ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

November 25th, 08:42 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, ஒரே நாடு, ஒரே சந்தா என்ற மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் எளிமையான, பயனருக்கு உகந்த மற்றும் முழுமையான டிஜிட்டல் செயல்முறை மூலம் நிர்வகிக்கப்படும். இதன் மூலம் கல்விப் புலம் சார்ந்த ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் ஆராய்ச்சி இதழ்களைப் படிக்க முடியும்.இது அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களுக்கான ஒரே நாடு ஒரு சந்தா வசதியாக இருக்கும்.