ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 'ஓராண்டு நிறைவில் முன்னேற்றம்' நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
December 17th, 12:05 pm
கோவிந்த் நகரில் நான் கோவிந்த் தேவ் அவர்களுக்கு வணக்கங்களைச் செலுத்துகிறேன். அனைவருக்கும் என் வணக்கங்கள்!ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 'ஓராண்டு முடிவில் முன்னேற்றம்' நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
December 17th, 12:00 pm
ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டு நிறைவையொட்டி கொண்டாடப்பட்ட ஓராண்டு முடிவில் முன்னேற்றம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அவர், ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக ராஜஸ்தான் அரசுக்கும், ராஜஸ்தான் மக்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களின் ஆசீர்வாதங்களைப் பெறும் அதிர்ஷ்டம் தமக்கு கிடைத்தது என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தானின் வளர்ச்சிப் பணிகளுக்கு புதிய திசை காட்டுவற்கும் வேகத்தை அதிகரிப்பதற்கும் மேற்கொண்ட முயற்சிகளுக்காக ராஜஸ்தான் முதலமைச்சர் மற்றும் அவரது குழுவினரை திரு மோடி பாராட்டினார். முதலாம் ஆண்டு வரவிருக்கும் பல ஆண்டு வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார். இன்றைய நிகழ்ச்சி அரசின் ஓராண்டு நிறைவைக் குறிப்பது மட்டுமின்றி, ராஜஸ்தானின் பிரகாசமான ஒளியையும் ராஜஸ்தானின் வளர்ச்சித் திருவிழாவையும் அடையாளப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தான் எழுச்சி உச்சி மாநாடு 2024-க்கு அண்மையில் தாம் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்த திரு மோடி, உலகெங்கிலும் உள்ள பல முதலீட்டாளர்கள் அதில் கலந்து கொண்டதாகவும், இன்று ரூ .45,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் ராஜஸ்தானில் தண்ணீர் தொடர்பாக எதிர்கொள்ளும் தடைகளுக்கு பொருத்தமான தீர்வை வழங்கும் என்றும், இந்தியாவுடன் மிகவும் நன்கு இணைக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தானை மாற்றும் என்றும் அவர் கூறினார். இந்த வளர்ச்சிப் பணிகள் அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கும், ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும், சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும். ராஜஸ்தானின் விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024- இன் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
December 09th, 11:00 am
ராஜஸ்தான் ஆளுநர் திரு ஹரிபாவ் பகடே அவர்களே, மாநில முதலமைச்சர் திரு பஜன்லால் ஜி சர்மா அவர்களே, ராஜஸ்தான் அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தொழில்துறை நண்பர்களே, பல்வேறு நாடுகளின் தூதர்களே, தூதரகப் பிரதிநிதிகளே, பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களேராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
December 09th, 10:34 am
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024 மற்றும் ராஜஸ்தான் உலகளாவிய வர்த்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், ராஜஸ்தானின் வெற்றிப் பயணத்தில் இன்று மற்றுமொரு சிறப்பான நாள் என்று குறிப்பிட்டதோடு ஜெய்ப்பூரில் உள்ள பிங்க் சிட்டியில் நடைபெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சி மாநாடு 2024-ல் பங்கேற்ற தொழில்துறை மற்றும் வர்த்தகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், பிரதிநிதிகளுக்கு வாழ்த்தும் தெரிவித்தார். இந்தப் பிரம்மாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக ராஜஸ்தான் அரசையும் அவர் பாராட்டினார்.Congress considers their family bigger than the nation: PM Modi in Kotputli
April 02nd, 03:33 pm
Launching the BJP-led NDA's campaign in Rajasthan’s Kotputli for the Lok Sabha polls, Prime Minister Narendra Modi reminisced about how he highlighted the magnificence of Jaipur a few days ago during the visit of the President of France. The PM said, “The first electoral rally of my Rajasthan campaign began in Dhundhar in 2019. Now, in 2024, the electoral campaign begins again from the same region. You have also made your decision – ‘Phir Ek Baar, Modi Sarkar’.”PM Modi delivers an impactful speech at a public gathering in Kotputli, Rajasthan
April 02nd, 03:30 pm
Launching the BJP-led NDA's campaign in Rajasthan’s Kotputli for the Lok Sabha polls, Prime Minister Narendra Modi reminisced about how he highlighted the magnificence of Jaipur a few days ago during the visit of the President of France. The PM said, “The first electoral rally of my Rajasthan campaign began in Dhundhar in 2019. Now, in 2024, the electoral campaign begins again from the same region. You have also made your decision – ‘Phir Ek Baar, Modi Sarkar’.”ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் முப்படைகளின் 'பாரத் சக்தி' பயிற்சி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 12th, 02:15 pm
ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனதுநண்பர்கள் திரு ராஜ்நாத் சிங் அவர்களே, திரு கஜேந்திர ஷெகாவத் அவர்களே, திரு கைலாஷ் சவுத்ரி அவர்களே, பொதுப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பேராசிரியர் திரு அஜய் சூட் அவர்களே, முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் அவர்களே, விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி அவர்களே, கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி குமார் அவர்களே, ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே அவர்களே, மூத்த அதிகாரிகளே, முப்படைகளின் துணிச்சலான வீரர்களே, பொக்ரானில் கூடியிருக்கும் எனதருமை சகோதர சகோதரிகளே!ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் முப்படைகளின் 'பாரத் சக்தி' பயிற்சியை பிரதமர் பார்வையிட்டார்
March 12th, 01:45 pm
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று முப்படைகளின் நேரடி பயிற்சியின் வடிவத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களை ஒருங்கிணைத்து செய்யப்பட்ட செயல் விளக்கத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடியை பார்வையிட்டார். நாட்டின் தற்சார்பு இந்தியா முன்முயற்சியை அடிப்படையாகக் கொண்ட நாட்டின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் 'பாரத் சக்தி' உள்நாட்டு ஆயுத அமைப்புகள் மற்றும் தளங்களின் வரிசையைக் கொண்டிருக்கும்.வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சி அடைந்த ராஜஸ்தான் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 16th, 11:30 am
உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தவும், அதை மக்களிடையே கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கும் முதலமைச்சரையும் நான் பாராட்டுகிறேன். சில நாட்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் பிரான்ஸ் அதிபருக்கு நீங்கள் அளித்த சிறப்பான வரவேற்பு பாரதத்தில் மட்டுமல்லாமல் பிரான்ஸ் நாட்டிலும் எதிரொலித்தது. இது ராஜஸ்தான் மக்களின் அடையாளம். நமது சக ராஜஸ்தானியர்கள் தாங்கள் மிகவும் நேசிப்பவர்கள் மீது தங்கள் பாசத்தைப் பொழிவதற்கு எந்த முயற்சியையும் விட்டுவைப்பதில்லை. சட்டமன்றத் தேர்தலின் போது, நான் ராஜஸ்தானுக்கு வருகை தந்த போதெல்லாம் நீங்கள் எங்களுக்கு அளித்த மகத்தான ஆதரவை நான் நினைவு கூர்கிறேன். நீங்கள் அனைவரும் மோடியின் உத்தரவாதத்தின் மீது நம்பிக்கை வைத்து, ஒரு வலுவான 'இரட்டை இன்ஜின்' அரசை அமைத்தீர்கள். இப்போது, ராஜஸ்தானில் விரைவான முன்னேற்றத்தை நாம் காண்கிறோம். இன்று, ராஜஸ்தானின் வளர்ச்சிக்காக சுமார் ரூ. 17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நாங்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளோம். இந்தத் திட்டங்களுக்கு பங்களிப்பு அளித்த ராஜஸ்தானைச் சேர்ந்த எனது நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான்' நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
February 16th, 11:07 am
வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். இந்த நிகழ்வில் 17,000 கோடி மதிப்பிலான சாலைகள், ரயில்வே, சூரிய மின்சக்தி, மின் பகிர்மானம், குடிநீர், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல முக்கிய துறைகளைச் சேர்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான்' நிகழ்ச்சியில் பிப்ரவரி 16 அன்று பிரதமர் உரையாற்றுகிறார்
February 15th, 03:07 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 16 அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் ''வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான்' நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது, ரூ.17,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நிறைவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். சாலைகள், ரயில்வே, சூரிய மின்சக்தி, மின் பகிர்மானம், குடிநீர் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல முக்கிய துறைகள் இந்தத் திட்டங்களில் அடங்கும்.