பாலைவனமாதல், நில சீரழிவு மற்றும் வறட்சி குறித்த ஐ.நா உயர்மட்ட கூட்டத்தில் பிரதமரின் சிறப்புரை
June 14th, 07:36 pm
அனைத்து உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளிப்பதற்கான முக்கிய அடிப்படை கட்டமைப்பாக நிலம் விளங்குகிறது. சோகம் என்னவென்றால், இன்றைக்கு உலகின் மூன்றில் இரண்டு பங்கை நில சீர்கேடு பாதிக்கிறது. இதை நாம் தடுக்காமல் விட்டோமானால், நமது சமுதாயங்கள், பொருளாதாரங்கள், உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை தரத்தின் அடிப்படைகளையே இது தகர்த்து விடும். எனவே, நிலம் மற்றும் அதன் வளங்கள் மீது கொடுக்கப்படும் அதிகப்படியான அழுத்தத்தை நாம் குறைக்க வேண்டும். அதிகளவிலான பணிகள் நம்முன் உள்ளன. ஆனால் நம்மால் அவற்றை செய்ய முடியும். நாம் இணைந்து அதை செய்ய முடியும்.ஐ.நா. ‘பாலைவனமாதல், நிலச் சீரழிவு மற்றும் வறட்சி குறித்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை‘-யில் பிரதமர் ஆற்றிய சிறப்புரை
June 14th, 07:32 pm
ஐ.நா. - ‘பாலைவனமாதல், நிலச் சீரழிவு மற்றும் வறட்சி குறித்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை‘-யில் பிரதமர் திரு.நரேந்திரமோடி, காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா. உடன்படிக்கை நாடுகளின் (UNCCD) 14-வது அமர்வின் தலைவர் என்ற முறையில், பிரதமர் இந்த அமர்வின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றினார்.பிரதமருடன் செயின்ட் வின்சென்ட் மற்றும் க்ரனடைன்ஸ் பிரதமர் சந்திப்பு
September 10th, 01:36 pm
செயின்ட் வின்சென்ட் மற்றும் க்ரனடைன்ஸ் நாட்டின் பிரதமர் டாக்டர். ரால்ஃப் எவரார்டு கோன்சால்வேஸ் இன்று (10.09.2019) பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்தியாவிற்கு வருகை தரும் செயின்ட் வின்சென்ட் மற்றும் க்ரனடைன்ஸ் நாட்டின் முதலாவது பிரதமரான கோன்சால்வேஸ், புதுதில்லியில் நேற்று நடைபெற்ற, பாலைவனமாதலை எதிர்கொள்வதற்கான உயர்மட்ட அளவிலான ஐ.நா. மாநாட்டிலும் கலந்து கொண்டார்.பாலைவனமயமாக்கலுக்கு எதிரான ஐ.நா. சிறப்பு மாநாட்டின் 14வது மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
September 09th, 10:35 am
பாலைவனமயமாக்கலுக்கு எதிரான ஐ.நா. சிறப்பு மாநாட்டின் 14வது மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த சிறப்பு மாநாட்டினை இந்தியாவிற்கு கொண்டு வந்தமைக்காக நிர்வாக செயலாலர் திரு. இப்ரஹீம் ஜியோவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிறப்பு மாநாட்டில் பங்கேற்க பதிவு செய்வதில் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனை நிலத்தின் தரத்தைக் குறைப்பதை தடுத்து நிறுத்தும் கடமையில் உலகளவில் நிலவும் உறுதிப்பாட்டினை பிரதிபலிப்பதாக அமைகிறது.பாலை நிலமாதலைத் தடுப்பதற்கான ஐ.நா. கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் (COP14) 14வது மாநாட்டின் உயர்நிலைக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்
September 09th, 10:30 am
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இன்று நடைபெற்ற பாலை நிலமாதலைத் தடுப்பதற்கான ஐ.நா. கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் (COP14) 14வது மாநாட்டின் உயர்நிலைக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.