விவாடெக்கின் ஐந்தாம் பதிப்பில் பிரதமரின் உரை
June 16th, 04:00 pm
பிரெஞ்ச் ஓபன் போட்டிகளை ஏராளமான இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பார்த்தனர். இந்திய தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், இந்தப் போட்டிக்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவை அளித்தது. அதேபோல பிரான்ஸ் நிறுவனமான ஏடாஸ், இந்தியாவில் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கும் திட்டத்தில் பணியாற்றி வருகிறது. பிரான்ஸ் நாட்டின் கேப்ஜெமினி அல்லது இந்தியாவின் டிசிஎஸ், விப்ரோ என நமது தொழில்நுட்ப திறமையாளர்கள் உலகெங்கும் உள்ள நிறுவனங்கள் மற்றும் மக்களுக்காக சேவையாற்றுகிறார்கள்.விவாடெக் மாநாட்டின் ஐந்தாவது பதிப்பில் பிரதமர் சிறப்புரையாற்றினார்
June 16th, 03:46 pm
விவாடெக்கின் ஐந்தாவது பதிப்பில் காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். 2016 முதல் பாரிஸ் நகரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஐரோப்பாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மற்றும் ஸ்டார்ட் அப் நிகழ்ச்சிகளில் ஒன்றான விவாடெக்கில் சிறப்புரை ஆற்ற மதிப்புறு விருந்தினராக பிரதமர் அழைக்கப்பட்டிருந்தார்.விவாடெக்கின் 5-ஆம் பதிப்பில் ஜூன் 16-ஆம் தேதி பிரதமர் முக்கிய உரையாற்றுகிறார்
June 15th, 02:16 pm
விவாடெக்கின் 5-ஆம் பதிப்பு நிகழ்ச்சியில், 2021 ஜூன் 16, மாலை 4 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி முக்கிய உரை நிகழ்த்தவிருக்கிறார். விவாடெக் 2021 நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக முக்கிய உரை நிகழ்த்துவதற்கு பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.