சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தின் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 22nd, 03:34 pm

விக்ரம் சம்வாத் 2080ஐ முன்னிட்டு உங்களுக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆறாம் தலைமுறை தொழில்நுட்ப சோதனைத்தளமும் இன்று அறிமுகமாகியுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் சம்பந்தமான நமது தொலைநோக்கு ஆவணமும் வெளியாகி உள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் இந்தியாவில் புதிய ஆற்றல் ஏற்படுவதோடு, தெற்கு ஆசியா மற்றும் உலகளாவிய தெற்கு பகுதிகளுக்குத் தீர்வுகளும், புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகும். இது குறிப்பாக கல்வியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையைச் சார்ந்தவர்களுக்கு ஏராளமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

March 22nd, 12:30 pm

இந்தியாவில் புதிய சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் (ஐடியு) பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தை புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணம் மற்றும் 6ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சோதனைத் தளத்தையும் தொடங்கி வைத்தார். ‘கால் பிஃபோர் யு டிக்’ செயலியையும் அவர் தொடங்கி வைத்தார். சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் என்பது தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களுக்கான ஐ.நா.-வின் சிறப்பு முகமையாகும். இந்த முகமை இந்தியாவில் பகுதி அலுவலகத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இந்த அலுவலகம் இந்தியா, நேபாளம், பூட்டான், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளுக்கு சேவை புரியும். இந்த நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை அதிகரிப்பதுடன், பிராந்தியத்தில் பரஸ்பர பயனுள்ள பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.

PM Modi's Mann Ki Baat: Tourism, farmers, under 17 FIFA world cup and more

March 27th, 11:30 am