வாரணாசியில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
December 18th, 02:16 pm
உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் ஸ்ரீ கேசவ் பிரசாத் மவுரியா, குஜராத் சட்டமன்ற சபாநாயகரும் பனாஸ் பால்பண்ணையின் தலைவருமான திரு சங்கர் பாய் சவுத்ரி. மாநில அமைச்சரவை உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், பிற பிரமுகர்கள் மற்றும் வாரணாசியின் எனது குடும்ப உறுப்பினர்களே!உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.19,150 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
December 18th, 02:15 pm
சுமார் ரூ.10,900 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பண்டிட் தீனதயாள் உபாத்யாய் நகர்-நியூ பாவ்பூர் பிரத்யேக சரக்கு வழித்தடம் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். வாரணாசி-புது தில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், தோஹ்ரிகாட்-மவு மெமு ரயில் மற்றும் புதிதாக திறக்கப்பட்ட பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் ஒரு ஜோடி நீண்ட தூர சரக்கு ரயில்களை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் தயாரித்த 10,000-வது என்ஜினையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ரூ. 370 கோடிக்கும் அதிகமான செலவில் இரண்டு ஆர்.ஓ.பி.க்களுடன் கூடிய பசுமை வயல் ஷிவ்பூர்-புல்வாரியா-லஹர்தாரா சாலையை அவர் திறந்து வைத்தார். 20 சாலைகளை வலுப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார். கைதி கிராமத்தில் சங்கம் படித்துறை சாலை மற்றும் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனையில் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுதல், காவலர் குடியிருப்பு மற்றும் பிஏசி புல்லன்பூரில் 200 மற்றும் 150 படுக்கைகள் கொண்ட இரண்டு பல அடுக்குப் பாசறை கட்டிடங்கள், 9 இடங்களில் கட்டப்பட்ட ஸ்மார்ட் பேருந்து நிழற்குடைகள் மற்றும் அலைப்பூரில் 132 கிலோவாட் துணை மின் நிலையம் ஆகியவற்றையும் தொடங்கிவைத்த பிரதமர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சுற்றுலா பாஸ் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.டிசம்பர் 17-18 தேதிகளில் சூரத் மற்றும் வாரணாசிக்கு பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
December 16th, 10:39 am
பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 17-18 தேதிகளில் குஜராத்தின் சூரத் மற்றும் உத்தரபிரதேசத்தின் வாரணாசி ஆகிய இடங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 17 ஆம் தேதி காலை 10:45 மணியளவில், சூரத் விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். காலை 11.15 மணிக்கு சூரத் வைர சந்தையைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பின், வாரணாசி செல்லும் அவர், மாலை, 3:30 மணிக்கு, நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையில் பங்கேற்கிறார். மாலை 5.15 மணிக்கு நமோ படித்துறையில் காசி தமிழ் சங்கமம் 2023-ஐ தொடங்கி வைக்கிறார்.