தூய்மையே சேவை 2024 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 02nd, 10:15 am

இன்று மகாத்மா காந்தி , லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள். அன்னை பாரதத்தின் இந்த மகத்தான புதல்வர்களுக்கு நான் தாழ்மையுடன் தலைவணங்குகிறேன். காந்திஜி மற்றும் நாட்டின் பெரிய மனிதர்கள் பாரதம் குறித்து கண்ட கனவை நிறைவேற்ற, ஒன்றிணைந்து பணியாற்ற இந்த நாள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.

தூய்மை இந்தியா தினம் 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்

October 02nd, 10:10 am

தூய்மைக்கான மிக முக்கிய மக்கள் இயக்கங்களில் ஒன்றான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், 155-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 2 அன்று) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தூய்மை இந்தியா தினம் 2024 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அம்ருத் மற்றும் அம்ருத் 2.0, தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம், கோபர்தன் திட்டம் உள்ளிட்ட ரூ.9,600 கோடி மதிப்பிலான பல்வேறு துப்புரவு மற்றும் தூய்மைத் திட்டங்களைத் திரு மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தூய்மையே சேவை இயக்கம்-2024-ன் கருப்பொருள் 'தூய்மைப் பழக்கம், தூய்மைக் கலாச்சாரம்.'

விண்வெளித் துறை சீர்திருத்தங்களால் தேசத்தின் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்: பிரதமர் மோடி 'மன் கீ பாத்' (மனதின் குரல்)

August 25th, 11:30 am

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இன்று மீண்டும் ஒருமுறை தேசத்தின் சாதனைகள், நாட்டுமக்களின் கூட்டு முயற்சிகள் ஆகியவை பற்றிய உரையாடல்களே. 21ஆம் நூற்றாண்டு பாரதத்திலே ஏராளமான விஷயங்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் அஸ்திவாரத்திற்கு உரம் சேர்த்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, இந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று, நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் நமது முதல் தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடினோம். நீங்களும் இதைக் கொண்டாடியிருப்பீர்கள். மீண்டும் ஒருமுறை சந்திரயான்–3இன் வெற்றியை நினைந்து களித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். கடந்த ஆண்டு இதே நாளில் தான் சந்திரயான்-3, நிலவின் தென்பாகத்தில், சிவசக்திப் புள்ளியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. பாரதம் இந்த கௌரவம் மிக்க சாதனையைப் படைத்த முதல் தேசமானது.

பானிப்பட்டில் 2-ஜி எத்தனால் தொழிற்சாலையை ஆகஸ்ட் 10 அன்று பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

August 08th, 05:58 pm

உலக உயிரி எரிபொருள் தினத்தன்று ஹரியானா மாநிலம் பானிப்பட்டில் இரண்டாம் தலைமுறை (2-ஜி) எத்தனால் தொழிற்சாலையை பிரதமர் திரு நரேந்திர மோடி 2022 ஆகஸ்ட் 10 அன்று பிற்பகல் 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

Our youth should be skilled, confident and practical, NEP is preparing the ground for this: PM Modi

July 07th, 02:46 pm

PM Modi inaugurated Akhil Bhartiya Shiksha Samagam on implementation of the National Education Policy in Varanasi. The Prime Minister said that the basic premise of the National Education Policy was to take education out of narrow thinking and connect it with the modern ideas of the 21st century.

PM inaugurates Akhil Bhartiya Shiksha Samagam on implementation of NEP

July 07th, 02:45 pm

PM Modi inaugurated Akhil Bhartiya Shiksha Samagam on implementation of the National Education Policy in Varanasi. The Prime Minister said that the basic premise of the National Education Policy was to take education out of narrow thinking and connect it with the modern ideas of the 21st century.

புதுதில்லியின் விக்யான் பவனில் ஈஷா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ‘மண்ணைக் காப்போம்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமரின் உரை

June 05th, 02:47 pm

உங்கள் அனைவருக்கும் இனிய உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துகள்! இந்த நன்னாளில் சத்குருவிற்கும், ஈஷா அறக்கட்டளைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். நாடு தனது 75-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வேளையிலும், இந்த அமிர்த காலத்தில் புதிய உறுதிப்பாடுகளை எடுத்து வரும் சூழலிலும், இதுபோன்ற இயக்கங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

PM Addresses 'Save Soil' Programme Organised by Isha Foundation

June 05th, 11:00 am

PM Modi addressed 'Save Soil' programme organised by Isha Foundation. He said that to save the soil, we have focused on five main aspects. First- How to make the soil chemical free. Second- How to save the organisms that live in the soil. Third- How to maintain soil moisture. Fourth- How to remove the damage that is happening to the soil due to less groundwater. Fifth, how to stop the continuous erosion of soil due to the reduction of forests.

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் மற்றும் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

March 06th, 12:01 pm

மராத்திய மொழியில் வாழ்த்துக் கூறி தமது உரையைத் தொடங்கிய பிரதமர், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ‘சுதந்திரப் பெருவிழாவாக’ நாடு தற்போது கொண்டாடி வருகிறது என்றார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் புனே வரலாற்று சிறப்புமிக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. லோக்மானிய திலகர், சபேகர் சகோதரர்கள், கோபால் கணேஷ் அகர்க்கர், சேனாபதி பபட், கோபால்கிருஷ்ண தேஷ்முக், ஆர் ஜி பண்டார்க்கர், மகாதேவ் கோவிந்த் ராணடே உள்ளிட்ட இந்த மண்ணின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும் எனது மரியாதையை செலுத்துகிறேன்.

புனே சென்ற பிரதமர், புனே மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார்

March 06th, 12:00 pm

பிரதமர் திரு . நரேந்திர மோடி புனேயில் இன்று, புனே மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தத்துடன், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். மகாராஷ்டிர ஆளுநர் திரு. பகத் சிங் கோஷ்யாரி, துணை முதலமைச்சர் திரு .அஜீத் பவார், மத்திய அமைச்சர் திரு. ராம்தாஸ் அத்வாலே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு .பிரகாஷ் ஜவ்டேகர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

குஜராத்தில் முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் மொழியாக்கம்

August 13th, 11:01 am

மத்திய அமைச்சரவையில் எனது சக ஊழியர், திரு. நிதின் கட்கரி, குஜராத் முதல்வர் திரு. விஜய் ரூபானி, ஆட்டோ தொழிற்துறையுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்கள், அனைத்து ஓஈம் OEM சங்கங்கள், உலோகம் மற்றும் ஸ்கிராப்பிங் தொழிலில் உள்ள அனைத்து உறுப்பினர்கள், பெரியோர்களே, தாய்மார்களே!

குஜராத் முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்

August 13th, 11:00 am

குஜராத் முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். தன்னார்வ வாகன நவீனமயமாக்கல் திட்டம் அல்லது பயன்தீர்ந்த வாகனங்களை அழிக்கும் கொள்கையின் கீழ், வாகன அழிப்பு உள்கட்டமைப்பை உருவாக்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒருங்கிணைந்த அழிப்பு மையத்தை உருவாக்குவதற்கு ,அலாங் கப்பல் உடைக்கும் தொழில் நடைபெறும் விதம் குறித்த விளக்கம் கவனம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், குஜராத் முதலமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்று அறிமுகமாகும் வாகனக் கழிவு கொள்கை இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்: பிரதமர்

August 13th, 10:22 am

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில், இன்று தொடங்கப்பட்டுள்ள வாகனக் கழிவு கொள்கை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 13 அன்று குஜராத்தில் நடைபெறும் முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் பிரதமர் உரையாற்ற உள்ளார்

August 11th, 09:35 pm

குஜராத்தில், ஆகஸ்ட் 13-ந் தேதியன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்ற உள்ளார்.

வீடு, மின்சாரம், கழிவறை, எரிவாயு, சாலைகள், மருத்துவமனை, பள்ளி போன்ற அடிப்படைத் தேவைகள் இல்லாதது பெண்களிடையே, குறிப்பாக ஏழைப் பெண்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர்

August 10th, 10:43 pm

புகை மற்றும் வெப்பத்தில் நமது அன்னையர் துயருற்றதைப் பார்த்து நமது தலைமுறையினர் வளர்ந்ததாக பிரதமர் கூறினார். அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கு ஓர் குடும்பமோ, சமூகமோ போராடி வரும் வேளையில் அவர்கள் எவ்வாறு பெரும் கனவைக் காண்பார்கள்? சமூகத்தின் கனவுகளை நனவாக்குவதற்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். “தன்னம்பிக்கை இல்லாமல் ஒரு தேசம் எவ்வாறு தன்னிறைவு அடைய முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

உத்தரப்பிரதேசத்தில் உஜ்வாலா 2.0 ( பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா-பிஎம்யுஒய்) தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

August 10th, 12:46 pm

வணக்கம்! ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்னையர்கள் மற்றும் சகோதரிகளுடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றமைக்காக நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்தத் திருநாளையொட்டி, முன்கூட்டியே அன்னையர்கள் மற்றும் சகோதரிகளின் ஆசியை நான் பெற்றுள்ளேன். இன்று, ஏழைகள், தலித், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களின் கோடிக்கணக்கான சகோதரிகளுக்கு மற்றுமொரு பரிசை வழங்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். உஜ்வாலா திட்டத்தின் அடுத்த கட்டமாக ஏராளமான சகோதரிகள் இலவச எரிவாயு இணைப்புகளையும், அடுப்புகளையும் இன்று பெறுகின்றனர். அனைத்து பயனாளிகளையும் நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.

உஜ்வாலா 2.0 திட்டத்தை உத்தரப் பிரதேசத்தின் மஹோபாவிலிருந்து பிரதமர் தொடங்கி வைத்தார்

August 10th, 12:41 pm

உத்தரப்பிரதேசத்தின் மஹோபாவில் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி, உஜ்வாலா 2.0 (பிரதமரின் உஜ்வாலா திட்டம்) திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது, உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

'மன் கீ பாத்' (மனதின் குரல்) நேர்மறை மற்றும் உணர்வுத்திறம் கொண்டது. இது ஒரு கூட்டு தன்மையைக் கொண்டுள்ளது: பிரதமர் மோடி

July 25th, 09:44 am

நண்பர்களே, தேசத்தின் பொருட்டு மூவண்ணக் கொடியினை யார் உயர்த்துகிறார்களோ, அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வண்ணம் நமது உணர்வுகள் பெருகுவது என்பது இயல்பான ஒன்று. தேசபக்தியின் இந்த உணர்வு தான் நம்மனைவரையும் இணைக்கிறது. நாளை, ஜூலை மாதம் 26ஆம் தேதியன்று கார்கில் விஜய் திவஸும் கூட. பாரதப் படையின் வீரம், ஒழுங்குமுறை ஆகியவற்றின் அடையாளம்கார்க்கில் யுத்தம். உலகம் முழுமையும் இதைக் கண்டிருக்கிறது. இந்த முறை, இந்த கௌரவம் நிறைந்த நாளும், அம்ருத மஹோத்ஸவத்திற்கிடையே கொண்டாடப்பட இருக்கிறது. ஆகையால் இது மேலும் சிறப்புத்தன்மை வாய்ந்தததாக ஆகின்றது. சிலிர்ப்பை ஏற்படுத்தும் கார்கிலின் வீரதீரச் சம்பவங்களை நீங்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும், கார்கில் போரின் வீரர்களை நாமனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

June 05th, 11:05 am

பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகமும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுதல் அமைச்சகமும் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த உலகச் சுற்றுச்சூழல் தின நிகழ்வில் பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வின் போது பூனாவில் இருந்து கலந்து கொண்ட விவசாயி ஒருவரிடம் பிரதமர் கலந்துரையாடினார். அப்போது அந்த விவசாயி இயற்கை முறை விவசாயம் மற்றும் வேளாண்மையில் உயிரி எரிபொருளின் பயன்பாடு குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

உலகச் சுற்றுச்சூழல் தின நிகழ்வில் பிரதமர் உரை

June 05th, 11:04 am

பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகமும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுதல் அமைச்சகமும் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த உலகச் சுற்றுச்சூழல் தின நிகழ்வில் பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வின் போது பூனாவில் இருந்து கலந்து கொண்ட விவசாயி ஒருவரிடம் பிரதமர் கலந்துரையாடினார். அப்போது அந்த விவசாயி இயற்கை முறை விவசாயம் மற்றும் வேளாண்மையில் உயிரி எரிபொருளின் பயன்பாடு குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.