வள்ளலார் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராமலிங்க சுவாமியின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டுப் பிரதமர் நிகழ்த்திய உரை
October 05th, 02:00 pm
சமூக சீர்திருத்தம் என்று வரும்போது வள்ளலார் தனது காலத்தை விட முன்னணியில் இருந்தார். வள்ளலாரின் கடவுள் மீதான பார்வை மதம், சாதி மற்றும் இன எல்லைகளைத் தாண்டியது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் தெய்வீகத்தைக் கண்ட வள்ளலார், இந்த தெய்வீகத் தொடர்பை மனித குலம் அங்கீகரித்துப் போற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். வள்ளலாரின் போதனைகள் சமத்துவ சமுதாயத்திற்காக பாடுபடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவருக்கு அஞ்சலி செலுத்தும் போது அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்பதன் மீதான நம்பிக்கை மேலும் வலுவடைகிறது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேறுவதற்காக வள்ளலார் ஆசீர்வதித்திருப்பார். வள்ளலாரின் படைப்புகள் எளிமையானவை. அவை படிக்கவும் புரிந்துகொள்ளவும் எளிதானவை. சிக்கலான ஆன்மீக ஞானத்தை எளிய சொற்களில் அவை வெளிப்படுத்துகின்றன. காலத்தாலும் இடத்தாலும் இந்தியாவின் கலாச்சார ஞானத்தில் உள்ள பன்முகத்தன்மை, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கூட்டு எண்ணத்துக்கு வலு சேர்க்கும் மகான்களின் போதனைகளின் பொதுவான பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளது.வள்ளலார் என்று அழைக்கப்படும் ஸ்ரீராமலிங்க அடிகளாரின் 200-வது பிறந்த நாளில் பிரதமர் உரையாற்றினார்
October 05th, 01:30 pm
வள்ளலார் என்று அழைக்கப்படும் ஸ்ரீராமலிங்க அடிகளாரின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணாலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.