீகாரத்திற்கு தகுதியானவர்கள், எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 100 ஆண்டு பயணத்தை காண்பிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க கண்காட்சியைக் காண வாய்ப்பு கிடைத்தது. உங்களுக்கு நேரம் இருந்தால் புறப்படுவதற்கு முன்பு சிறிது நேரம் அங்கு செலவிடுமாறு உங்கள் அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன். இது வெறும் கண்காட்சி அல்ல, ஒரு அனுபவம். 100 வருட வரலாறு என் கண் முன்னே கடந்து போனது போல் உணர்ந்தேன். நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து, அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் முதல் செய்தித்தாள்களைப் பார்த்தேன். மார்ட்டின் லூதர் கிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற புகழ்பெற்றவர்கள் ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதி வந்தனர். அவர்களின் எழுத்துக்கள் செய்தித்தாளை மிகவும் வளப்படுத்தின. உண்மையிலேயே, நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். சுதந்திரத்திற்காக போராடுவது முதல் சுதந்திரத்திற்குப் பிறகு எல்லையற்ற நம்பிக்கையின் அலைகளில் சவாரி செய்வது வரை, இந்தப் பயணம் அசாதாரணமானது மற்றும் நம்பமுடியாதது. 1947 அக்டோபரில் காஷ்மீரை இணைத்த பிறகு ஒவ்வொரு குடிமகனும் அடைந்த உற்சாகத்தை உங்கள் பத்திரிகையில் நான் உணர்ந்தேன். ஏழு தசாப்தங்களாக காஷ்மீர் எவ்வாறு வன்முறையில் மூழ்கியிருந்தது, முடிவெடுக்க முடியாத தன்மை எவ்வாறு இருந்தது என்பதையும் அந்தத் தருணத்தில் நான் உணர்ந்தேன். இன்று உங்கள் செய்தித்தாள் ஜம்மு-காஷ்மீரில் சாதனை வாக்குப்பதிவு பற்றிய செய்திகளை வெளியிடுகிறது, இது கடந்த காலத்திலிருந்து கடுமையாக வேறுபடுகிறது.புதுதில்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 16th, 10:00 am
புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். 100 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் வரலாற்றுச் சிறப்புமிக்க 100 ஆண்டுகால பயணத்திற்காக மட்டுமல்லாமல், அது தொடங்கப்பட்டதிலிருந்து அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்து தெரிவித்தார். கண்காட்சி நடைபெறும் இடத்தில் நடைபெற்ற கண்காட்சியைப் பார்வையிட்ட திரு மோடி, இது ஒரு அனுபவம் என்று கூறினார். இந்தியா சுதந்திரம் பெற்று, அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தின் பழைய செய்தித்தாள்களை தாம் பார்த்ததாகவும் அவர் கூறினார். மார்ட்டின் லூதர் கிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற பல தலைவர்கள் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு கட்டுரைகள் எழுதியதை திரு மோடி சுட்டிக்காட்டினார். சுதந்திரப் போராட்டத்தைக் கண்ட நீண்ட பயணம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் நம்பிக்கையுடன் முன்னோக்கி நடைபெற்றது தனித்துவமானது மற்றும் ஆச்சரியமானது என்று அவர் கூறினார். 1947 அக்டோபரில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது குறித்த செய்தியைப் படிக்கும்போது மற்ற குடிமக்களைப் போலவே தாமும் அதே உற்சாகத்தை உணர்ந்ததாக பிரதமர் கூறினார். எவ்வாறாயினும், ஏழு தசாப்தங்களாக காஷ்மீரை எவ்வாறு முடிவெடுக்க முடியாத தன்மை வன்முறையில் மூழ்கடித்துள்ளது என்பதையும், அந்தத் தருணத்தில் உணர்ந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் இப்போதெல்லாம் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் அதிக அளவில் வாக்குப்பதிவு நடைபெற்ற செய்திகள் நாளிதழ்களில் வெளியாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திரு மோடி கூறினார். பிரபலமாக விளங்கும் மற்றொரு நாளிதழ், அதன் ஒரு பக்கத்தில் அசாம் கலவரப் பகுதி என்று அறிவிக்கப்பட்டதாகவும், மறுபுறம் அடல் ஜி பாரதிய ஜனதா கட்சிக்கு அடிக்கல் நாட்டினார் என்ற செய்தி வெளியிட்டதையும் திரு மோடி குறிப்பிட்டார். அசாமில் நிரந்தர அமைதியைக் கொண்டுவருவதில் இன்று பாஜக பெரும் பங்கு வகிக்கிறது என்பது ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வு என்று அவர் மேலும் கூறினார்.தூய்மையே சேவை 2024 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 02nd, 10:15 am
இன்று மகாத்மா காந்தி , லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள். அன்னை பாரதத்தின் இந்த மகத்தான புதல்வர்களுக்கு நான் தாழ்மையுடன் தலைவணங்குகிறேன். காந்திஜி மற்றும் நாட்டின் பெரிய மனிதர்கள் பாரதம் குறித்து கண்ட கனவை நிறைவேற்ற, ஒன்றிணைந்து பணியாற்ற இந்த நாள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.தூய்மை இந்தியா தினம் 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
October 02nd, 10:10 am
தூய்மைக்கான மிக முக்கிய மக்கள் இயக்கங்களில் ஒன்றான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், 155-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 2 அன்று) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தூய்மை இந்தியா தினம் 2024 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அம்ருத் மற்றும் அம்ருத் 2.0, தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம், கோபர்தன் திட்டம் உள்ளிட்ட ரூ.9,600 கோடி மதிப்பிலான பல்வேறு துப்புரவு மற்றும் தூய்மைத் திட்டங்களைத் திரு மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தூய்மையே சேவை இயக்கம்-2024-ன் கருப்பொருள் 'தூய்மைப் பழக்கம், தூய்மைக் கலாச்சாரம்.'Fact Sheet: Quad Countries Launch Cancer Moonshot Initiative to Reduce the Burden of Cancer in the Indo-Pacific
September 22nd, 12:03 pm
The Quad countries—US, Australia, India, and Japan—launched the Quad Cancer Moonshot to combat cervical cancer in the Indo-Pacific. This initiative aims to strengthen cancer care by enhancing health infrastructure, promoting HPV vaccination, increasing screenings, and expanding treatment. During the Quad Leaders' Cancer Moonshot event, India commited to providing HPV sampling kits, detection tools and cervical cancer vaccines worth $7.5 million to the Indo-Pacific region.The Wilmington Declaration Joint Statement from the Leaders of Australia, India, Japan, and the United States
September 22nd, 11:51 am
PM Modi joined leaders from the U.S., Australia, and Japan for the fourth Quad Leaders Summit in Wilmington, Delaware. The Quad reaffirmed its commitment to a free, open, and inclusive Indo-Pacific, opposing destabilizing actions and supporting regional peace, security, and sustainable development. The leaders emphasized respect for international law, democratic values, and regional institutions like ASEAN and the Pacific Islands Forum.In Cancer Care, Collaboration is essential for Cure: PM Modi at Cancer Moonshot Program for QUAD Leaders
September 22nd, 06:25 am
Prime Minister Narendra Modi participated in the Quad Cancer Moonshot event hosted by President Joseph R Biden Jr., on the sidelines of the Quad Leaders’ Summit in Wilmington, Delaware. Speaking on the occasion, the Prime Minister deeply appreciated this thoughtful initiative of President Biden aimed at preventing, detecting and treating cervical cancer.PM Modi attends Quad Cancer Moonshot event
September 22nd, 06:10 am
Prime Minister Narendra Modi participated in the Quad Cancer Moonshot event hosted by President Joseph R Biden Jr., on the sidelines of the Quad Leaders’ Summit in Wilmington, Delaware. Speaking on the occasion, the Prime Minister deeply appreciated this thoughtful initiative of President Biden aimed at preventing, detecting and treating cervical cancer.உலக இந்திய உணவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் காணொலி செய்தி
September 19th, 12:30 pm
உலக இந்திய உணவு 2024 அமைப்பைப் பற்றி அறிந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ள பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பிரதமர் திரு நரேந்திர மோடி 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' முன்முயற்சியை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
September 06th, 01:00 pm
குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்தத் திட்டத்தின் கீழ், மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தவும், நீண்டகால நீர் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் சுமார் 24,800 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.பிரதமர் திரு நரேந்திர மோடி 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' முன்முயற்சியை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
September 06th, 12:30 pm
குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்தத் திட்டத்தின் கீழ், மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தவும், நீண்டகால நீர் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் சுமார் 24,800 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.உலக சுகாதார அமைப்பால் சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், குரங்கம்மை நிலைமையை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்
August 18th, 07:42 pm
குரங்கம்மை நிலைமைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
February 25th, 07:52 pm
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, குஜராத்தின் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சி.ஆர்.பாட்டீல் மற்றும் பிற பிரமுகர்களே, ராஜ்கோட்டின் எனது சகோதர சகோதரிகளே, வணக்கம்!குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ரூ.48,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
February 25th, 04:48 pm
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ரூ.48,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தத் திட்டங்கள் சுகாதாரம், சாலை, ரயில், எரிசக்தி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சுற்றுலா போன்ற முக்கிய துறைகளை உள்ளடக்கியவை.அனைவரின் இதயத்திலும் ராமர் இருக்கிறார்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
January 28th, 11:30 am
நண்பர்களே, அயோத்தியிலே பிராண பிரதிஷ்டை சந்தர்ப்பமானது, தேசத்தின் கோடிக்கணக்கான மக்களை ஓரிழையில் இணைத்து வைத்தது. அனைவரின் இறையும் ஒன்றே, அனைவரின் பக்தியும் ஒன்றே, அனைவரின் சொல்லிலும் இராமன், அனைவரின் இதயங்களிலும் இராமன். தேசத்தின் பலர் இந்த வேளையில் இராம பஜனைகளைப் பாடி, அவற்றை இராமனின் பாதாரவிந்தங்களிலே சமர்ப்பணம் செய்தார்கள். ஜனவரி மாதம் 22ஆம் தேதியன்று மாலையிலே, நாடெங்கிலும் இராமஜோதி ஏற்றப்பட்டு, தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த வேளையிலே, தேசத்தின் சமூகத்தன்மையின் சக்தி பார்க்கப்பட்டது, இதுவே வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உளவுறுதிப்பாட்டின் மிகப் பெரிய ஆதாரமும் ஆகும். மகரசங்கராந்தி முதல் ஜனவரி மாதம் 22ஆம் தேதி வரை தூய்மை இயக்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நான் நாட்டுமக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். இலட்சக்கணக்க்கானோர் மிகுந்த சிரத்தையோடு கூட, தங்களது பகுதிகளில் உள்ள புனிதத்தலங்களிலே தூய்மைப் பணியை மேற்கொண்டார்கள். பலர் இந்தப் பணியோடு தொடர்புடைய படங்களை, காணொளிகளை அனுப்பியிருக்கிறார்கள் – இந்த உணர்வு தடைப்படக்கூடாது, இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வர வேண்டும். சமூக இயல்பின் இந்தச் சக்தி, நமது தேசத்தை வெற்றியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும்.பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் நூல் வெளியீட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
December 25th, 04:31 pm
எனது அமைச்சரவை சகாக்கள் திரு அனுராக் தாக்கூர் மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, எனது நீண்டகால நண்பரும் மஹாமனா சம்பூர்ண வங்கமே பத்திரிகையின் தலைமை ஆசிரியருமான ராம் பகதூர் ராய் அவர்களே, மகாமனா மாளவியா மிஷனின் தலைவர் பிரபு நாராயண் ஸ்ரீவஸ்தவ் அவர்களே, இங்கு உள்ள அனைத்து புகழ்பெற்ற ஆளுமைகளே!பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் 162-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படைப்புகள் அடங்கிய தொகுப்பைப் பிரதமர் வெளியிட்டார்
December 25th, 04:30 pm
பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் 162-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி, 'பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் தொகுக்கப்பட்ட படைப்புகள்' என்ற 11 பகுதிகள் அடங்கிய முதல் தொகுப்பை வெளியிட்டார். பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் நினைவிடத்திலும் பிரதமர் திரு நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனர் பண்டிட் மதன் மோகன் மாளவியா நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளார். மக்களிடையே தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்த அளப்பரிய பாடுபட்ட சிறந்த அறிஞராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும் அவர் நினைவுகூரப்படுகிறார்.18-வது கிழக்காசிய உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 07th, 01:28 pm
கிழக்காசிய உச்சிமாநாட்டில் மீண்டும் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதிபர் திரு விடோடோவின் சிறப்பான தலைமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இக்கூட்டத்தில் பார்வையாளராக கிழக்கு தைமூர் பிரதமர் திரு சனானா குஸ்மாவோ அவர்களை நான் அன்புடன் வரவேற்கிறேன்.20-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு மற்றும் 18-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
September 07th, 11:47 am
ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில், ஆசியான்-இந்தியா விரிவான திட்டமிடல் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், அதன் எதிர்காலப் பாதையை வகுப்பது குறித்தும் பிரதமர் ஆசியான் நாடுகளின் கூட்டாளிகளுடன் விரிவான விவாதங்களை நடத்தினார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆசியான் மையத்தை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், இந்தியாவின் இந்தோ-பசிபிக் பெருங்கடலின் முன்முயற்சி மற்றும் இந்தோ-பசிபிக் குறித்த ஆசியான் கண்ணோட்டம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை எடுத்துரைத்தார். ஆசியான்-இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த மறுஆய்வை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.