ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 'ஓராண்டு நிறைவில் முன்னேற்றம்' நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

December 17th, 12:05 pm

கோவிந்த் நகரில் நான் கோவிந்த் தேவ் அவர்களுக்கு வணக்கங்களைச் செலுத்துகிறேன். அனைவருக்கும் என் வணக்கங்கள்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 'ஓராண்டு முடிவில் முன்னேற்றம்' நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்

December 17th, 12:00 pm

ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டு நிறைவையொட்டி கொண்டாடப்பட்ட ஓராண்டு முடிவில் முன்னேற்றம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அவர், ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக ராஜஸ்தான் அரசுக்கும், ராஜஸ்தான் மக்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களின் ஆசீர்வாதங்களைப் பெறும் அதிர்ஷ்டம் தமக்கு கிடைத்தது என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தானின் வளர்ச்சிப் பணிகளுக்கு புதிய திசை காட்டுவற்கும் வேகத்தை அதிகரிப்பதற்கும் மேற்கொண்ட முயற்சிகளுக்காக ராஜஸ்தான் முதலமைச்சர் மற்றும் அவரது குழுவினரை திரு மோடி பாராட்டினார். முதலாம் ஆண்டு வரவிருக்கும் பல ஆண்டு வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார். இன்றைய நிகழ்ச்சி அரசின் ஓராண்டு நிறைவைக் குறிப்பது மட்டுமின்றி, ராஜஸ்தானின் பிரகாசமான ஒளியையும் ராஜஸ்தானின் வளர்ச்சித் திருவிழாவையும் அடையாளப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தான் எழுச்சி உச்சி மாநாடு 2024-க்கு அண்மையில் தாம் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்த திரு மோடி, உலகெங்கிலும் உள்ள பல முதலீட்டாளர்கள் அதில் கலந்து கொண்டதாகவும், இன்று ரூ .45,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் ராஜஸ்தானில் தண்ணீர் தொடர்பாக எதிர்கொள்ளும் தடைகளுக்கு பொருத்தமான தீர்வை வழங்கும் என்றும், இந்தியாவுடன் மிகவும் நன்கு இணைக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தானை மாற்றும் என்றும் அவர் கூறினார். இந்த வளர்ச்சிப் பணிகள் அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கும், ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும், சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும். ராஜஸ்தானின் விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியா - இலங்கை கூட்டறிக்கை: எதிர்காலத்திற்கான கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு

December 16th, 03:26 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயகவும் இன்று (2024 டிசம்பர் 16) புதுதில்லியில் சந்தித்தபோது, விரிவான, பயனுள்ள விவாதங்களை நடத்தினர்.

ஹரியானா மாநிலம் பானிபட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

December 09th, 05:54 pm

ஹரியின் இருப்பிடம் ஹரியானா, இங்கே, உள்ள அனைவரும் 'ராம் ராம்' என ஒருவருக்கொருவர் மனமார வாழ்த்திக் கொள்கின்றனர்.

எல்.ஐ.சியின் பீமா சகி திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

December 09th, 04:30 pm

மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் நிதி உள்ளடக்கம் குறித்த உறுதிப்பாட்டின் அடிப்படையில், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பீமா சகி திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஹரியானா மாநிலம் பானிபட்டில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, கர்னாலில் உள்ள மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். அப்போது உரையாற்றிய திரு மோடி, மகளிருக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கி இந்தியா மற்றொரு வலுவான அடியை எடுத்து வைக்கிறது என்று கூறினார். இன்று மாதத்தின் 9 வது நாளாக இருப்பது சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் எண் 9 நமது புனிதங்களில் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது மற்றும் நவராத்திரியின் போது வணங்கப்படும் நவ துர்க்கையின் ஒன்பது வடிவங்களுடன் தொடர்புடையது என்று அவர் கூறினார். இன்றைய தினம் பெண் சக்தியை வழிபடும் நாளாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அகமதாபாத்தில் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரை

December 09th, 01:30 pm

மதிப்பிற்குரிய சுவாமி கௌதமானந்தா ஜி மகராஜ் அவர்களே, ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தின் மதிப்புமிக்க துறவிகளே, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய அனைத்து சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே, வணக்கம்!

குஜராத்தில் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

December 09th, 01:00 pm

குஜராத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தா ஜி மகராஜ், ராமகிருஷ்ண மடம் மற்றும் அந்த இயக்கத்தின் துறவிகள், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உள்ளிட்ட அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். சாரதா தேவி, குருதேவ் ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோருக்கு திரு மோடி மரியாதை செலுத்தினார். ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்த மகாராஜின் பிறந்த நாளையொட்டி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.

மஹாராஷ்டிராவில் 511 திறன் மேம்பாட்டு மையங்கள் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 19th, 05:00 pm

நவராத்திரிப் பண்டிகை நடந்து வருகிறது. அன்னையின் ஐந்தாவது வடிவமான ஸ்கந்தமாதாவை வணங்கும் நாள் இன்று. ஒவ்வொரு தாயும் தன் பிள்ளைக்கு எல்லா சந்தோஷமும், புகழும் கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த மகிழ்ச்சியையும் புகழையும் அடைவது கல்வி மற்றும் திறமையால் மட்டுமே சாத்தியமாகும். இத்தகைய நல்ல தருணத்தில், மகாராஷ்டிராவின் பிள்ளைகளுக்காகத் திறன் மேம்பாட்டிற்காக ஒரு பெரிய திட்டம் தொடங்கப்படுகிறது. திறன் மேம்பாட்டுப் பாதையில் முன்னேற உறுதி பூண்டுள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின், வாழ்க்கை இன்று காலை மங்களகரமானதாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மகாராஷ்டிராவில் 511 ஊரகத் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்

October 19th, 04:30 pm

மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். மகாராஷ்டிராவின் 34 கிராமப்புற மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள இந்த மையங்கள் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை நடத்தும்.

ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்களின் 9-வது மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

October 13th, 01:00 pm

இந்தியாவின் 140 கோடி மக்களின் சார்பாக ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சிமாநாட்டிற்கு வருகை தந்த பிரமுகர்களை வரவேற்கிறேன். இந்த உச்சிமாநாடு உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடாளுமன்ற நடைமுறைகளின் 'மகா கும்பமேளா' ஆகும். இன்று கலந்து கொண்டுள்ள அனைத்துப் பிரதிநிதிகளும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்றக் கட்டமைப்பின் அனுபவத்தைக் கொண்டுள்ளனர். இன்றைய நிகழ்வு மிகுந்த திருப்தி அளிக்கிறது.

அமேதி நாடாளுமன்றத் தொகுதி விளையாட்டுப் போட்டி 2023 நிறைவு விழாவில் பிரதமர் உரை

October 13th, 12:40 pm

அமேதி நாடாளுமன்றத் தொகுதி விளையாட்டுப் போட்டி 2023 நிறைவு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

வேலைவாய்ப்பு முகாமின் கீழ் அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 71,000 பணியாளர்களுக்கு நியமன கடிதங்களை வழங்கும் விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 20th, 10:45 am

2023-ஆம் ஆண்டின் முதலாவது வேலைவாய்ப்பு முகாம், இது. வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமல்லாது கோடிக்கணக்கான குடும்பங்களிடையே இன்றைய நிகழ்வு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில் லட்சக்கணக்கானோர் அரசு பணிக்கான நியமனங்களை பெற உள்ளனர்.

வேலைவாய்ப்பு முகாமில் 71,000 பேருக்குப் பணிநியமன ஆணைகளைக் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் வழங்கினார்

January 20th, 10:30 am

வேலைவாய்ப்பு முகாமில் அரசுத்துறையின் பல்வேறு நிறுவனங்களில் புதிதாக சேரவிருக்கும் 71,000 பேருக்கு பணிநியமன ஆணைகளை இன்று காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார். வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடாகவே இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக, வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாகின்றன. இளைஞர்களின் மேம்பாட்டுக்கு உதவி செய்து அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தங்களது பங்களிப்பை வழங்கும் வகையில் இது அமையப்பெற்றுள்ளது.

குஜராத்தில் 11-வது விளையாட்டு மகா கும்பமேளா தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

March 12th, 06:40 pm

குஜராத்தின் ஆளுனர் ஆச்சாரிய தேவ்வ்ரத் அவர்களே, மாநிலத்தின் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் அவர்களே, எனது நாடாளுமன்ற சகாவும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவருமான சி.ஆர்.பாட்டீல் அவர்களே, குஜராத்தின் விளையாட்டுக்கள் துறை இணையமைச்சர் திரு.ஹர்ஷ் சிங்வி அவர்களே, எனது நாடாளுமன்ற சகாக்கள் திரு.ஹஷ்முக் பாய் பட்டேல், திரு.நர்ஹரி அமீன், அகமதாபாத் மேயர் திரு.கிரித் குமார் பார்மர் அவர்களே, இதர பிரமுகர்களே, குஜராத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்துள்ள எனது இளம் நண்பர்களே!

11-வது விளையாட்டு மகாகும்பமேளாவை பிரதமர் தொடங்கி வைத்தார்

March 12th, 06:30 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி அகமதாபாத்தில் 11-வது விளையாட்டு மகாகும்பமேளாவை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத், முதலமைச்சர் திரு பூபேந்திர பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

IPS Probationers interact with PM Modi

July 31st, 11:02 am

PM Narendra Modi had a lively interaction with the Probationers of Indian Police Service. The interaction with the Officer Trainees had a spontaneous air and the Prime Minister went beyond the official aspects of the Service to discuss the aspirations and dreams of the new generation of police officers.

சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகளிடம் பிரதமர் ஆற்றிய உரை

July 31st, 11:01 am

உங்கள் அனைவருடனும் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களது எண்ணங்களை அறிந்து கொள்வதற்காக உங்களைப் போன்ற இளம் நண்பர்களுடன் ஒவ்வொரு ஆண்டும் உரையாடுவதை நான் வழக்கமாகக் கொண்டுள்ளேன். உங்களது வார்த்தைகள், கேள்விகள் மற்றும் ஆர்வம் ஆகியவை எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கு எனக்கு உதவிகரமாக உள்ளன.

சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

July 31st, 11:00 am

சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் போது, பயிற்சி அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார். மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா மற்றும் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த ராய் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள குழுவினரிடம் காணொலி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

July 13th, 05:02 pm

நாட்டுமக்கள் அனைவரின் உணர்வுகளும் உங்களுடன் இருக்கும். நான் உங்கள் அனைவரையும் மொத்தமாக காணும்போது, மனஉறுதி, தன்னம்பிக்கை மற்றும் ஆக்கப்பூர்வ எண்ணங்கள் பிரதிபலித்ததை அறிந்துகொள்ள முடிந்தது. உங்களுக்கு கடமை உணர்வும், போட்டித் தன்மையும் இருக்கிறது. இந்த நற்பண்புகள் அனைத்தும் புதிய இந்தியாவையே சாரும். உங்களில் சிலர், நாட்டின் தென் மாநிலங்கள், வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். சிலர், தங்களது கிராமத்துக் களங்களிலிருந்து விளையாட்டுக்களைத் தொடங்கியவர்கள். சிலர், குழந்தைப் பருவத்திலிருந்தே பயிற்சி அமைப்புகள் மூலம் பயிற்சி பெற்றிருக்கிறீர்கள். ஆனால் தற்போது, நீங்கள் அனைவரும் ‘ இந்திய அணி‘-யின் அங்கமாக இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் நாட்டிற்காக விளையாட இருக்கிறீர்கள். இந்த பன்முகத்தன்மை, அணி ஒற்றுமை, ‘ ஒரே பாரதம் உன்னத பாரதம்‘ என்பதன் அடையாளமாகத் திகழ்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் இந்திய தடகள வீரர்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள்

July 13th, 05:01 pm

பிரதமர்; உங்களுடனும், உங்களது சகாக்களுடனும் முந்தைய மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் விவாதித்துள்ளேன். அண்மையில் பாரிசில் தங்கம் வென்ற பின்னர் நாடு பற்றி நீங்கள் பேசினீர்கள். இன்று நீங்கள் தான் உலகின் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளீர்கள். நீங்கள் குழந்தை பருவத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது மாம்பழங்களைப் பயன்படுத்தியதாக நான் அறிந்தேன். மாம்பழங்களுடனான உங்களது பயணம் மிகவும் சிறப்பானது. இந்தப் பயணம் குறித்து நாடு தெரிந்து கொள்ள விரும்புகிறது. இதுபற்றி நீங்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.