இந்திய ரயில்வேயில் மூன்று பல்வழித் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
November 25th, 08:52 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் மொத்தம் ரூ.7,927 கோடி (தோராயமாக) மதிப்பீட்டிலான மூன்று திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்புப் படையினரிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 31st, 07:05 pm
நாட்டின் எல்லையில், சர் க்ரீக் அருகில், கட்ச் மண்ணில், நாட்டின் ஆயுதப்படைகள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். தீபாவளி நல்வாழ்த்துகள்!குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தீபாவளி கொண்டாடினார்.
October 31st, 07:00 pm
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் கழிமுகப் பகுதியில் உள்ள லக்கி நாலாவில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தீபாவளியைக் கொண்டாடினார். இந்தியாவின் ஆயுதப்படைகளுடன் பண்டிகையைக் கொண்டாடும் தமது பாரம்பரியத்தைப் பிரதமர் தொடர்ந்தார். கழிமுகப் பகுதியில் உள்ள எல்லைக் காவல் நிலையங்களில் ஒன்றையும் பார்வையிட்ட பிரதமர், வீரம் செறிந்த பாதுகாப்புப் படையினருக்கு இனிப்புகளை வழங்கினார்.Prime Minister Narendra Modi meets with Prime Minister of Lao PDR
October 11th, 12:32 pm
Prime Minister Narendra Modi held bilateral talks with Prime Minister of Lao PDR H.E. Mr. Sonexay Siphandone in Vientiane. They discussed various areas of bilateral cooperation such as development partnership, capacity building, disaster management, renewable energy, heritage restoration, economic ties, defence collaboration, and people-to-people ties.'ஹர் கர் திரங்கா அபியான்' (வீடுதோறும் தேசியக் கொடி) மூவர்ணக் கொடியின் மகிமையை நிலைநிறுத்துவதில் ஒரு தனித்துவமான திருவிழாவாக மாறியுள்ளது: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
July 28th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இந்த வேளையில், உலகம் முழுவதும் பேரீஸ் ஒலிம்பிக்ஸின் நிழல் படர்ந்திருக்கிறது. ஒலிம்பிக்ஸ் என்பது உலக அரங்கிலே நமது மூவண்ணக் கொடியைப் பெருமையோடு பறக்க விடும் ஒரு சந்தர்ப்பத்தை, தேசத்தின் பொருட்டு சாதிக்க வேண்டும் என்பதற்கான ஒரு வாய்ப்பை, நமது விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கிறது. நீங்கள் அனைவரும் நமது விளையாட்டு வீரர்களுக்குத் தெம்பை அளியுங்கள், சியர் ஃபார் பாரத்!!மைதாம்கள் உலக பாரம்பரிய பட்டியலில் இணைந்ததற்கு பிரதமர் மகிழ்ச்சி
July 26th, 02:50 pm
அசாமின், சராய்தேவ் மைதாம், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலங்கள் பட்டியலில் இடம்பெற்றது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி, மகிழ்ச்சியும், பெருமிதமும் தெரிவித்துள்ளார். இது இந்தியாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கக் கூடியது என்றும் திரு மோடி தெரிவித்துள்ளார்.India's heritage is not just a history. India's heritage is also a science: PM Modi
July 21st, 07:45 pm
PM Modi inaugurated the 46th session of the World Heritage Committee at Bharat Mandapam in New Delhi. On this occasion, he remarked that India's history and civilization are far more ancient and expansive than commonly perceived. The Prime Minister emphasized that Development along with Heritage is India's vision, and over the past decade, the government has taken unprecedented steps for the preservation of heritage.புதுதில்லி பாரத மண்டபத்தில் உலகப் பாரம்பரியக் குழுவின் 46-வது அமர்வை பிரதமர் தொடங்கி வைத்தார்
July 21st, 07:15 pm
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் உலகப் பாரம்பரியக் குழுவின் 46-வது அமர்வை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் கூடும் உலகப் பாரம்பரியக் குழு, உலகப் பாரம்பரியம் குறித்த அனைத்து விஷயங்களை நிர்வகிப்பதற்கும், உலகப் பாரம்பரிய பட்டியலில் பொறிக்கப்பட வேண்டிய தளங்களைத் தீர்மானிப்பதற்கும் பொறுப்பேற்கும். இந்தியா முதல் முறையாக உலகப் பாரம்பரிய குழு கூட்டத்தை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியையொட்டி காட்சிப்படுத்தப்பட்ட பல்வேறு கண்காட்சிகளையும் பிரதமர் பார்வையிட்டார்.அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 09th, 01:50 pm
எங்களை ஆசீர்வதிப்பதற்காக நீங்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு வந்துள்ளீர்கள். இதற்கு தலை தாழ்ந்து என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அசாம் மக்களின் இந்த அன்பும், பிணைப்பும் எனது மிகப்பெரிய சொத்து. இன்று, அசாம் மக்களுக்காக 17,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் நான் இங்கு வந்துள்ளேன். இந்தத் திட்டங்கள் சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் பெட்ரோலியம் தொடர்பானவை. இந்தத் திட்டங்கள் அசாமின் வளர்ச்சியை விரைவுபடுத்தும். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக அசாம் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் ரூ. 17,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
March 09th, 01:14 pm
அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் ரூ.17,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் சுகாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ரயில் மற்றும் வீட்டுவசதி ஆகிய துறைகளை உள்ளடக்கியது.அசாமில் காசிரங்கா தேசியப் பூங்காவை பிரதமர் பார்வையிட்டார்
March 09th, 10:00 am
அசாமில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான காசிரங்கா தேசியப் பூங்காவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காலை பார்வையிட்டார்.மார்ச் 8, 10 தேதிகளில் பிரதமர் அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்
March 08th, 04:12 pm
2024 மார்ச் 8-10 தேதிகளில் பிரதமர் அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்யுனெஸ்கோவின் உணர்தற்கரிய பாரம்பரியப் பட்டியலில் கர்பாவின் கல்வெட்டு இடம்பெற்றிருப்பதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
December 06th, 08:27 pm
யுனெஸ்கோவின் உணர்தற்கரிய பாரம்பரியப் பட்டியலில் குஜராத்தின் கர்பா கல்வெட்டு இடம் பெற்றுள்ளது குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.Armed forces have taken India’s pride to new heights: PM Modi in Lepcha
November 12th, 03:00 pm
PM Modi addressed brave jawans at Lepcha, Himachal Pradesh on the occasion of Diwali. Addressing the jawans he said, Country is grateful and indebted to you for this. That is why one ‘Diya’ is lit for your safety in every household”, he said. “The place where jawans are posted is not less than any temple for me. Wherever you are, my festival is there. This is going on for perhaps 30-35 years”, he added.இமாச்சலப் பிரதேசத்தின் லெப்சாவில் தீரமிக்க வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார் பிரதமர்
November 12th, 02:31 pm
வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், தீபாவளி பண்டிகையின் ஒருங்கிணைப்பும், வீரர்களின் தைரியத்தின் எதிரொலிகளும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவொளியின் தருணம் என்று குறிப்பிட்டார். நாட்டின் கடைசி கிராமமான எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த கிராமங்கள் இப்போது முதல் கிராமமாகக் கருதப்படுகிறது. அங்கு வீரர்களுக்கு பிரதமர் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் 141 வது அமர்வு தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
October 14th, 10:34 pm
ஐ.ஓ.சி. தலைவர் திரு தாமஸ் பாக் அவர்களே, ஐ.ஓ.சி.யின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, அனைத்து சர்வதேச விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளே, இந்தியாவில் உள்ள தேசியக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளே உங்கள் அனைவரையும் இந்த சிறப்பான தருணத்தில் 1.4 பில்லியன் இந்தியர்கள் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்.மும்பையில் 141-வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை பிரதமர் தொடங்கி வைத்தார்
October 14th, 06:35 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி மும்பையில் 141-வது சர்வதேச ஒலிம்பிக் குழு (ஐஓசி) அமர்வை இன்று தொடங்கி வைத்தார். விளையாட்டு தொடர்பான பல்வேறு தரப்பினரிடையே கலந்துரையாடல் மற்றும் அறிவுப் பகிர்வுக்கான வாய்ப்பை இந்த அமர்வு வழங்குகிறது.24.09.2023 அன்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் 105-வது அத்தியாயத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 24th, 11:30 am
எனதருமைக் குடும்பச் சொந்தங்களே, வணக்கம். மனதின் குரலின் மேலும் ஒரு பகுதியில் உங்கள் அனைவருடனும், தேசத்தின் வெற்றியை, நாட்டுமக்களின் வெற்றியை, அவர்களின் உத்வேகமளிக்கும் வாழ்க்கைப் பயணத்தை, உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் மீண்டும் ஒரு முறை எனக்கு வாய்த்திருக்கிறது. எனக்குக் கிடைக்கும் கடிதங்களில் இப்போதெல்லாம் இரண்டு விஷயங்கள் மிக அதிகம் காணப்படுகின்றன. முதலாவதாக, சந்திரயான் – 3இன் வெற்றிகரமான தரையிறங்கல்; இரண்டாவதாக, தில்லியில் நடைபெற்ற ஜி20இன் வெற்றிகரமான ஏற்பாடுகள். தேசத்தின் அனைத்து பாகங்களிலிருந்தும், அனைத்துப் பிரிவிடமிருந்தும், அனைத்து வயதினரிடமிருந்தும், எனக்குக் கணக்கில்லாத கடிதங்கள் கிடைத்திருக்கின்றன. சந்திரயான் – 3இன் லேண்டரானது, சந்திரனின் மீது இறங்கும் தருவாயில் இருந்த போது, கோடிக்கணக்கான மக்கள், பல்வேறு வழிகளில், ஒரே நேரத்தில் இந்தச் சம்பவத்தின் ஒவ்வொரு நொடியின் சாட்சிகளாக ஆகிக் கொண்டிருந்தார்கள். இஸ்ரோ அமைப்பின் யூ ட்யூப் நேரடி ஒளிபரப்பில், 80 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்வினைக் கண்டார்கள் என்பதே கூட மிகப்பெரிய சாதனை. சந்திரயான் – 3உடன் கோடிக்கணக்கான இந்தியர்களின் ஈடுபாடு எத்தனை ஆழமாக இருந்திருக்கிறது என்பது இதிலிருந்தே உங்களுக்குத் தெரிந்திருக்கும். சந்திரயானின் இந்த வெற்றி குறித்து தேசத்தில் இன்றைய காலகட்டத்தில் மிக அருமையான வினா விடைப் போட்டியும் நடைபெற்று வருகிறது; இந்தப் போட்டிக்கு இடப்பட்டிருக்கும் பெயர் – சந்திரயான் – 3 மஹா க்விஸ் ஆகும். மைகவ் தளத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்தப் போட்டியில் இதுவரை 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்து விட்டார்கள். மைகவ்வின் தொடக்கத்திற்குப் பிறகு, இது எந்த ஒரு வினா விடைப் போட்டி என்று எடுத்துக் கொண்டாலும், மிகப்பெரிய பங்கெடுப்பு என்று கொள்ளலாம். நீங்கள் இதுவரை இதில் பங்கெடுக்கவில்லை என்றால், காலம் இன்னும் கடந்து விடவில்லை, இப்போது கூட இதிலே இன்னும் 6 நாட்கள் எஞ்சி இருக்கின்றன. இந்த வினாவிடைப் போட்டியில் நீங்களும் கண்டிப்பாகப் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று உங்களிடத்திலே நான் கேட்டுக் கொள்கிறேன்.யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் ஹொய்சளர் கோவில்களின் புனிதச் சின்னங்கள் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி
September 18th, 09:54 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் ஹொய்சளர்களின் புனிதச் சின்னங்கள் சேர்க்கப்பட்டதற்குப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.