சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்து இஸ்ரோ குழுவினரிடம் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 26th, 08:15 am

இன்று, உங்கள் அனைவர் மத்தியிலும் ஒரு புதிய வகையான மகிழ்ச்சியை உணர்கிறேன். மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் அத்தகைய மகிழ்ச்சியை உணரலாம். நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தேன், பின்னர் கிரிசில் ஒரு நிகழ்ச்சி இருந்தது. எனவே நான் அங்கு இருக்க வேண்டியிருந்தது. ஆனால் என் மனம் முழுவதும் உங்கள் மீது இருந்தது. நீங்கள் அதிகாலையில் இங்கே இருக்க வேண்டும், ஆனால் நான் வந்து உங்களுக்கு மரியாதை அளிக்க விரும்பினேன். இது உங்களுக்கு அசௌகரியமாக இருந்திருக்கலாம், ஆனால் நான் இந்தியாவில் தரையிறங்கியவுடன் உங்களைப் பார்க்க விரும்பினேன். நான் உங்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்த விரும்பினேன், உங்கள் கடின உழைப்பை வணங்கினேன், உங்கள் பொறுமைக்கு வணக்கம் செலுத்தினேன், உங்கள் ஆர்வத்தை வணங்கினேன், உங்கள் உயிர்ப்புக்கு வணக்கம் செலுத்தினேன், உங்கள் ஆன்மாவுக்கு வணக்கம் செலுத்தினேன். நீங்கள் நாட்டை எந்த உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறீர்களோ அது சாதாரண வெற்றி அல்ல. எல்லையற்ற விண்வெளியில் இந்தியாவின் அறிவியல் திறனின் பிரகடனம் இது.

சந்திரயான்-3 வெற்றி குறித்து இஸ்ரோ குழுவினரிடையே பிரதமர் உரை

August 26th, 07:49 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி கிரீஸ் நாட்டிலிருந்து வந்த உடன் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தொலை கண்காணிப்பு மற்றும் கட்டளைக் கட்டமைப்பான இஸ்ட்ராக்-கைப் (ISRO Telemetry Tracking and Command Network - ISTRAC) பார்வையிட்டு, சந்திரயான் -3-ன் வெற்றி குறித்து இஸ்ரோ குழுவினரிடையே உரையாற்றினார். சந்திரயான் -3 திட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் சந்தித்து கலந்துரையாடினார். அங்கு சந்திரயான் -3 திட்டத்தின் புதிய தகவல்கள் மற்றும் முன்னேற்றம் குறித்தும் பிரதமருக்கு விளக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் தனியார் செலுத்து வாகனமான விக்ரம்-எஸ் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ மற்றும் இன்-ஸ்பேஸ் அமைப்புகளுக்கு பிரதமர் பாராட்டு

November 18th, 05:33 pm

இந்தியாவின் முதலாவது செலுத்து வாகனமான விக்ரம்-எஸ் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையமான இன்-ஸ்பேஸ் ஆகிய அமைப்புகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.