டி-20 உலக சாம்பியன் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் நிகழ்த்திய உரையாடலின் தமிழாக்கம்

July 05th, 04:00 pm

நண்பர்களே, வருக! நாட்டை உற்சாகத்தாலும், கொண்டாட்டத்தாலும் நீங்கள் எவ்வாறு நிரப்பியிருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கும்போது நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். நமது நாட்டு மக்கள் அனைவரின் நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் நீங்கள் விஞ்சிவிட்டீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! வழக்கமாக இரவு நேரத்தில் நான் அலுவலகத்தில் வெகுநேரம் பணியாற்றுகிறேன். ஆனால் இந்த நேரத்தில் தொலைக்காட்சி இயங்கிக்கொண்டிருந்தது. எனது கோப்புகளில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. நீங்கள் குறிப்பிடத்தக்க அணி உணர்வையும், திறமையையும், பொறுமையையும் வெளிப்படுத்தினீர்கள். நீங்கள் மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்களாக இருந்தீர்கள். எனவே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்

June 30th, 02:06 pm

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (30-06-2024) தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார். போட்டியில் அணி வீரர்கள் வெளிப்படுத்திய திறன்களையும் அவர்களது சிறந்த உணர்வையும் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 50-வது சதம் அடித்த விராட் கோலிக்கு பிரதமர் பாராட்டு

November 15th, 08:08 pm

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்கள் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐசிசி டி20 போட்டியில் வெற்றிபெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

October 23rd, 11:00 pm

The Prime Minister, Shri Narendra Modi congratulated Indian cricket team for their well fought victory over Pakistan inI CC T20 match.

உடல்தகுதி மிக்க இந்தியா இயக்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவு நாளில் `உடல்தகுதி மிக்க இந்தியா கலந்துரையாடலில்’ பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

September 24th, 12:01 pm

நாட்டிற்கு உத்வேகம் அளித்த இதுபோன்ற ஏழு சிறந்த ஆளுமைகளுக்கும் இன்று நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், ஏனென்றால் உங்கள் நேரத்தை செலவழித்து சொந்த அனுபவங்களைச் சொன்னீர்கள். இது ஒவ்வொரு தலைமுறைக்கும் மிகவும் பயனளிக்கும் என்று நான் நினைக்கிறேன். இன்றைய கலந்துரையாடல் அனைத்து வயதினருக்கும், பல்வேறு தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல்தகுதி மிக்க இந்தியா இயக்கத்தின் முதல் ஆண்டு நிறைவு நாளில், நாட்டு மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

வயதுக்கு உகந்த உடல்தகுதி பயிற்சிகள் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர்

September 24th, 12:00 pm

உடல்தகுதி மிக்க இந்தியா இயக்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவை ஒட்டி இன்று காணொலிக் காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி,வயதுக்கு உகந்த உடல்தகுதி பயிற்சிகள் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு பிரதமர் திரு மால்கம் டர்ன்புல் அவர்களே, ஊடக நண்பர்களே, வணக்கம்!

April 10th, 02:15 pm

இந்தியாவுக்கு முதல் முறையாக வருகைதரும் உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்த மாதம் பார்டர் – கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் கண்டு களித்தோம். 2014ம் ஆண்டு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றியபோது, ஆஸ்திரேலியாவின் பழம்பெரும் வீரர் பிராட்மேன், இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை நினைவுகூர்ந்தேன். இன்று இந்தியாவில் விராட் கோலியும் ஆஸ்திரேலியாவில் ஸ்டீபன் ஸ்மித்தும் இளம் கிரிக்கெட் வீரர்களைச் செதுக்குகிறார்கள். உங்களது இந்திய வருகை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் ஸ்டீபன் ஸ்மித்தின் பேட்டிங் ஆட்டத்தைப் போல ஆக்கப்பூர்வமாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.

PM Modi appreciates Cricketer Virat Kohli's efforts towards Swachh Bharat initiative

October 07th, 08:07 pm

PM Narendra Modi appreciated cricketer Virat Kohli for his efforts towards Swachh Bharat initiative. The PM tweeted saying, Dear Virat Kohli, saw your #MyCleanIndia moment on ABP news. A small but powerful gesture that will surely inspire everyone.