ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
February 08th, 01:00 pm
ஆச்சார்ய கௌடியா மிஷனின் வணக்கத்திற்குரிய பக்தி சுந்தர் சன்னியாசி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, மீனாட்சி லேகி அவர்களே, நாடு முழுவதிலுமிருந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள பகவான் கிருஷ்ண பக்தர்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தாய்மார்களே!ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
February 08th, 12:30 pm
தில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ஆச்சார்ய ஸ்ரீல பிரபுபாதரின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய பிரதமர், அவரது நினைவாக நினைவுத் தபால் தலையையும், நாணயத்தையும் வெளியிட்டார். கௌடியா மடத்தின் நிறுவனர், ஆச்சார்யா ஸ்ரீல பிரபுபாதர் வைணவ நம்பிக்கையின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.மதுராவில் புனித மீரா பாயின் 525 வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
November 23rd, 07:00 pm
பிரஜ் பகுதியின் மதிப்பிற்குரிய துறவிகளே, உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, நமது இரண்டு துணை முதலமைச்சர்களே, அமைச்சரவையின் பல உறுப்பினர்களே, மதுரா நாடாளுமன்ற உறுப்பினர், சகோதரி ஹேமமாலினி அவர்களே, மற்றும் பிரஜின் எனது அன்பான குடியிருப்பாளர்களே!உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் நடைபெற்ற துறவி மீராபாய் ஜன்மோத்சவ விழாவில் பிரதமர் பங்கேற்றார்
November 23rd, 06:27 pm
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இன்று நடைபெற்ற துறவி மீராபாயின் 525-வது பிறந்த நாளைக் கொண்டாடும் நிகழ்ச்சியான ஜன்மோத்சவத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.பிரதமர், சிறுவர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினார்
August 30th, 04:39 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி 7, லோக் கல்யாண் சாலையில் சிறுவர்களுடன் இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடினார்.இது இந்தியாவின் வளர்ச்சிக் கதையின் திருப்புமுனை: ‘மன் கீ பாத்’-தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
November 28th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று நாம் மீண்டும் ஒரு முறை மனதின் குரலுக்காக இணைந்திருக்கிறோம். இரண்டு நாட்கள் கழித்து டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கின்றது, டிசம்பர் வந்து விட்டாலே மனோவியல்ரீதியாக, ஆண்டு நிறைவடைந்து விட்டது போன்ற ஒரு உணர்வு பிறந்து விடும். இது ஆண்டின் இறுதி மாதம், புதிய ஆண்டிற்குத் தயாராகும் நடவடிக்கைகளைத் தொடங்கி விடுவோம். இந்த மாதத்தில் தான் கடற்படை தினம் மற்றும் இராணுவப் படைகளின் கொடிநாளை தேசம் கொண்டாடுகிறது.கேதார்நாத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டியதோடு நாட்டிற்கு அர்ப்பணித்தார்
November 05th, 10:20 am
கேதார்நாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதோடு நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஸ்ரீ ஆதிசங்கராச்சார்யா சமாதியைத் தொடங்கிவைத்த அவர் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாவின் உருவச்சிலையைத் திறந்துவைத்தார். ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட, தற்போது நடைபெறுகிற அடிப்படை கட்டமைப்புப் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கேதார்நாத் கோவில் நிகழ்வோடு நாடு முழுவதும் உள்ள பல இடங்களிலிருந்தும், நான்கு கோவில்களிலிருந்தும், 12 ஜோதிர்லிங்கங்களுக்குப் பூஜைகள் நடத்தப்பட்டன. அனைத்து நிகழ்வுகளும் கேதார்நாத் கோவிலின் பிரதான நிகழ்வோடு இணைக்கப்பட்டன.அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக் கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை
September 14th, 12:01 pm
உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல் அவர்களே, பிரபலமான மற்றும் அதிரடியாக செயல்படும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா அவர்களே, உத்தரப்பிரதேச அரசின் அமைச்சர்களே, மற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, அலிகாரைச் சேர்ந்த எனது அருமை சகோதர, சகோதரிகளே.அலிகரில் உள்ள ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
September 14th, 11:45 am
அலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேச பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடத்தின் அலிகார் முனையின் கண்காட்சி மாதிரிகள் மற்றும் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்தையும் பிரதமர் பார்வையிட்டார்இந்தியாவின் இளைஞர்கள் புதிய மற்றும் பெரிய அளவில் ஏதாவது செய்ய விரும்புகிறார்கள்: ‘மன் கீ பாத்’-தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
August 29th, 11:30 am
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். இன்று மேஜர் தியான்சந்த் அவர்களின் பிறந்தநாள் என்பது நம்மனைவருக்கும் தெரியும். நமது தேசம் அவருடைய நினைவைப் போற்றும் வகையிலே இந்த நாளை தேசிய விளையாட்டுக்கள் தினமாகக் கொண்டாடவும் செய்கிறது. என் மனதில் ஓர் எண்ணம்…. ஒரு வேளை மேஜர் தியான்சந்த் அவர்களின் ஆன்மா எங்கே இருந்தாலும், மிகவும் சந்தோஷத்தை அனுபவிக்கும் இல்லையா? ஏனென்றால் உலகெங்கிலும் ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் முரசை தியான்சந்த் அவர்களின் ஹாக்கி தான் ஓங்கி ஒலிக்கச் செய்தது. நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் கழித்து, பாரதநாட்டின் இளைஞர்கள், ஆடவர் மற்றும் பெண்கள், ஹாக்கியில் மீண்டும் ஒரு முறை உயிரூட்டியிருக்கின்றார்கள். எத்தனைப் பதக்கங்கள் கிடைத்தாலும், ஹாக்கியில் பதக்கம் கிடைக்காத வரையில் பாரத நாட்டின் எந்த ஒரு குடிமகனுக்கும் முழுமையான ஆனந்தம் கிடைக்காது.Through the Swachh Bharat Abhiyan, we are ensuring cleaner and healthier environment for our children: PM Modi
February 11th, 12:45 pm
PM Modi took part in the 3 billionth meal of Akshaya Patra mid-day meal programme in Vrindavan today where he served food to children. Addressing a gathering at the event, PM Modi spoke at length about Centre's flagship initiatives like Mission Indradhanush and National Nutrition Mission. Stressing on cleanliness, the PM said, Swachhata is an important aspect of any child's health. Through the Swachh Bharat Abhiyan, we are ensuring cleaner and healthier environment fo rour children.ஆதரவற்ற குழந்தைகளுக்கான உணவு வழங்கும் திட்டத்தில் 300-வது கோடி அன்னதானத்தை பிருந்தாவனத்தில் பிரதமர் வழங்கினார்.
February 11th, 12:44 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி உத்தரப்பிரதேசம் மாநிலம் பிருந்தாவனுக்கு இன்று வருகை தந்தார். அப்போது அங்குள்ள சந்திரோதயா கோவிலில் அக்ஷ்ய பாத்திர அறக்கட்டளை சார்பில் 300-வது கோடி அன்னதானம் வழங்குவதைக் குறிக்கும் வகையிலான பெயர் பலகையை அவர் திறந்து வைத்தார். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு 300-வது கோடி அன்னதானத்தை பிரதமர் வழங்கினார். இஸ்கான் அமைப்பின் தலைவர் ஸ்ரீலா பிரபுபாதாவின் உருவச்சிலைக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பிருந்தாவனத்தில் உள்ள குழந்தைகளுக்கு நாளை 300-வது கோடி அன்னதானத்தை பிரதமர் வழங்குவார்
February 10th, 12:27 pm
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிருந்தாவனத்திற்கு நாளை (பிப்ரவரி 11, 2019) பிரதமர் திரு. நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.