குஜராத் மாநிலத்தின் பரூச்சில் நடைபெற்ற முன்னேற்றப் பெருவிழாவில் பிரதமரின் உரை

May 12th, 10:31 am

நாட்டிற்கு சேவை புரிவதற்காக குஜராத்தில் இருந்து என்னை தில்லிக்கு நீங்கள் அனுப்பி எட்டு ஆண்டுகள் இருக்கும். இந்த எட்டு ஆண்டுகள், சேவை, நல்ல ஆளுகை மற்றும் ஏழைகளின் நல்வாழ்விற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உங்களிடமிருந்து கற்றுக்கொண்டதை தான் இன்று என்னால் செயல்படுத்த முடிகிறது. உங்கள் மத்தியில் வாழ்ந்து, வளர்ச்சி, வலிகள், வறுமை மற்றும் பிரச்சினைகளை அனுபவித்திருக்கிறேன்.

பரூச்-சில் முன்னேற்றப் பெருவிழாவில் பிரதமர் உரையாற்றினார்

May 12th, 10:30 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத்தின் பரூச்-சில் முன்னேற்றப் பெருவிழாவில் காணொலி மூலம் உரையாற்றினார். தேவைப்படுவோருக்கு உரிய நேரத்தில் நிதியுதவி வழங்கும், மாநில அரசின் நான்கு முக்கிய திட்டங்கள், அந்த மாவட்டத்தில் 100 சதவீத பயன்பாட்டைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பரூச்-சில் 12 மே அன்று ‘முன்னேற்றப் பெருவிழா’வில் பிரதமர் உரையாற்றுகிறார்

May 11th, 04:37 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் பரூச் நகரில் 12 மே 2022 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள ‘முன்னேற்றப் பெருவிழா’வில் காணொலி வாயிலாக உரையாற்றவுள்ளார். தேவைப்படும் மக்களுக்கு குறித்த நேரத்தில் நிதியுதவி கிடைக்க வகைசெய்யும் மாநில அரசின் நான்கு முக்கிய திட்டங்கள், இந்த மாவட்டத்தில் 100 சதவீதம் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக இந்த பெருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.