Today the youth of India is full of new confidence, succeeding in every sector: PM Modi

December 23rd, 11:00 am

PM Modi addressed the Rozgar Mela and distributed more than 71,000 appointment letters to newly appointed youth in Government departments and organisations. PM Modi underlined that in the last one and a half years, around 10 lakh permanent government jobs have been offered, setting a remarkable record. These jobs are being provided with complete transparency, and the new recruits are serving the nation with dedication and integrity.

PM Modi distributes more than 71,000 appointment letters to newly appointed recruits

December 23rd, 10:30 am

PM Modi addressed the Rozgar Mela and distributed more than 71,000 appointment letters to newly appointed youth in Government departments and organisations. PM Modi underlined that in the last one and a half years, around 10 lakh permanent government jobs have been offered, setting a remarkable record. These jobs are being provided with complete transparency, and the new recruits are serving the nation with dedication and integrity.

Prime Minister Narendra Modi to distribute over 71,000 appointment letters under Rozgar Mela

December 22nd, 09:48 am

PM Modi will distribute more than 71,000 appointment letters to newly appointed recruits. He will also address the gathering on this occasion. Rozgar Mela is a step towards fulfilment of the commitment of PM Modi to accord highest priority to employment generation.

குஜராத் மாநிலம் வாட்டாலில் நவம்பர் 11 அன்று நடைபெறும் ஸ்ரீ சுவாமிநாராயண் ஆலயத்தின் 200-வது ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார்

November 10th, 07:09 pm

குஜராத் மாநிலம் வட்டாலில் நவம்பர் 11 அன்று காலை 11.15 மணியளவில் நடைபெறும் ஸ்ரீ சுவாமிநாராயண் ஆலயத்தின் 200-வது ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார்.

வேலைவாய்ப்பு முகாம் திட்டத்தின் கீழ், அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அக்டோபர் 29 அன்று பிரதமர் நியமனக் கடிதங்களை வழங்குகிறார்

October 28th, 01:05 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள இளைஞர்களுக்கு 51,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை 2024 அக்டோபர் 29 அன்று காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் விநியோகிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.7,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அக்டோபர் 9-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்

October 08th, 07:31 pm

மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.7,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அக்டோபர் 9-ம் தேதி பிற்பகல் 1 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

மகாராஷ்டிராவில் ரூ.11,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு செப்டம்பர் 29 அன்று பிரதமர் அடிக்கல் நாட்டுவதுடன் நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

September 28th, 07:00 pm

மகாராஷ்டிராவில் ரூ.11,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டம்பர் 29 அன்று மதியம் 12:30 மணியளவில் காணொலி மூலம் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

'நீர் சேமிப்பு மக்கள் பங்கேற்பு 'திட்டத்தை செப்டம்பர் 6 அன்று தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்

September 05th, 02:17 pm

குஜராத் மாநிலம் சூரத்தில் 2024, செப்டம்பர் 6 அன்று மதியம் 12:30 மணிக்கு காணொலி காட்சி மூலம் ‘நீர் சேகரிப்பு மக்கள் பங்கேற்பு முன்முயற்சி' தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.

2024 ஆகஸ்ட் 31 அன்று மூன்று வந்தே பாரத் ரயில்களைப் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்

August 30th, 04:19 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2024 ஆகஸ்ட் 31) பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் மூன்று வந்தே பாரத் ரயில்களைக் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிரதமரின் 'மேக் இன் இந்தியா' (இந்தியாவில் உற்பத்தி செய்வோம்), தற்சார்பு இந்தியா ஆகிய தொலைநோக்கு பார்வைகளை நனவாக்கும் வகையில், அதிநவீன வந்தே பாரத் விரைவு ரயில்கள் மூன்று வழித்தடங்களில் இணைப்பை மேம்படுத்தும். மீரட் - லக்னோ, மதுரை - பெங்களூரு, சென்னை - நாகர்கோவில் ஆகியவை அந்த மூன்று வழித்தடங்களாகும்.

Judiciary has consistently played the moral responsibility of being vigilant : PM Modi in Jodhpur

August 25th, 05:00 pm

Prime Minister Narendra Modi attended the Platinum Jubilee celebrations of the Rajasthan High Court in Jodhpur, where he highlighted the importance of the judiciary in safeguarding democracy. He praised the High Court's contributions over the past 75 years and emphasized the need for modernizing the legal system to improve accessibility and efficiency.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

August 25th, 04:30 pm

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இன்று (25.08.2024) ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற அருங்காட்சியகத்தையும் அவர் திறந்து வைத்தார்.

முன்னாள் குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை மற்றும் பயணம் குறித்த மூன்று நூல்களை ஜூன் 30 அன்று பிரதமர் வெளியிடவுள்ளார்

June 29th, 11:03 am

முன்னாள் குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கையா நாயுடுவின் 75வது பிறந்தநாளையொட்டி அவரது வாழ்க்கை மற்றும் பயணம் குறித்த மூன்று நூல்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 30 அன்று நண்பகல் 12 மணிக்குக் காணொலிக் காட்சி மூலம் வெளியிடுவார். இதற்கான நிகழ்வு ஐதராபாதின் கச்சிபௌலியில் உள்ள அன்வயா மாநாட்டு மையத்தில் நடைபெறும்.

மார்ச் 13 அன்று 'இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம்: வளர்ச்சியடைந்த பாரத்துக்கான தொடக்கம்' நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார் மற்றும் சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான மூன்று செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

March 12th, 03:40 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி 'இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம்: வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான தொடக்கம்' நிகழ்ச்சியில் பங்கேற்று, சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள மூன்று செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுக்கு 2024 மார்ச் 13 அன்று காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார்.

ரூ.41,000 கோடி மதிப்புள்ள 2000த்துக்கும் மேற்பட்ட ரயில்வே கட்டமைப்பு திட்டங்களுக்கு பிப்ரவரி 26 அன்று பிரதமர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

February 25th, 03:30 pm

பிப்ரவரி 26 அன்று பிற்பகல் 12:30 மணிக்கு காணொலி மூலம் ரூ.41,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான சுமார் 2,000 ரயில்வே கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான்' நிகழ்ச்சியில் பிப்ரவரி 16 அன்று பிரதமர் உரையாற்றுகிறார்

February 15th, 03:07 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 16 அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் ''வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான்' நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது, ரூ.17,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நிறைவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். சாலைகள், ரயில்வே, சூரிய மின்சக்தி, மின் பகிர்மானம், குடிநீர் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல முக்கிய துறைகள் இந்தத் திட்டங்களில் அடங்கும்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, இலங்கை அதிபர் திரு ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இலங்கை மற்றும் மொரீஷியஸில் யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவைகளை தொடங்கி வைக்க உள்ளனர்

February 11th, 03:13 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, இலங்கை அதிபர் திரு ரணில் விக்ரமசிங்கே மற்றும் மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இலங்கை மற்றும் மொரீஷியஸில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகமான யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே கார்டு சேவைகளையும் 2024 பிப்ரவரி 12 அன்று பிற்பகல் 1 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கின்றனர்.

பிப்ரவரி 10 அன்று 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த குஜராத்' நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்

February 09th, 05:50 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 10, 2024 அன்று பிற்பகல் 1 மணிக்கு காணொலி மூலம் 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த குஜராத்' நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் மற்றும் பிற வீட்டுவசதித் திட்டங்களின் கீழ் குஜராத் முழுவதும் கட்டப்படவுள்ள 1.3 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளின் பூமி பூஜையை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

துங்கர்பூரைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர் ஒருவர் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் பிரதமரை கவர்ந்தார்

January 18th, 04:04 pm

வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். நாடு முழுவதிலும் இருந்து வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணத்தில் ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தெலங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்த படித்த விவசாயி மல்லிகார்ஜுன ரெட்டி வேளாண்மையில் கூட்டு அணுகுமுறையின் மூலம் தனது வருவாயை இரட்டிப்பாக்கியுள்ளார்

January 18th, 03:54 pm

வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். நாடு முழுவதிலும் இருந்து வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் ஜனவரி 18 அன்று பிரதமர் கலந்துரையாடுகிறார்

January 17th, 05:13 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2024, ஜனவரி 18 அன்று பிற்பகல் 12:30 மணிக்கு வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார்.