Prime Minister condoles the loss of lives in fire accident in Jhansi medical college
November 16th, 08:23 am
Prime Minister Shri Narendra Modi today condoled the loss of lives in the Jhansi Medical college in Uttar Pradesh. He assured that under the state government’s supervision, the local administration is engaged in helping the victims in every possible way.ஹர்தோய் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
November 06th, 05:59 pm
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் நேரிட்ட பெரும் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக தளத்தில் @PMOIndia அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது இரங்கலையும், விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய தனது மனமார்ந்த வேண்டுதல்களையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.தன்வந்தரி ஜெயந்தி மற்றும் 9-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, அக்டோபர் 29 அன்று பிரதமர் சுகாதாரத் துறை தொடர்பான ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார்
October 28th, 12:47 pm
தன்வந்தரி ஜெயந்தி மற்றும் ஒன்பதாவது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 29 அன்று நண்பகல் மதியம் 12:30 மணியளவில், புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் சுமார் ரூ .12,850 கோடி மதிப்புள்ள சுகாதாரத்துறை தொடர்பான பல திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரை
October 20th, 04:54 pm
மேடையில் அமர்ந்திருக்கும் உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, இந்த நிகழ்ச்சியுடன் தொழில்நுட்பம் மூலம் இணைந்துள்ள மதிப்பிற்குரிய ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா திரு நாயுடு அவர்களே, தொழில்நுட்பம் மூலம் இணைந்துள்ள மத்திய அமைச்சரவையின் இதர உறுப்பினர்களே, உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர்களே, கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் அவர்களே, உத்தரப்பிரதேச அரசின் இதர அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, வாரணாசியின் எனதருமை சகோதர, சகோதரிகளே!உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்; முடிவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
October 20th, 04:15 pm
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்; முடிவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இன்றைய திட்டங்களில் ரூ.6,100 கோடி மதிப்பிலான பல விமான நிலைய திட்டங்களும் வாரணாசியில் பல வளர்ச்சி முன்முயற்சிகளும் அடங்கும்.வாரணாசியில் ஆர்.ஜே.சங்கரா கண் மருத்துவமனை திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
October 20th, 02:21 pm
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியாரும், வணக்கத்திற்குரிய ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி; உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல்; முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத்; துணை முதலமைச்சர், பிரஜேஷ் பதக்; சங்கரா கண் அறக்கட்டளையின் ஆர்.வி.ரமணி; டாக்டர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம்; திரு முரளி கிருஷ்ணமூர்த்தி; ரேகா ஜுன்ஜுன்வாலா; மற்ற மதிப்புமிக்க உறுப்பினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்ஜே சங்கரா கண் மருத்துவமனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்
October 20th, 02:15 pm
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்ஜே சங்கரா கண் மருத்துவமனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை பல்வேறு கண் நோய்களுக்கு விரிவான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கும். விழாவில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியைத் திரு மோடி பார்வையிட்டார்.பிரதமர் நாளை வாரணாசி பயணம்
October 19th, 05:40 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 20) வாரணாசிக்கு பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 2 மணியளவில் ஆர்.ஜே.சங்கரா கண் மருத்துவமனையை அவர் திறந்து வைக்கிறார். அதன்பிறகு, மாலை 4:15 மணியளவில், வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்: பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவிப்பு
October 04th, 10:52 am
உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதில் ஈடுபட்டுள்ளது என்று அவர் உறுதியளித்தார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023ஆம் நிதியாண்டில் இந்தியாவின் உற்பத்தித் துறையில் மீண்டும் வேலைகள் 7.6% எழுச்சி, ஊதிய உயர்வு 5.5%, GVA 21% உயர்வு எனப் பாராட்டினார்.
October 01st, 08:11 pm
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-ஆம் நிதியாண்டில், உற்பத்தி வேலைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியங்களில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க எழுச்சியைப் பாராட்டினார். அரசாங்க கணக்கெடுப்பின்படி, 2023-ஆம் நிதியாண்டில் உற்பத்தி வேலைகள் 7.6% உயர்ந்துள்ளது மற்றும் ஊதியங்கள் 5.5% அதிகரித்துள்ளது.'மன் கீ பாத்' (மனதின் குரல்) கேட்பவர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள்: பிரதமர் மோடி
September 29th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் உங்களோடு இணைய, மீண்டுமொரு சந்தர்ப்பம். இன்றைய பகுதி என்னை உணர்ச்சியிலாழ்த்துவது, பழைய நினைவுகள் என்னைச் சூழ்ந்து விட்டன. ஏன் தெரியுமா? நம்முடைய மனதின் குரலுக்கு பத்து வயதாகி விட்டது; பத்தாண்டுகள் முன்பாக மனதின் குரல் அக்டோபர் 3ஆம் தேதியன்று, விஜயதசமி நன்னாளன்று தொடங்கப்பட்டது. அந்த நாள் எத்தனை புனிதமான நாள்!!! இது இயல்பாக அமைந்த ஒன்று. இதோடு கூடவே, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதியன்று நாம் மனதின் குரலின் பத்தாண்டுகளை நிறைவு செய்யும் அதே வேளையிலே, நவராத்திரி புண்ணிய காலத்தின் முதல் நாளுமாகவும் இருக்கும். மனதின் குரலின் இந்த நீண்டநெடிய பயணத்திலே பல கட்டங்களை என்னால் மறக்க இயலாது. மனதின் குரலில் கோடிக்கணக்கான நேயர்கள் நம்முடைய இந்தப் பயணத்தின் போது கூட்டாளிகளாக இருந்தார்கள், தொடர்ந்து எனக்குத் தோள் கொடுத்தும் வந்தார்கள். தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் தகவல்களை எனக்குத் திரட்டித் தந்தார்கள். மனதின் குரலின் நேயர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் உண்மையான சூத்திரதாரிகள். காரசாரமான விஷயம் இல்லையென்று சொன்னால், எதிர்மறை விஷயங்கள் இல்லையென்று சொன்னால், அந்த விஷயமோ, நிகழ்ச்சியோ அதிக கவனத்தைப் பெறாது என்று பொதுவாகவே ஒரு கருத்து உண்டு. ஆனால் ஆக்கப்பூர்வமான தகவல்களுக்காக நாட்டுமக்களிடத்திலே எத்தனை தாகம் இருக்கிறது, ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், உத்வேகமளிக்கக்கூடிய எடுத்துக்காட்டுகள், நம்பிக்கையூட்டக்கூடிய சம்பவங்கள் ஆகியவற்றை மக்கள் எத்தனை பேரார்வத்தோடு அரவணைத்துக் கொள்கிறார்கள் என்பதை மனதின் குரலின் வெற்றி நிரூபித்துக் காட்டியிருக்கிறது. சகோரப் பறவை என்று ஒன்று உண்டு, இது மழைநீர்த்துளிகளை மட்டுமே பருகி உயிர் வாழுமாம். மக்களும் கூட இந்த சகோரப் பறவையைப் போலவே, தேசத்தின் சாதனைகளையும், மக்களின் சமூகரீதியான சாதனைகளையும் எந்த அளவுக்கு பெருமிதத்தோடு செவி மடுக்கிறார்கள் என்பதையெல்லாம் நாம் மனதின் குரலில் பார்த்தோம். மனதின் குரலின் பத்தாண்டுக்காலப் பயணம் எப்படிப்பட்டதொரு மாலையைத் தயாரித்திருக்கிறது என்று சொன்னால், இதன் ஒவ்வொரு பகுதியிலும் புதிய காதைகள், புதிய உயர்வுகள், புதிய ஆளுமைகள் இணைந்து கொண்டே வருகின்றன. நமது சமூகத்தின் சமூக உணர்வோடு கூட அரங்கேறும் செயல்களுக்கு மனதின் குரல் வாயிலாக கௌரவம் கிடைக்கிறது. அந்த வேளையிலே மனதின் குரலுக்காக வந்திருக்கும் கடிதங்கள் என் நெஞ்சையும் கூட பெருமிதத்தில் விம்மச் செய்கின்றன. நம்முடைய தேசத்திலே தான் எத்தனை திறமைசாலிகள் இருக்கின்றார்கள்!! அவர்களிடம் தேசம் மற்றும் சமூகத்திற்கு சேவை புரிய வேண்டும் என்று எத்தனை தாகம் இருக்கிறது!! சுயநலமற்ற தன்மையோடு சேவை செய்ய இவர்கள் தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்கின்றார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வேளையிலே என்னுள்ளும் ஆற்றல் பொங்குகிறது. மனதின் குரலின் இந்த மொத்தச் செயல்பாடும் என்னைப் பொறுத்த வரையில் எப்படிப்பட்டதென்றால், இது ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதற்கு ஒப்பானது. மனதின் குரலின் ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு சம்பவத்தையும், ஒவ்வொரு கடிதத்தையும் நான் நினைத்துப் பார்க்கும் போது, மக்களாகிய மகேசர்கள் எனக்கு இறைவனாரின் வடிவங்கள், அவர்களை நான் தரிசனம் செய்கிறேன் என்றே நான் உணர்கிறேன்.உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற செமிகான் இந்தியா 2024-ல் இந்தியாவையும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையையும் முன்னணி செமிகண்டக்டர் தலைமை நிர்வாக அதிகாரிகள் பாராட்டினர்
September 11th, 04:28 pm
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று செமிகான் இந்தியா 2024-ஐ தொடங்கி வைத்தார். செமிகான் இந்தியா 2024 செப்டம்பர் 11 முதல் 13 வரை 'குறைகடத்தி எதிர்காலத்தை வடிவமைத்தல்' என்ற கருப்பொருளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று நாள் மாநாடு இந்தியாவின் குறைகடத்தி உத்திகளையும் கொள்கையையும் வெளிப்படுத்துகிறது. இது இந்தியாவை குறைகடத்திகளுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகளாவிய செமிகண்டக்டர் ஜாம்பவான்களின் உயர்நிலைத் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இது உலகளாவிய தலைவர்கள், நிறுவனங்கள் மற்றும் குறைகடத்தி துறையைச் சேர்ந்த நிபுணர்களை ஒன்றிணைக்கும். இந்த மாநாட்டில் 250-க்கும் அதிகமான கண்காட்சியாளர்களும், 150-க்கும் அதிகமான பேச்சாளர்களும் பங்கேற்கின்றனர்.உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற செமிகான் இந்தியா 2024 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
September 11th, 12:00 pm
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ஜிதின் பிரசாதா அவர்களே, உலகளாவிய குறைக்கடத்தி தொழில்துறையுடன் தொடர்புடைய அனைத்து ஜாம்பவான்களே, கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு உலகின் அனைத்து கூட்டாளர்களே, பிற புகழ்பெற்ற விருந்தினர்களே, தாய்மார்களே, அனைவருக்கும் வணக்கம்!உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் செமிகான் இந்தியா 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
September 11th, 11:30 am
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா கண்காட்சி அரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று செமிகான் இந்தியா 2024-ஐ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை திரு மோடி பார்வையிட்டார். செப்டம்பர் 11 முதல் 13 வரை நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாடு, இந்தியாவை குறைகடத்திகளுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான இந்தியாவின் குறைக்கடத்தி உத்தி மற்றும் கொள்கையை வெளிப்படுத்தும்.செமிகான் இந்தியா 2024-ஐ செப்டம்பர் 11 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
September 09th, 08:08 pm
உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் செமிகான் இந்தியா 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 11, 2024 அன்று காலை 10:30 மணியளவில் தொடங்கி வைப்பார். இந்த நிகழ்ச்சியில் திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்
September 06th, 08:45 pm
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய திரு நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.Vande Bharat is the new face of modernization of Indian Railways: PM Modi
August 31st, 12:16 pm
PM Modi flagged off three Vande Bharat trains via videoconferencing. Realizing the Prime Minister’s vision of ‘Make in India’ and Aatmanirbhar Bharat, the state-of-the-art Vande Bharat Express will improve connectivity on three routes: Meerut—Lucknow, Madurai—Bengaluru, and Chennai—Nagercoil. These trains will boost connectivity in Uttar Pradesh, Tamil Nadu and Karnataka.காணொலி மூலம் மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
August 31st, 11:55 am
மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரதமரின் 'மேக் இன் இந்தியா' மற்றும் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், அதிநவீன வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீரட் - லக்னோ, மதுரை - பெங்களூரு மற்றும் சென்னை - நாகர்கோவில் ஆகிய மூன்று வழித்தடங்களில் இணைப்பை மேம்படுத்தும். இந்த ரயில்கள் உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இணைப்பை மேம்படுத்தும்.2024 ஆகஸ்ட் 31 அன்று மூன்று வந்தே பாரத் ரயில்களைப் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்
August 30th, 04:19 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2024 ஆகஸ்ட் 31) பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் மூன்று வந்தே பாரத் ரயில்களைக் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிரதமரின் 'மேக் இன் இந்தியா' (இந்தியாவில் உற்பத்தி செய்வோம்), தற்சார்பு இந்தியா ஆகிய தொலைநோக்கு பார்வைகளை நனவாக்கும் வகையில், அதிநவீன வந்தே பாரத் விரைவு ரயில்கள் மூன்று வழித்தடங்களில் இணைப்பை மேம்படுத்தும். மீரட் - லக்னோ, மதுரை - பெங்களூரு, சென்னை - நாகர்கோவில் ஆகியவை அந்த மூன்று வழித்தடங்களாகும்.'ஹர் கர் திரங்கா அபியான்' (வீடுதோறும் தேசியக் கொடி) மூவர்ணக் கொடியின் மகிமையை நிலைநிறுத்துவதில் ஒரு தனித்துவமான திருவிழாவாக மாறியுள்ளது: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
July 28th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இந்த வேளையில், உலகம் முழுவதும் பேரீஸ் ஒலிம்பிக்ஸின் நிழல் படர்ந்திருக்கிறது. ஒலிம்பிக்ஸ் என்பது உலக அரங்கிலே நமது மூவண்ணக் கொடியைப் பெருமையோடு பறக்க விடும் ஒரு சந்தர்ப்பத்தை, தேசத்தின் பொருட்டு சாதிக்க வேண்டும் என்பதற்கான ஒரு வாய்ப்பை, நமது விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கிறது. நீங்கள் அனைவரும் நமது விளையாட்டு வீரர்களுக்குத் தெம்பை அளியுங்கள், சியர் ஃபார் பாரத்!!