கயானா அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தை

November 21st, 04:23 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 20 அன்று ஜார்ஜ்டவுனில் உள்ள அரசு இல்லத்தில் கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலியை சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்தபோது, அவரை அதிபர் அலி வரவேற்று மரியாதை அளித்தார்.

2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய நிறைவுரை

November 21st, 02:21 am

உங்கள் அனைவரின் மதிப்புமிக்க ஆலோசனைகளையும், நேர்மறையான எண்ணங்களையும் நான் வரவேற்கிறேன். இந்தியாவின் முன்மொழிவுகளுக்கு மதிப்பளித்து, எனது குழுவினர் அனைத்து விவரங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து துறைகளிலும் நாம் முன்னேறிச் செல்வோம்.

நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி இடைமாற்றம் குறித்த ஜி20 அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை

November 20th, 01:40 am

இன்றைய அமர்வின் கருப்பொருள் மிகவும் பொருத்தமானது, மேலும் இது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. புதுதில்லி ஜி-20 உச்சிமாநாட்டின்போது, நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதை விரைவுபடுத்த வாரணாசி செயல் திட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டோம்.

நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றம் குறித்த ஜி20 அமர்வில் பிரதமரின் உரை

November 20th, 01:34 am

நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றம் குறித்த ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். 2030-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை மும்மடங்காக உயர்த்தவும், எரிசக்தி சிக்கன விகிதத்தை இரட்டிப்பாக்கவும் இந்தக் குழு புதுதில்லி ஜி-20 உச்சிமாநாட்டின் போது தீர்மானித்திருந்ததை பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிலையான வளர்ச்சி முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான பிரேசிலின் முடிவை அவர் வரவேற்றார்.

நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்

November 12th, 07:44 pm

பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய நாடுகளுக்கு நவம்பர் 16-21 தேதிகளில் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். நைஜீரியாவில், மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்தவும், இந்திய சமூகத்தில் உரையாற்றவும் அவர் உயர்மட்ட விவாதங்களில் ஈடுபடுவார். பிரேசிலில் அவர் ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார். கயானாவில், பிரதமர் மூத்த தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவார், பாராளுமன்றத்தில் உரையாற்றுவார், கரீபியன் பிராந்தியத்துடனான உறவுகளை ஆழப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டும் CARICOM-இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்பார்.

இந்திய– மலேசிய விரிவான உத்திசார் கூட்டாண்மை குறித்த கூட்டறிக்கை

August 20th, 08:39 pm

ஆகஸ்ட் ​20, 2024 அன்று, மலேசியப் பிரதமர் டத்தோ அன்வர் இப்ராஹிம், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அன்பான அழைப்பை ஏற்று, அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார். தெற்காசிய பிராந்தியத்திற்கு மலேசிய பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும், மேலும் இரு பிரதமர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். இந்திய-மலேசிய உறவுகளை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றும் பல துறைகளை இந்த விரிவான விவாதங்கள் உள்ளடக்கியிருந்தது.

உலகளாவிய தெற்கின் குரல் அமைப்பின் 3-வது மாநாட்டுத் தலைவர்களின் தொடக்க அமர்வில் பிரதமரின் நிறைவுரை

August 17th, 12:00 pm

உங்களது மதிப்புமிக்க யோசனைகள் மற்றும் கருத்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும், நமக்கு பொதுவான பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். உங்களது கருத்துகள் உலகளாவிய தெற்கு அமைப்பு ஒன்றுபட்டுள்ளது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

The Voice of Global South Summit is a platform where we amplify the needs and aspirations of those often unheard: PM Modi

August 17th, 10:00 am

Prime Minister Narendra Modi, during his opening remarks at the 2024 Voice of Global South Summit, emphasized India's commitment to inclusive development, global cooperation, and addressing challenges like climate change, health security, and technological pides. He highlighted India's role in amplifying the voices of Global South nations within the G20 and shared initiatives to enhance digital infrastructure and healthcare partnerships across the Global South.

ஜனநாயகத்துக்கான உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய காணொலி உரை

March 20th, 10:55 pm

இந்த முயற்சியைத் தொடரும் அதிபர் யூன் சுக் இயோலுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடு, ஜனநாயக நாடுகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும் ஒரு முக்கியமான தளமாக உருவெடுத்துள்ளது.

ஜனநாயகத்துக்கான உச்சிமாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்

March 20th, 10:44 pm

உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நாடுகள் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவும், அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஜனநாயகத்திற்கான உச்சிமாநாடு ஒரு முக்கியமான மேடையாக அமையும் என்று கூறிய பிரதமர், ஜனநாயகத்தின் மீதான இந்தியாவின் ஆழமான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். அது இந்திய நாகரிகத்தின் உயிர்நாடி என அவர் மேலும் வலியுறுத்துகையில், ஒருமித்த கருத்தை உருவாக்குதல், திறந்த உரையாடல் மற்றும் சுதந்திரமான விவாதம் ஆகியவை இந்தியாவின் வரலாறு முழுவதும் எதிரொலித்துள்ளன. அதனால்தான் எனது சக குடிமக்கள் இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று கருதுகின்றனர்’’ என்றார்.

உஸ்பெகிஸ்தான் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

December 01st, 09:36 pm

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சர்வதேச பருவநிலை (சிஓபி-28) உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி 01 டிசம்பர் 2023 அன்று உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவை சந்தித்தார்.

Human-Centric approach should be the way forward for G20 Nations: PM Modi

November 22nd, 09:39 pm

PM Modi made the concluding remarks at the Virtual G20 Summit. He emphasized on the path-breaking G20 Leaders' Declaration that was accorded a unanimous acceptance. He also reiterated the commitment of 'Zero Tolerance' to terrorism and reinforced the concept of the 'Two State Solution' for the Israel-Palestine conflict.

காணொலி வாயிலான ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் (நவம்பர் 22, 2023) பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்

November 22nd, 06:37 pm

எனது அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 140 கோடி இந்தியர்களின் சார்பாக, உங்கள் அனைவரையும் மனதார வரவேற்கிறோம்.

India is poised to continue its trajectory of success: PM Modi

November 17th, 08:44 pm

Speaking at the BJP's Diwali Milan event at the party's headquarters in New Delhi, Prime Minister Narendra Modi reiterated his commitment to transform India into a 'Viksit Bharat,' emphasizing that these are not merely words but a ground reality. He also noted that the 'vocal for local' initiative has garnered significant support from the people.

உலகளாவிய தெற்கின் குரல் 2-வது உச்சிமாநாட்டின் நிறைவு அமர்வில் பிரதமரின் தொடக்க உரையின் தமிழாக்கம்

November 17th, 05:41 pm

இன்று லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் தீவுகளைச் சேர்ந்த சுமார் 130 நாடுகள் இந்த ஒரு நாள் உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ளன என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு வருடத்திற்குள் உலகளாவிய தென்பகுதி நாடுகளின் இரண்டு உச்சிமாநாடுகளை நடத்துவதும், அவற்றில் அதிக எண்ணிக்கையிலான நீங்கள் பங்கேற்பதும் உலகிற்கு ஒரு குறிப்பிடத்தக்க செய்தியை அனுப்புகிறது. உலகளாவிய தென்பகுதி நாடுகள் அதன் சுயாட்சியை விரும்புகிறது என்பதே செய்தி.

PM Modi addresses Diwali Milan programme at BJP HQ, New Delhi

November 17th, 04:42 pm

Speaking at the BJP's Diwali Milan event at the party's headquarters in New Delhi, Prime Minister Narendra Modi reiterated his commitment to transform India into a 'Viksit Bharat,' emphasizing that these are not merely words but a ground reality. He also noted that the 'vocal for local' initiative has garnered significant support from the people.

உலகளாவிய தென்பகுதி நாடுகளின் 2 வது குரல் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்

November 17th, 04:03 pm

140 கோடி இந்தியர்களின் சார்பாக, உலகளாவிய தென்பகுதி நாடுகளின் 2 வது குரல் உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வுக்கு உங்கள் அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன். உலகின் தென்பகுதி நாடுகளின் குரல் என்பது 21 ஆம் நூற்றாண்டின் மாறிவரும் உலகின் மிகவும் தனித்துவமான தளமாகும். நாம் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகள், ஆனால் நமக்குள் ஒரே நலன்கள், ஒரே முன்னுரிமைகள் உள்ளன.

15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு

August 23rd, 03:30 pm

15-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை பிரமாண்டமாக ஏற்பாடு செய்ததற்காகவும், எங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காகவும் எனது அன்பு நண்பர் அதிபர் ராமஃபோசாவுக்கு நான் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி 20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நிகழ்த்திய உரை

July 28th, 09:01 am

வரலாறும் பண்பாடும் நிறைந்த சென்னைக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்! யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரத்தைக் காண உங்களுக்கு சிறிது நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். அதன் மனம்கவரும் கற்சிற்பங்கள் மற்றும் சிறந்த அழகு கொண்ட இது, கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்.

சென்னையில் நடைபெற்ற ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் உரை

July 28th, 09:00 am

சென்னை வந்த முக்கிய பிரமுகர்களை வரவேற்ற பிரதமர், சென்னை நகரம் கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்பு நிறைந்தது என்று குறிப்பிட்டார். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் சின்னமான மாமல்லபுரம் 'கட்டாயம் பார்க்க வேண்டிய' இடம் என்பதைக் கண்டுகளித்து மனம்கவரும் கற்சிற்பங்களையும் அதன் மகத்தான அழகையும் அனுபவிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.