இந்தச் சவாலான நேரத்தில் கேரள மக்களுடன் நாம் அனைவரும் துணை நிற்போம்: பிரதமர் திரு. நரேந்திர மோடி

August 10th, 10:58 pm

எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நம் அனைவரையும் வருத்தமடையச் செய்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் நடந்ததிலிருந்து, நான் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மத்திய அரசு அனைத்து வளங்களையும் திரட்டியுள்ளது. இன்று, நான் அங்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தேன். நான் ஒரு வான்வழி ஆய்வையும் மேற்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் பிரதமர் ஆற்றிய உரை

August 10th, 07:40 pm

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, ஆளுநர் அவர்களே, மத்திய அரசில் எனது மதிப்பிற்குரிய சகாவும், இந்த மண்ணின் மைந்தருமான சுரேஷ் கோபி அவர்களே!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுடன் எங்களது பிரார்த்தனைகள் உள்ளன, நிவாரணப் பணிகளுக்கு உதவ மத்திய அரசு உறுதியளிக்கிறது என பிரதமர் கூறியுள்ளார்

August 10th, 07:36 pm

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தங்கள் பிரார்த்தனைகள் இருப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். நிவாரணப் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று அவர் உறுதியளித்தார். அனைத்து உதவிகள் மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில அரசுடன் மத்திய அரசு துணை நிற்கிறது என்று அவர் கூறினார்.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

July 30th, 10:30 am

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயனுடன் தொடர்பு கொண்டு பேசிய அவர், அங்கு நிலவும் சூழ்நிலையை எதிர்கொள்ள மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார்.