I consider industry, and also the private sector of India, as a powerful medium to build a Viksit Bharat: PM Modi at CII Conference
July 30th, 03:44 pm
Prime Minister Narendra Modi attended the CII Post-Budget Conference in Delhi, emphasizing the government's commitment to economic reforms and inclusive growth. The PM highlighted various budget provisions aimed at fostering investment, boosting infrastructure, and supporting startups. He underscored the importance of a self-reliant India and the role of industry in achieving this vision, encouraging collaboration between the government and private sector to drive economic progress.இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த மத்திய பட்ஜெட் குறித்த மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் உரை
July 30th, 01:44 pm
புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த வளர்ந்த பாரதத்தை நோக்கிய பயணம்: மத்திய பட்ஜெட்டுக்கு பிந்தைய 2024-25 மாநாடு தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். வளர்ச்சிக்கான அரசின் பரந்த பார்வை மற்றும் தொழில்துறையின் பங்கு ஆகியவற்றை முன்வைப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்துறை, அரசு, தூதரக பிரதிநிதிகள், சிந்தனையாளர்கள் ஆகியவற்றிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மாநாட்டில் நேரில் கலந்து கொண்டனர், உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு சிஐஐ மையங்களிலிருந்தும் பலர் இணைந்தனர்.இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் ஜூலை 30 அன்று நடைபெறவுள்ள பட்ஜெட்டுக்குப் பிந்தைய மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் உரையாற்றவுள்ளார்
July 29th, 12:08 pm
புதுதில்லியில் உள்ள விக்ஞான் பவனில் 2024, ஜூலை 30, அன்று வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கியப் பயணம், மத்திய பட்ஜெட் 2024-25-க்கு பிந்தைய மாநாடு என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்தின் காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமை சட்ட ஆலோசகர்கள் மாநாடு 2024-ஐ பிப்ரவரி 3-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்
February 02nd, 11:10 am
காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்தின் காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமை சட்ட ஆலோசகர்கள் மாநாடு 2024-ஐ 2024 பிப்ரவரி 3 ஆம் தேதி காலை 10 மணியளவில் விஞ்ஞான் பவனில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் படைப்புகள் அடங்கிய தொகுப்பை டிசம்பர் 25-ம் தேதி பிரதமர் வெளியிடுகிறார்
December 24th, 07:47 pm
சுமார் 4,000 பக்கங்கள் கொண்ட 11 தொகுதிகளாக உள்ள இந்த இருமொழி (ஆங்கிலம் மற்றும் இந்தி) படைப்பு, நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் எழுத்துக்கள் மற்றும் உரைகளின் தொகுப்பாகும். இத்தொகுப்புகளில் அவரது கடிதங்கள், கட்டுரைகள், உரைகள், குறிப்புகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 1907 ஆம் ஆண்டில் இவரால் தொடங்கப்பட்ட 'அபயுதயா' என்ற இந்தி வார இதழின் தலையங்க உள்ளடக்கம், அவ்வப்போது அவர் எழுதிய கட்டுரைகள், துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள், 1903 மற்றும் 1910-ம் ஆண்டுக்கு இடையில் ஆக்ரா மற்றும் அவத் ஐக்கிய மாகாணங்களின் சட்ட மேலவையில் அவர் ஆற்றிய அனைத்து உரைகளும் இதில் இடம்பெற்றிருக்கும். ராயல் கமிஷனில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள், 1910 மற்றும் 1920 க்கு இடையில் பிரிட்டிஷ் மன்னராட்சி நாடாளுமன்றத்தில் மசோதாக்களை சமர்ப்பிக்கும் போது ஆற்றிய உரைகள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கு முன்னும் பின்னும் எழுதப்பட்ட கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் உரைகள், மற்றும் 1923 மற்றும் 1925 க்கு இடையில் அவர் எழுதிய குறிப்புகளும் இந்த தொகுப்பு நூலில் இடம்பெறும்.சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023-ஐ செப்டம்பர் 23-ம் தேதி புதுதில்லியில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்
September 22nd, 02:10 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி 23 செப்டம்பர் 2023 அன்று காலை 10 மணிக்கு புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023-ஐ தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்.சிபிஐ வைர விழா கொண்டாட்டங்களை ஏப்ரல் 3-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்
April 02nd, 10:43 am
மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) வைர விழா கொண்டாட்டங்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி ஏப்ரல் 3-ம் தேதி மதியம் 12 மணிக்கு புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறார்.சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தின் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 22nd, 03:34 pm
விக்ரம் சம்வாத் 2080ஐ முன்னிட்டு உங்களுக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆறாம் தலைமுறை தொழில்நுட்ப சோதனைத்தளமும் இன்று அறிமுகமாகியுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் சம்பந்தமான நமது தொலைநோக்கு ஆவணமும் வெளியாகி உள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் இந்தியாவில் புதிய ஆற்றல் ஏற்படுவதோடு, தெற்கு ஆசியா மற்றும் உலகளாவிய தெற்கு பகுதிகளுக்குத் தீர்வுகளும், புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகும். இது குறிப்பாக கல்வியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையைச் சார்ந்தவர்களுக்கு ஏராளமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
March 22nd, 12:30 pm
இந்தியாவில் புதிய சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் (ஐடியு) பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தை புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணம் மற்றும் 6ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சோதனைத் தளத்தையும் தொடங்கி வைத்தார். ‘கால் பிஃபோர் யு டிக்’ செயலியையும் அவர் தொடங்கி வைத்தார். சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் என்பது தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களுக்கான ஐ.நா.-வின் சிறப்பு முகமையாகும். இந்த முகமை இந்தியாவில் பகுதி அலுவலகத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இந்த அலுவலகம் இந்தியா, நேபாளம், பூட்டான், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளுக்கு சேவை புரியும். இந்த நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை அதிகரிப்பதுடன், பிராந்தியத்தில் பரஸ்பர பயனுள்ள பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பின் பகுதி அலுவலகம் & புத்தாக்க மையத்தை பிரதமர் மார்ச் 22-ல் தொடங்கி வைக்கிறார்
March 21st, 04:00 pm
சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பின் பகுதி அலுவலகம் & இந்தியாவில் உள்ள புத்தாக்க மையத்தை விக்யான் பவனில் 22 மார்ச், 2023 மதியம் 12.30-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய தளத்தின் 3-வது அமர்வை பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்
March 09th, 04:48 pm
பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய தளத்தின் 3-வது அமர்வை புதுதில்லி விஞ்ஞான் பவனில் நாளை மாலை 4.30 மணியளவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த 3-வது அமர்வுக்கான கருப்பொருள், “மாறி வரும் பருவ நிலையில் உள்ளூர் விரிவாற்றலைக் கட்டமைத்தல்” என்பதாகும்.லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த தின ஓராண்டுகால நிகழ்வின் நிறைவாக புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
November 25th, 11:00 am
அசாம் ஆளுநர் பேராசிரியர் ஜெகதீஷ் முக்கி அவர்களே, அசாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா அவர்களே, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள எனது நண்பர் திரு சர்பானந்த சோனாவால் அவர்களே, சட்டப்பேரவைத் தலைவர் திரு பிஸ்வஜித் அவர்களே, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அவர்களே, திரு தபன் குமார் கோகோய் அவர்களே, அசாம் மாநில அமைச்சர் பியூஷ் அசாரிகா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அசாம் கலாச்சாரத்தோடு தொடர்புடைய இந்நாட்டின் மற்றும் வெளிநாட்டின் பிரமுகர்களே!லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த தின ஓராண்டுகால நிகழ்வின் நிறைவாக புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் உரையாற்றினார்
November 25th, 10:53 am
லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த தின ஓராண்டுகால நிகழ்வின் நிறைவாக புதுதில்லியில் இன்று (25.11.2022) நடைபெற்ற விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில்,‘லச்சித் போர்புகான் - முகலாயர்களை தடுத்து நிறுத்திய அசாமின் நாயகன்’ என்ற நூலினையும் அவர் வெளியிட்டார்.ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும் லச்சித் பர்புகானின் 400-வது பிறந்ததின நிறைவுநாள் நிகழ்ச்சியில் நவம்பர் 25 அன்று பிரதமர் உரையாற்ற உள்ளார்
November 24th, 11:51 am
ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும் லச்சித் பர்புகானின் 400-வது பிறந்ததினத்தையொட்டி நவம்பர் 25, 2022 அன்று புதுதில்லி விக்யான் பவனில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள நிறைவுநாள் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சியையொட்டி நவம்பர் 3-ம் தேதியன்று பிரதமர் உரையாற்றவுள்ளார்
November 02nd, 04:53 pm
மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, புதுதில்லி விக்யான் பவனில் நவம்பர் 3-ம் தேதியன்று பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.தில்லி கல்காஜியில் புதிதாக கட்டப்பட்ட 3,024 அடுக்குமாடி வீடுகளை பிரதமர் நாளை திறந்துவைக்கிறார்
November 01st, 05:06 pm
குடிசைப் பகுதி மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் தில்லியில் உள்ள கல்காஜியில் புதிதாக கட்டப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 3,024 அடுக்குமாடி வீடுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை துவக்கி வைத்து, பூமிஹீன் முகாம் பயனாளிகளுக்கு வீட்டுச் சாவிகளை வழங்குகிறார். விஞ்ஞான்பவனில் நாளை மாலை 4.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.