மலேசியா பிரதம மந்திரியுடன் கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஊடகங்களுக்கு அளித்த பிரதம மந்திரியின் அறிக்கை
April 01st, 07:35 pm
இன்றைய எங்களது விரிவான உரையாடலில், பிரதம மந்திரி நஜீபும், நானும், நமது கலாச்சார, பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்தோம். 2015, நவம்பரில் எனது மலேசிய பயணத்தின்போது எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள நிலையான முன்னேற்றத்தை அறிந்துக் கொண்டதுடன், நமது மூலோபாய கூட்டுகளை உயர்த்துவதற்கு பகிர்வு பார்வை செலுத்தவும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். செயல் சார்ந்த அணுகுமுறையை விட பார்வை முதன்மையானதாகும். இந்த முயற்சியில், தற்போதுள்ள கூட்டுறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் புதிய வாய்ப்புகளை கண்டறிவது ஆகியவை எங்களது முக்கிய நோக்கங்களகவும் உள்ளன.