அகமதாபாத்தில் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரை
December 09th, 01:30 pm
மதிப்பிற்குரிய சுவாமி கௌதமானந்தா ஜி மகராஜ் அவர்களே, ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தின் மதிப்புமிக்க துறவிகளே, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய அனைத்து சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே, வணக்கம்!குஜராத்தில் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
December 09th, 01:00 pm
குஜராத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தா ஜி மகராஜ், ராமகிருஷ்ண மடம் மற்றும் அந்த இயக்கத்தின் துறவிகள், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உள்ளிட்ட அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். சாரதா தேவி, குருதேவ் ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோருக்கு திரு மோடி மரியாதை செலுத்தினார். ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்த மகாராஜின் பிறந்த நாளையொட்டி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.முதலாவது சர்வதேச சூரியசக்தி திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் செய்தி
September 05th, 11:00 am
வேதங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட நூல்கள். வேதங்களில் மிகவும் பிரபலமான மந்திரங்களில் ஒன்று சூரியனைப் பற்றியது. இன்றும் கோடிக்கணக்கான இந்தியர்கள் தினமும் பாராயணம் செய்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்கள் சூரியனுக்கு தங்கள் வழிகளில் மரியாதை அளிக்கின்றனர். மதிக்கின்றன. பெரும்பாலான பகுதிகளில் சூரியனுடன் தொடர்புடைய திருவிழாக்களும் உள்ளன. இந்த சர்வதேச சூரிய திருவிழா சூரியனின் தாக்கத்தை கொண்டாட உலகம் முழுவதையும் ஒன்றிணைக்கிறது. இது ஒரு சிறந்த கிரகத்தை உருவாக்க உதவும் ஒரு திருவிழா.