PM Modi pays tributes to Sri Guru Gobind Singh Ji on his Prakash Utsav
January 06th, 09:33 am
The Prime Minister, Shri Narendra Modi has paid tributes to Sri Guru Gobind Singh Ji on his Prakash Utsav and said that his thoughts will inspire us to build a society that is progressive, prosperous and compassionate.ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவரை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்
January 03rd, 10:59 am
வீரமங்கை ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நினைவுகூர்ந்துள்ளார். காலனி ஆட்சிக்கு எதிரான வீரமிகு போராட்டத்தை அவர் நடத்தினார் என்றும், ஈடுஇணையற்ற துணிச்சலையும், போர்த்திறன் நுண்ணறிவையும் வெளிப்படுத்தினார் என்றும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.சாவித்ரிபாய் புலே அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
January 03rd, 10:57 am
சாவித்ரிபாய் புலே அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். அவர் மகளிருக்கு அதிகாரமளித்தலின் கலங்கரை விளக்கம் என்றும் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தத் துறையில் முன்னோடி என்றும் திரு மோடி பாராட்டியுள்ளார்.முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் அஞ்சலி
December 27th, 11:47 am
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இல்லத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். நமது நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பை இந்தியா என்றென்றும் நினைவில் கொள்ளும் என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார்.முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் விடுத்துள்ள இரங்கல் செய்தியின் தமிழாக்கம்
December 27th, 11:41 am
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜியின் மறைவு எங்கள் இதயங்களை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. அவரது மறைவு ஒரு தேசமாக எமக்கு மிகப்பெரிய இழப்பாகும். பிரிவினையின் போது இவ்வளவு இழந்து, வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்த பிறகு பாரதத்திற்கு வருவது சாதாரண சாதனை அல்ல. கஷ்டங்கள் மற்றும் சவால்களைத் தாண்டி பெரிய உயரங்களை எவ்வாறு அடைவது என்பதற்கு எதிர்கால சந்ததியினருக்கு அவரது வாழ்க்கை ஒரு பாடமாக அமைகிறது.PM Modi condoles the passing of former PM Dr. Manmohan Singh
December 27th, 11:37 am
Prime Minister Narendra Modi expressed grief over the demise of former Prime Minister Dr. Manmohan Singh, calling it an immense loss for the nation. He remembered Dr. Singh as a kind-hearted inpidual, a distinguished economist and a leader dedicated to reforms.முன்னாள் பிரதமர் திரு வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை செலுத்தினார்
December 25th, 09:10 am
முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவு கூர்ந்தார்
December 25th, 08:56 am
மகாமன பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி
December 15th, 09:32 am
சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினமான இன்று அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை அஞ்சலி செலுத்தியுள்ளார். திரு. பட்டேலின் ஆளுமையும், பணியும் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானத்தை அடைவதற்கு குடிமக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.ராஜ் கபூரின் 100-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மரியாதை
December 14th, 11:17 am
புகழ்பெற்ற ராஜ் கபூரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவர் ஒரு தொலைநோக்கு சிந்தனை கொண்ட திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று அவரைப் பிரதமர் பாராட்டியுள்ளார். ராஜ் கபூர் வெறும் திரைப்படத் தயாரிப்பாளர் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற கலாச்சாரத் தூதராகத் திகழ்ந்தார் என்று குறிப்பிட்டுள் திரு நரேந்திர மோடி, அடுத்து வரும் தலைமுறைகளைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், நடிகர்களும் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி
December 13th, 10:21 am
2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.குரு தேக் பகதூர் உயிர்த் தியாகம் செய்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
December 06th, 08:07 pm
குரு தேக் பகதூர் உயிர்த் தியாகம் செய்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். நீதி, சமத்துவம், மனிதகுலத்தின் பாதுகாப்பு ஆகிய மாண்புகளுக்காகவும் இணையற்ற தைரியம், தியாகத்துக்காகவும் அவரை நினைவு கூர்வதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.நாட்டின் முதல் குடியரசுத்தலைவர் பாரத ரத்னா டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை செலுத்தினார்
December 03rd, 08:59 am
நாட்டின் முதல் குடியரசுத்தலைவர் பாரத ரத்னா டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். இந்திய ஜனநாயகத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்ததில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அவர் பாராட்டியுள்ளார்.ஆரிய சமாஜ் நினைவுச் சின்னத்திற்கு பிரதமர் அஞ்சலி
November 22nd, 03:09 am
கயானாவின் ஜார்ஜ்டவுனில் உள்ள ஆர்ய சமாஜ் நினைவிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். கயானாவில் இந்திய கலாச்சாரத்தை பாதுகாப்பதில் அவர்களின் முயற்சிகள் மற்றும் பங்களிப்பு பாராட்டத்தக்கது என்று திரு மோடி கூறினார். இந்த ஆண்டு சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.இந்திய வருகை நினைவுச் சின்னத்தை பிரதமர் பார்வையிட்டார்
November 21st, 10:00 pm
ஜார்ஜ்டவுனில் உள்ள நினைவுச் சின்னத் தோட்டத்தில் உள்ள இந்திய வருகைச் சின்னத்தை பிரதமர் இன்று பார்வையிட்டார். அவருடன் கயானா பிரதமர் பிரிகேடியர் (ஓய்வு) மார்க் பிலிப்ஸும் சென்றார். வருகை நினைவுச் சின்னத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பிரதமரை தாஸ்ஸா டிரம்ஸ் இசைக் குழுவினர் வரவேற்றனர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர், வெளிநாடுவாழ் இந்தியர்களின் போராட்டம் மற்றும் தியாகங்களையும், கயானாவில் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் அவர்களின் முக்கிய பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார். நினைவுச்சின்னத்தில் பெல் பத்ரா மரக்கன்றை அவர் நட்டார்.ஸ்ரீ பாலாசாகேப் தாக்கரேவின் நினைவு தினத்தில் அவருக்கு பிரதமர் மரியாதை
November 17th, 01:22 pm
பாலாசாகேப் தாக்கரேயின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். மகாராஷ்டிராவின் வளர்ச்சி மற்றும் மராத்தி மக்களின் அதிகாரமளித்தலுக்காக பாடுபட்ட ஒரு தொலைநோக்கு பார்வையாளராக ஸ்ரீ தாக்கரே திகழ்ந்ததாக திரு மோடி பாராட்டியுள்ளார்.பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்.
November 15th, 08:41 am
பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு இன்று மரியாதை செலுத்தினார். தாய்நாட்டின் பெருமையையும், கண்ணியத்தையும் பாதுகாக்க பகவான் பிர்சா முண்டா அவர்கள் அனைத்தையும் தியாகம் செய்தார் என்று அவர் குறிப்பிட்டார்.சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார்
October 31st, 07:33 am
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ளார்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்
October 30th, 03:38 pm
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு இன்று (30.10.2024) அஞ்சலி செலுத்தியுள்ளார்.பழங்குடியினத் தலைவர் திரு கார்திக் ஓரன் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி
October 29th, 09:16 am
பழங்குடியினத் தலைவர் கார்திக் ஓரன் நூற்றாண்டு பிறந்ததை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவர், பழங்குடியின சமூகத்தின் உரிமைகளுக்காகவும் சுயமரியாதைக்காகவும் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மாபெரும் தலைவர் என்றும், பழங்குடியின கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பாதுகாக்கக் குரல் கொடுத்தவர் என்றும் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.