பிரதமர் பிப்ரவரி 22, 23 ஆகிய நாட்களில் குஜராத், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார்
February 21st, 11:41 am
பிப்ரவரி 22 அன்று காலை 10.45 மணிக்கு அகமதாபாத்தில் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். பிற்பகல் 12:45 மணியளவில் மெஹ்சானா சென்றடையும் பிரதமர் வாலிநாத் மகாதேவ் கோயிலில் பூஜை, தரிசனம் செய்யவுள்ளார். பிற்பகல் 1 மணியளவில், மெஹ்சானாவின் தாராப்பில் ஒரு பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று ரூ.13,500 கோடிக்கும் அதிக மதிப்புடைய பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். மாலை 4:15 மணியளவில், பிரதமர் நவ்சாரிக்கு செல்கிறார். சுமார் ரூ.47,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து நிறைவடைந்த பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். மாலை 6.15 மணியளவில் காக்ரபார் அணுமின் நிலையத்தைப் பார்வையிடுகிறார்.உள்நாட்டு அணுசக்தி துறைக்கு செயலூக்கம்
May 17th, 06:28 pm
இந்தியாவின் உள்நாட்டு அணுசக்தி திட்டத்துக்கு செயல் வேகம் அளிக்கவும், நாட்டின் அணுசக்தி துறைக்கு உந்துதல் அளிக்கவும், ஒரு முக்கிய முடிவாக, கேபினட், 10 யுனிட்கள் இந்திய உள்நாட்டு ப்ரெஷரைஸ்டு ஹெவி வாட்டர் ரியாக்ட்டர்ஸ் (PHWR) அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த துறையில், இது ‘மேக் இன் இந்தியா’ முன்னோடி திட்டங்களில் ஒன்றாக இருக்கும். தொழில்நுட்ப வசதிகளை உருவாக்க இந்திய விஞ்ஞானிகளின் திறன் மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையை இந்த ஒப்புதல் குறிக்கிறது.