ராஜஸ்தான் மாநிலத்தின் சிகாரில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா / தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 27th, 12:00 pm
கத்து ஷ்யாம் அவர்களின் பூமிக்கு நாடு முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களுக்கு தன்னம்பிக்கை, நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. வீரர்களின் பூமியான ஷெகாவதியில் இருந்து நாட்டிற்கான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கான வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்ததை அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். இன்று, இங்கிருந்து பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்ட நிதியின் ஒரு பகுதியாக லட்சக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஏறக்குறைய 18,000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.ராஜஸ்தானின் சிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
July 27th, 11:15 am
ராஜஸ்தானின் சிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 1.25 லட்சத்துக்கும் அதிகமான பிரதமரின் வேளாண் வள மையங்களை (பி.எம்.கே.எஸ்.கே) நாட்டிற்கு அர்ப்பணித்தல். கந்தகம் பூசப்பட்ட புதிய வகை யூரியா கோல்டு அறிமுகம் செய்தல், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலைப்பின்னலில் (ஓ.என்.டி.சி) 1600 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (எஃப்.பி.ஓ) இணைத்தல், பிரதமரின் விவசாயி கௌரவிப்பு நிதியின் கீழ் 8.5 கோடி பயனாளிகளுக்கு சுமார் ரூ. 17,000 கோடி 14-வது தவணைத் தொகையை விடுவித்தல் சித்தோர்கர், தோல்பூர், சிரோஹி, சிகார், ஸ்ரீ கங்காநகர் ஆகிய இடங்களில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி வைத்தல், பரன், பண்டி, கரௌலி, ஜுன்ஜுனு, சவாய் மாதோபூர், ஜெய்சால்மர் மற்றும் டோங்க் ஆகிய இடங்களில் 7 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், உதய்பூர், பன்ஸ்வாரா, பிரதாப்கர், துங்கர்பூர், ஜோத்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 6 ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளைத் திறந்து வைத்தல், திவ்ரி, ஜோத்பூர் ஆகிய இடங்களில் கேந்திரிய வித்யாலயாக்களைத் திறந்து வைத்தல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.வெள்ளை மாளிகையில் வரவேற்பு விழாவின்போது பிரதமர் அளித்த அறிக்கையின் தமிழாக்கம்
June 22nd, 11:48 pm
வெள்ளை மாளிகையில் இன்று அளிக்கப்பட்ட பிரம்மாண்டமான வரவேற்பு, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களையும், அமெரிக்காவில் வசிக்கும் 4 மில்லியன் இந்திய வம்சாவளியினரையும் கௌரவித்ததைப் போல அமைந்திருந்தது. இதற்காக அதிபர் பைடன் மற்றும் டாக்டர் ஜில் பைடன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அமெரிக்க அதிபருடன் கூட்டான செய்தியாளர் சந்திப்பின் போது, பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றியதன் தமிழாக்கம்
June 22nd, 11:19 pm
முதலாவதாக, இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவுகள் குறித்து சுமூகமான உரையையும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் வழங்கிய அதிபர் பைடனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.டெக்ஸாஸ் மாகாணம் ஹூஸ்டனில் இந்திய சமுதாயத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 22nd, 11:59 pm
இந்தக் காட்சி, இந்தச் சூழல் கற்பனைக்கு எட்டாததாகும். எதையும் பெரிய அளவிலும், பிரமாண்டமானதாகவும் நடத்திக் காட்டுவது டெக்ஸாஸின் பிரிக்க முடியாத இயல்பாகும்.ஹூஸ்டனில் நடைபெற்ற ‘நலமா மோடி’ நிகழ்வில் இந்திய குடும்பங்களிடையே பிரதமர் உரையாற்றினார்
September 22nd, 11:58 pm
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டன் நகரில் உள்ள என் ஆர் ஜி அரங்கில் நடைபெற்ற ‘நலமா மோடி’ நிகழ்வில் 50,000க்கும் மேல் கூடியிருந்த மக்களிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்த நிகழ்வில் பிரதமரோடு அமெரிக்க அதிபர் டொனால்ட் ஜே ட்ரம்ப் அவர்களும் இணைந்து கொண்டார்.அமெரிக்க துணை அதிபரை பிரதமர் மோடி சந்தித்தார்
June 27th, 12:40 pm
வெள்ளை மாளிகையில், துணை அதிபர் திரு மைக் பென்ஸ்-ஐ பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். முக்கிய துறைகளில், இந்தியா-அமெரிக்கா கூட்டாண்மையை மேம்படுத்த இரு தலைவர்களும் பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.வெள்ளை மாளிகையில் உங்களுக்கு ஒரு உண்மையான நண்பர் இருக்கிறார்: பிரதமர் மோடியிடம் அதிபர் ட்ரம்ப்
June 27th, 03:33 am
பத்திரிகையாளர்களிடம் இன்று பேசும் போது, அதிபர் டோனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வெள்ளை மாளிகையில் ஒரு உண்மையான நண்பர் உண்டு. உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரை வரவேற்பத்தில் பெருமை கொள்வதாகவும், இருவருக்கும் இடையே ஆன சந்திப்பு இரு நாடுகளின் உறவை வலுவாக்கும் என்றார். இந்திய மக்கள், கலாச்சாரம், பரம்பரை மற்றும் மரபை ட்ரம்ப் பாராட்டினார். “நட்பு, மரியாதை ரீதியாக இந்தியாவும், அமெரிக்காவும் எப்போதும் ஒன்றாக இருக்கும்,” என்று அமெரிக்க அதிபர் உறுதி தெரிவித்தார்.அமெரிக்காவை நாங்கள் மதிப்புமிக்க கூட்டாளியாக காண்கிறோம்: பிரதமர் மோடி
June 27th, 03:22 am
கூட்டு பத்திரிகை அறிக்கையின் போது பிரதமர் நரேந்திர மோடி, “எங்கள் முன்னோடி திட்டங்களுக்கு நாங்கள் அமெரிக்காவை மதிப்புமிக்க கூட்டாளியாக பார்க்கிறோம்.” இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பில், வர்த்தகம், வணிகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் அறிவுசார் பொருளாதாரம் போன்றவை முக்கிய துறைகளாகும்.பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப்-ஐ வெள்ளை மாளிகையில் சந்தித்து முக்கிய பேச்சு வார்த்தைகள் நடத்தினார்
June 27th, 01:23 am
இன்று பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் திரு டோனால்ட் ட்ரம்ப்-ஐ சந்தித்தார். இரு தலைவர்களும், இரு தரப்பு உறவு குறித்தும், சர்வதேச விஷயங்கள் குறித்தும், பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டனர். பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணிக்கு, சிறப்பான வரவேற்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்து கொண்டார். “அதிபர் டோனால்ட் ட்ரம்ப் நிறைந்த அன்புடன் என்னை வரவேற்றார். வரவேற்புக்கு அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்,” என்றார்.