Prime Minister pays tribute to Ram Vilas Paswan on his Jayanti

Prime Minister pays tribute to Ram Vilas Paswan on his Jayanti

July 05th, 08:00 pm

The Prime Minister, Shri Narendra Modi, today paid tribute to former Union Minister Ram Vilas Paswan on the occasion of his Jayanti. Shri Modi said that Ram Vilas Paswan Ji's struggle for the rights of Dalits, backward classes, and the deprived can never be forgotten.

அக்ராவில் உள்ள நக்ருமா நினைவுப் பூங்காவில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

அக்ராவில் உள்ள நக்ருமா நினைவுப் பூங்காவில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

July 03rd, 03:50 pm

கானா அக்ராவில் உள்ள நக்ருமா நினைவுப் பூங்காவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி சென்று, கானாவின் நிறுவனத் தலைவரும் ஆப்பிரிக்க சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் தலைவருமான டாக்டர் குவாமே நக்ருமாவுக்கு அஞ்சலி செலுத்தினார். கானா துணை அதிபர் பேராசிரியர் நானா ஜேன் ஓபோகு - அக்யேமாங்கும் பிரதமருடன் சென்றார். சுதந்திரம், ஒற்றுமை, சமூக நீதி ஆகியவற்றுக்கு டாக்டர் நக்ருமாவின் நீடித்த பங்களிப்புகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரதமர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ஹூல் திவஸ் - ஆங்கிலேய ஏகாதிபத்தியம் மற்றும் ஜமீன்தார் முறைக்கு எதிரான போராட்ட தினத்தையொட்டி பழங்குடியின வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி

ஹூல் திவஸ் - ஆங்கிலேய ஏகாதிபத்தியம் மற்றும் ஜமீன்தார் முறைக்கு எதிரான போராட்ட தினத்தையொட்டி பழங்குடியின வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி

June 30th, 02:28 pm

ஹூல் திவஸ் எனப்படும் ஆங்கிலேயே ஏகாதிபத்தியம் மற்றும் ஜமீன்தார் முறையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தை நினைவு கூரும் வகையில் கடைபிடிக்கப்படும் இத்தினத்தையொட்டி இந்தியாவின் பழங்குடியின சமூகங்களின் அசாத்திய துணிச்சலுக்கும் அசாதாரணமான வீரத்திற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். வரலாற்று சிறப்புமிக்க சந்தால் எழுச்சியை நினைவுகூரும் வகையில், காலனித்துவ ஒடுக்குமுறையை எதிர்த்து தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த எண்ணற்ற துணிச்சலான பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களான சிடோ-கன்ஹு, சந்த்-பைரவ் மற்றும் பூலோ-ஜானோ ஆகியோரின் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் பிரதமர் மரியாதை செலுத்தினார்.

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

June 28th, 11:19 am

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (28.06.2025) அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தின் ஒரு முக்கியமான கட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை வடிவமைப்பதில் நரசிம்ம ராவ் ஆற்றிய முக்கிய பங்கைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.

டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு அஞ்சலி

June 23rd, 09:02 am

டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

சந்த் கபீர் தாஸ் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

June 11th, 10:18 am

சமூக நல்லிணக்கம், சீர்திருத்தத்திற்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட சந்த் கபீர் தாஸின் பிறந்த தினத்தையொட்டி இன்று அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

பகவான் பிர்சா முண்டாவிற்கு பிரதமர் மரியாதை செலுத்தி உள்ளார்

June 09th, 01:30 pm

சுதந்திரப் போராட்டத்தின் சிறந்த வீரரான பகவான் பிர்சா முண்டாவிற்கு அவர் தியாகியான தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தி உள்ளார்.

மகாராணா பிரதாப் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்

May 09th, 02:25 pm

மகாராணா பிரதாப் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். வீரமிக்க போர்வீரர் மகாராணா பிரதாப்பின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

பீகார் மாநிலம் மதுபானியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

April 24th, 12:00 pm

நான் எனது உரையைத் தொடங்குவதற்கு முன்பு, உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன், நீங்கள் எங்கிருந்தாலும், எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை, உங்கள் இடத்தில் அமர்ந்து, 22 ஆம் தேதி நாம் இழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம், சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தி, அந்தந்த தெய்வங்களை நினைவுகூர்வோம். அவர்கள் அனைவருக்கும் நாம் அஞ்சலி செலுத்துவோம், அதன் பிறகு நான் இன்று எனது உரையைத் தொடங்குவேன்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு பீகார் மாநிலம் மதுபானியில் ரூ.13,480 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

April 24th, 11:50 am

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு பீகார் மாநிலம் மதுபானியில் இன்று ரூ.13,480 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஏப்ரல் 22-ம் தேதி அன்று பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் மௌன அஞ்சலி செலுத்தி, பிரார்த்தனை செய்யுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு ஒட்டுமொத்த தேசமும் மிதிலா மற்றும் பீகாருடன் இணைக்கப்பட்டுள்ளது என்றார். பீகார் மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மின்சாரம், ரயில்வே, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள் இம்மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மாபெரும் கவிஞராகவும் தேசிய அடையாளமாகவும் திகழ்ந்த ராம்தாரி சிங் தினகர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

புனித பிரகாஷ் புரப் தினத்தில் ஸ்ரீ குரு தேக் பகதூருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

April 18th, 12:26 pm

புனிதமான பிரகாஷ் புரப் தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்ரீ குரு தேக் பகதூருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அநீதியை எதிர்த்துப் போராடுவதில் தளராத துணிச்சலையும் கருணை நிறைந்த சேவையையும் குரு தேக் பகதூரின் வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

பாரத ரத்னா பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி

April 14th, 09:16 am

பாரத ரத்னா பாபாசாகேப் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவரின் சார்பிலும் அவருக்கு மரியாதை செலுத்துகிறோம். அவரது உத்வேகத்தால் ஈர்க்கப்பட்டு இன்று சமூக நீதி என்ற கனவை நனவாக்க நாடு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறது. அவரது கொள்கைகளும் லட்சியங்களும் தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், துரிதப்படுத்தவும் உதவிடும்.

முன்னாள் துணைப் பிரதமர் திரு. பாபு ஜெகஜீவன் ராம் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி

April 05th, 09:04 am

முன்னாள் துணைப் பிரதமர் திரு. பாபு ஜெகஜீவன் ராம் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.

டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார சுவாமிகள் பிறந்த நாளில் பிரதமர் மரியாதை

April 01st, 09:05 am

டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார சுவாமிகளின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவரது அசாதாரண முயற்சிகளைப் பாராட்டியுள்ள திரு மோடி, தன்னலமற்ற செயல்பாடு எவ்வாறு சமூகத்தை மாற்றியமைக்கும் என்பதை அவரது கருணை, அயராத சேவை ஆகியவை கலங்கரை விளக்கமாக நின்று வழிகாட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஷியாமாஜி கிருஷ்ண வர்மா நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்

March 30th, 11:42 am

மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஷியாமாஜி கிருஷ்ண வர்மா நினைவு தினமான இன்று அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தியாகிகள் தினத்தை முன்னிட்டு பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு பிரதமர் மரியாதை

March 23rd, 09:04 am

சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தியாகிகள் தினத்தில் மரியாதை செலுத்தி, தேசத்துக்காக அவர்கள் செய்த உச்சபட்ச தியாகத்தைப் போற்றியுள்ளார்.

வீர சாவர்க்கரின் நினைவு நாளில் பிரதமர் மரியாதை

February 26th, 09:41 am

வீர சாவர்க்கரின் நினைவு தினமான இன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

சத்ரபதி சிவாஜி மகராஜின் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

February 19th, 09:36 am

சத்ரபதி சிவாஜி மகராஜின் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

மகரிஷி தயானந்த் சரஸ்வதியின் பிறந்ததினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

February 12th, 02:24 pm

சிறந்த சிந்தனையாளரும், சமூக சீர்திருத்தவாதியும், தீவிர தேசியவாதியுமான மகரிஷி தயானந்த் சரஸ்வதியின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

சத்குரு ரவிதாஸ் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் மரியாதை

February 12th, 12:38 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று, சத்குரு ரவிதாஸின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். திரு. மோடி, குரு ரவிதாஸ் பற்றிய தமது எண்ணங்களின் காணொலியையும் பகிர்ந்துள்ளார்.