பஞ்சாரா கலாச்சாரம் மற்றும் அதன் மக்கள் குறித்த தமது மறக்கமுடியாத அனுபவங்களை பிரதமர் பகிர்ந்து கொள்கிறார்
October 05th, 06:20 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிராவில் உள்ள வாஷிம் நகருக்கு பயணம் மேற்கொண்டபோது, பஞ்சாரா கலாச்சாரம் மற்றும் அதன் மக்கள் குறித்த தமது மறக்கமுடியாத அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.வாஷிமில் உள்ள பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த துறவிகளைப் பிரதமர் சந்தித்தார்
October 05th, 05:47 pm
வாஷிமில் உள்ள பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த மதிப்புக்குரிய துறவிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். சமூகத்திற்கு சேவை செய்யும் அவர்களின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.வாஷிமில் உள்ள போஹாரா தேவி கோவிலில் பிரதமர் வழிபாடு
October 05th, 02:35 pm
மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள போஹாரா தேவி ஆலயத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வழிபாடு நடத்தினார்.பஞ்சாரா கலாச்சாரத்தின் முக்கிய இசைக்கருவியான நங்கராவை பிரதமர் இசைத்தார்
October 05th, 02:31 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாஷிமில் உள்ள நங்கரா இசைக்கருவியை வாசிக்கும் முயற்சியை மேற்கொண்டார். சிறந்த பஞ்சாரா கலாச்சாரத்தில் நங்கரா மிகவும் சிறப்பு வாய்ந்த இடத்தைப் பிடித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.மகாராஷ்டிர மாநிலம் வாஷிமில் வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை முன்முயற்சிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 05th, 12:05 pm
மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, மாநில முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சக உறுப்பினர்களான திரு சிவராஜ் சிங் சவுகான், திரு ராஜீவ் ரஞ்சன் சிங் அவர்களே, மகாராஷ்டிர துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், திரு அஜித் பவார் அவர்களே, மத்திய, மாநில அரசுகளின் இதர அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தொலைதூரத்திலிருந்து வந்துள்ள பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளே, நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள விவசாய சகோதர சகோதரிகளே!மகாராஷ்டிர மாநிலம் வாஷிமில் ரூ.23,300 கோடி மதிப்பிலான வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
October 05th, 12:01 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி மகாராஷ்டிரா மாநிலம் வாஷிமில் ரூ.23,300 கோடி மதிப்பிலான வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை தொடர்பான பல்வேறு முன்முயற்சிகளை இன்று தொடங்கி வைத்தார். பிரதமரின் உழவர் நல நிதியின் 18 வது தவணையை வழங்குதல், நமோ விவசாயிகள் பெருங்கவுரவ நிதி திட்டத்தின் 5- வது தவணையைத் தொடங்குதல், வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் 7,500 க்கும் மேற்பட்ட திட்டங்களை அர்ப்பணித்தல், 9,200 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், மகாராஷ்டிரா முழுவதும் மொத்தம் 19 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து சூரிய பூங்காக்கள் மற்றும் கால்நடைகளுக்கான ஒருங்கிணைந்த மரபணு சிப் மற்றும் உள்நாட்டு பாலின வகைப்படுத்தப்பட்ட விந்து தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் ஆகியவை இந்த முன்முயற்சிகளில் அடங்கும்.