உத்தராகண்ட் உருவாக்க தினத்தையொட்டி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

November 09th, 11:00 am

உத்தராகண்ட் மாநிலத்தின் வெள்ளி விழா ஆண்டு இன்று தொடங்குகிறது. அதாவது, உத்தரகண்ட் அதன் 25 வது ஆண்டில் நுழைகிறது. நாம் முன்னோக்கிப் பார்க்கும்போது, உத்தராகண்டின் பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்க உறுதிபூண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான பயணத்தை நாம் தொடங்க வேண்டும். இதில் ஒரு மகிழ்ச்சிகரமான தற்செயல் நிகழ்வு உள்ளது: நமது முன்னேற்றம் தேசிய வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட 25 ஆண்டுகால குறிப்பிடத்தக்க காலகட்டமான பாரதத்தின் அமிர்த காலத்துடன் ஒத்துப்போகிறது. இந்த சங்கமம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒரு பகுதியாக வளர்ச்சியடைந்த உத்தராகண்ட் என்ற தொலைநோக்குப் பார்வையை எடுத்துக்காட்டுகிறது. இந்த சகாப்தத்தில் நமது பகிரப்பட்ட விருப்பங்கள் நனவாகின்றன. வரும் 25 ஆண்டுகளுக்கான இலக்குகளை மையமாகக் கொண்டு உத்தராகண்ட் மக்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்வுகள் மூலம், உத்தராகண்டின் பெருமை கொண்டாடப்படும். வளர்ந்த உத்தராகண்ட் என்ற பார்வை ஒவ்வொரு குடியிருப்பாளரிடமும் எதிரொலிக்கும். இந்த முக்கியமான தருணத்தில், இந்த முக்கியமான தீர்மானத்திற்காக, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு நாட்கள் முன்பாக, வெளிநாடுவாழ் இந்தியத் தலைவர் உத்தராகண்ட் சம்மேளனமும் வெற்றிகரமாக நடைபெற்றது. மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தில் புலம்பெயர்ந்த நமது உத்தராகண்ட் மக்கள் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்காற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

தேவபூமி உத்தராகண்ட் மாநிலத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு உத்தராகண்ட் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

November 09th, 10:40 am

உத்தராகண்ட் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், உத்தராகண்ட் மாநிலம் உருவான வெள்ளி விழா ஆண்டு இன்று முதல் தொடங்குகிறது என்று குறிப்பிட்டார். உத்தராகண்ட் மாநிலம் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, அடுத்த 25 ஆண்டுகளில் ஒளிமயமான எதிர்காலத்திற்காக மாநில மக்கள் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். வரவிருக்கும் உத்தராகண்டின் 25 ஆண்டுகால பயணம் ஒரு பெரிய நிகழ்வு என்று கூறிய அவர், இந்தியா அதன் அடுத்த 25 ஆண்டு கால அமிர்த காலத்தில், வளர்ச்சி அடைந்த பாரதத்தில் வளர்ச்சியடைந்த உத்தராகண்டையும் உள்ளடக்கியுள்ளது என்று கூறினார். இந்தக் காலகட்டத்தில் நமது தீர்மானம் நிறைவேற்றப்படுவதை நாடு காணும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். எதிர்வரும் 25 ஆண்டுகளில் தீர்மானங்களுடன் பல்வேறு திட்டங்களை மக்கள் மேற்கொண்டிருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் மூலம் உத்தராகண்டின் பெருமை பரவும் என்றும், வளர்ச்சியடைந்த உத்தராகண்ட் என்ற இலக்கு மாநிலத்தின் ஒவ்வொரு நபரையும் சென்றடையும் என்றும் அவர் கூறினார். இந்த முக்கியமான தருணத்தில், இந்த முக்கியமான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதற்காகவும் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அண்மையில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்ட 'பிரவாசி உத்தராகண்ட் சம்மேளனம்' நிகழ்ச்சியை குறிப்பிட்ட பிரதமர், வெளிநாடு வாழ் உத்தராகண்ட் மக்கள் உத்தராகண்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.