‘போர்க்கால முறையில் சுற்றுலாவை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரை

March 03rd, 10:21 am

இன்றைய புதிய இந்தியா புதிய வேலை முறையுடன் முன்னேறி வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ளதுடன், நாட்டு மக்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். பழைய வேலை முறை தொடர்ந்திருந்தால், இதுபோன்ற பட்ஜெட்டை யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இன்று நாட்டின் சுற்றுலாத் துறையின் மாற்றத்திற்காக இந்த இணையவழிக் கருத்தரங்கை நடத்துகிறோம்.

சுற்றுலாவை தீவிர இயக்கமாக மேம்படுத்துதல் என்ற தலைப்பிலான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்

March 03rd, 10:00 am

சுற்றுலாவை தீவிர இயக்கமாக மேம்படுத்துதல் என்ற தலைப்பிலான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மத்திய பட்ஜெட் 2023ல் அறிவிக்கப்பட்ட திட்டங்களை திறம்பட அமல்படுத்துவது தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கேட்கும் விதமாக மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 12 இணையவழிக் கருத்தரங்குகளில் இது 7-வது ஆகும்.

காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை தொடங்கி வைக்க டிசம்பர் 13-ம் தேதி பிரதமர் வாரணாசி செல்கிறார்

December 12th, 03:49 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 13,14 தேதிகளில் வாரணாசிக்கு செல்கிறார். டிசம்பர் 13 பகல் 1 மணியளவில், பிரதமர் ஶ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்கிறார். பின்னர் அவர், ரூ.339 கோடியில் கட்டப்பட்டுள்ள ஶ்ரீ காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தின் முதல் கட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

குஜராத்தின், சோம்நாத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் பிரதம மந்திரி ஆற்றிய உரையின் சுருக்கம்

August 20th, 11:01 am

ஜெய் சோம்நாத், மதிப்பிற்குரிய லால் கிருஷ்ண அத்வானி ஜி, உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஜி, குஜராத் முதல்வர் திரு. விஜய் ஜி உள்ளிட்ட என்னோடு பங்கேற்றுள்ளவர்களே, பக்தர்களே அனைவருக்கும் வணக்கம்!

சோம்நாத்தில் பல திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்

August 20th, 11:00 am

குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் பல திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். சோம் நாத் பவனி, சோம்நாத் கண்காட்சி கூடம், மீண்டும் கட்டப்பட்ட ஜூனா சோம்நாத் கோயில் ஆகியவை உட்பட பல திட்டங்கள் தொடங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ பார்வதி கோயிலுக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் திரு லால் கிருஷ்ணா அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சோம்நாத்தில் பல்வேறு திட்டங்களை ஆகஸ்ட் 20 அன்று பிரதமர் திறந்து வைத்து அடிக்கல் நாட்டுகிறார்

August 18th, 05:57 pm

குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் பல்வேறு திட்டங்களை ஆகஸ்ட் 20 அன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்து அடிக்கல் நாட்டுகிறார். சோம்நாத் நடை பாதை, சோம்நாத் கண்காட்சி மையம் மற்றும் புனரமைக்கப்பட்ட பழைய (ஜுனா) சோம்நாத் கோயில் வளாகம் ஆகியவற்றை பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். ஸ்ரீ சிவ பார்வதி கோயிலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.