Developing Indian Railways is key to achieving the resolve of Viksit Bharat: PM
January 06th, 01:00 pm
PM Modi inaugurated key railway projects in Jammu, including the new Jammu Railway Division, and launched the Charlapalli Terminal Station in Telangana. He also laid the foundation for the Rayagada Railway Division Building in Odisha. These initiatives aim to modernize railway infrastructure, improve connectivity, create jobs, and promote regional development, with special emphasis on enhancing passenger facilities and boosting economic growth.PM Modi inaugurates and lays foundation stone of various railway projects
January 06th, 12:30 pm
PM Modi inaugurated key railway projects in Jammu, including the new Jammu Railway Division, and launched the Charlapalli Terminal Station in Telangana. He also laid the foundation for the Rayagada Railway Division Building in Odisha. These initiatives aim to modernize railway infrastructure, improve connectivity, create jobs, and promote regional development, with special emphasis on enhancing passenger facilities and boosting economic growth.3-வது வீரபாலகர் தினத்தை முன்னிட்டு தேசிய சிறார் விருது பெற்ற 17 பேருடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
December 26th, 09:55 pm
விருது பெற்றவர் - நான் மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளேன், புத்தகங்கள் எழுதுவதற்கு முக்கிய காரணம் நான் வாசிப்பை நேசிப்பதுதான். எனக்கு அரிய வகை நோய் உள்ளது, நான் உயிர் வாழ இரண்டு ஆண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தேன். ஆனால் என் அம்மா, என் சகோதரி, என் பள்ளி, ...... மற்றும் நான். என் புத்தகங்களை வெளியிட்ட தளம், இன்று நான் இருக்கும் நிலைக்கு என்னால் வர முடிந்தது.தேசிய சிறார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்
December 26th, 09:54 pm
இந்த மனம் திறந்த கலந்துரையாடலின் போது, குழந்தைகளின் வாழ்க்கைக் கதைகளைக் கேட்டறிந்த பிரதமர், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடினமாக உழைக்கவேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். பல புத்தகங்களை எழுதியுள்ள ஒரு சிறுமியுடன் பிரதமர் உரையாடிய போது, தனது புத்தகங்களுக்கு கிடைத்த வரவேற்பை தெரிவித்த அச்சிறுமி மற்ற சிறுவர்களும் தங்கள் சொந்த புத்தகங்களை எழுதத் தொடங்கியுள்ளனர் என்றார். மற்ற குழந்தைகளுக்கு ஊக்கமளித்ததற்காக திரு மோடி அச்சிறுமியைப் பாராட்டினார்.Our constitution embodies the Gurus’ message of Sarbat da Bhala—the welfare of all: PM Modi
December 26th, 12:05 pm
The Prime Minister, Shri Narendra Modi participated in Veer Baal Diwas today at Bharat Mandapam, New Delhi.Addressing the gathering on the occasion of the 3rd Veer Baal Diwas, he said their Government had started the Veer Baal diwas in memory of the unparalleled bravery and sacrifice of the Sahibzades.புதுதில்லியில் நடைபெற்ற வீர பாலகர் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்
December 26th, 12:00 pm
புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற வீர பாலகர் தின விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். 3-வது வீர பாலகர் தினத்தையொட்டி கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், சாஹிப்ஜாதேக்களின் இணையற்ற வீரம் மற்றும் தியாகத்தின் நினைவாக தங்களது அரசு வீர பாலகர் தினத்தை தொடங்கியதாகக் கூறினார். இந்த நாள் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நாட்டிற்கான உத்வேகம் அளிக்கும் திருவிழாவாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த நாள் பல குழந்தைகள் மற்றும் இளைஞர்களை வெல்ல முடியாத துணிச்சலுடன் ஊக்குவிக்க பணியாற்றியது என்று அவர் மேலும் கூறினார். இன்று வீரம், கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு மற்றும் கலை ஆகிய துறைகளில் வீர பாலகர் விருது பெற்ற 17 குழந்தைகளுக்கு திரு மோடி பாராட்டு தெரிவித்தார். இன்று விருது பெற்ற இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் திறனை அடையாளப்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் குருமார்கள் மற்றும் துணிச்சலான சாஹிப்ஜாதேகளுக்கு மரியாதை செலுத்திய பிரதமர், விருது பெற்றவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.மத்திய பிரதேசத்தின் கஜுராஹோவில் கென் - பெட்வா நதிகளை இணைக்கும் தேசிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 25th, 01:00 pm
மாவீரர்களின் பூமியான பண்டேல்கண்ட் மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய பிரதேசத்தின் மாண்புமிகு ஆளுநர் திரு மங்குபாய் படேல் அவர்களே, முதல்வர் திரு மோகன் யாதவ் அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு சிவராஜ் சிங், திரு வீரேந்திர குமார் மற்றும் திரு சிஆர் பாட்டீல் அவர்களே, துணை முதல்வர் திரு ஜெகதீஷ் தேவ்தா அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, எனதன்பு சகோதர சகோதரிகளே.மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் கென்-பெட்வா நதிகள் இணைப்புத் தேசியத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
December 25th, 12:30 pm
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இந்திய, உலக கிறிஸ்தவ சமூகத்தினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் தலைமையிலான அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, இதற்காக மத்தியப் பிரதேச மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். கடந்த ஓராண்டில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதோடு, வளர்ச்சிப் பணிகளும் வேகம் பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார். வரலாற்றுச் சிறப்புமிக்க கென்-பெட்வா நதிகள் இணைப்புத் திட்டமான தௌதான் அணைக்கட்டு, மத்தியப் பிரதேசத்தின் முதலாவது சூரியசக்தி மின் நிலையமான ஓம்கரேஷ்வர் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டம் ஆகியவற்றுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இதற்காக மத்தியப் பிரதேச மக்களுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.வேலைவாய்ப்புத் திருவிழாவில் காணொலிக் காட்சி மூலம் 71,000க்கும் அதிகமானோருக்கு நியமனக் கடிதங்களை வழங்கி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
December 23rd, 11:00 am
நான் நேற்று இரவு குவைத்திலிருந்து திரும்பினேன். அங்கு, நான் இந்திய இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் ஒரு விரிவான சந்திப்பை நடத்தினேன். அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபட்டேன். இப்போது, நான் நாடு திரும்பி வந்தவுடன், எனது முதல் நிகழ்ச்சி நம் தேசத்தின் இளைஞர்களுடனான நிகழ்ச்சியாக உள்ளது - உண்மையில் இது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வாகும். உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இன்றைய நிகழ்வு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. உங்களின் பல ஆண்டுகால கனவுகள் பலனளித்துள்ளன. உங்களின் இடைவிடாத முயற்சிகளுக்குப் பலன் கிடைத்துள்ளது. கடந்து செல்லும் 2024-ம் ஆண்டு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் புதிய மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்கிறது. இந்த மகத்தான தருணத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வேலைவாய்ப்புத் திருவிழாவின்கீழ் மத்திய அரசுத் துறைகள், நிறுவனங்களில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 -க் கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார்
December 23rd, 10:30 am
அரசுத் துறைகள், அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை இந்த வேலைவாய்ப்புத் திருவிழா எடுத்துக் காட்டுவதாக உள்ளது. நாட்டைக் கட்டமைப்பது, சுய அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கு பங்களிப்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 'ஓராண்டு நிறைவில் முன்னேற்றம்' நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
December 17th, 12:05 pm
கோவிந்த் நகரில் நான் கோவிந்த் தேவ் அவர்களுக்கு வணக்கங்களைச் செலுத்துகிறேன். அனைவருக்கும் என் வணக்கங்கள்!ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 'ஓராண்டு முடிவில் முன்னேற்றம்' நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
December 17th, 12:00 pm
ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டு நிறைவையொட்டி கொண்டாடப்பட்ட ஓராண்டு முடிவில் முன்னேற்றம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அவர், ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக ராஜஸ்தான் அரசுக்கும், ராஜஸ்தான் மக்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களின் ஆசீர்வாதங்களைப் பெறும் அதிர்ஷ்டம் தமக்கு கிடைத்தது என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தானின் வளர்ச்சிப் பணிகளுக்கு புதிய திசை காட்டுவற்கும் வேகத்தை அதிகரிப்பதற்கும் மேற்கொண்ட முயற்சிகளுக்காக ராஜஸ்தான் முதலமைச்சர் மற்றும் அவரது குழுவினரை திரு மோடி பாராட்டினார். முதலாம் ஆண்டு வரவிருக்கும் பல ஆண்டு வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார். இன்றைய நிகழ்ச்சி அரசின் ஓராண்டு நிறைவைக் குறிப்பது மட்டுமின்றி, ராஜஸ்தானின் பிரகாசமான ஒளியையும் ராஜஸ்தானின் வளர்ச்சித் திருவிழாவையும் அடையாளப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தான் எழுச்சி உச்சி மாநாடு 2024-க்கு அண்மையில் தாம் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்த திரு மோடி, உலகெங்கிலும் உள்ள பல முதலீட்டாளர்கள் அதில் கலந்து கொண்டதாகவும், இன்று ரூ .45,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் ராஜஸ்தானில் தண்ணீர் தொடர்பாக எதிர்கொள்ளும் தடைகளுக்கு பொருத்தமான தீர்வை வழங்கும் என்றும், இந்தியாவுடன் மிகவும் நன்கு இணைக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தானை மாற்றும் என்றும் அவர் கூறினார். இந்த வளர்ச்சிப் பணிகள் அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கும், ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும், சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும். ராஜஸ்தானின் விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.இலங்கை அதிபர் உடனிருந்த கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
December 16th, 01:00 pm
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அதிபர் திசநாயகவை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபராக உங்களின் முதலாவது வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபர் திசநாயகவின் வருகை எங்கள் உறவுகளில் புதிய உத்வேகத்தையும் சக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கூட்டாண்மைக்கான எதிர்கால தொலைநோக்கை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எங்கள் பொருளாதார கூட்டணியில் முதலீடு சார்ந்த வளர்ச்சி, இணைப்பு ஆகியவற்றுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். எங்கள் கூட்டணியின் முக்கிய தூண்களாக கட்டமைப்பு, டிஜிட்டல் மற்றும் எரிசக்தி இணைப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே மின்சாரத் தொகுப்பு இணைப்பு மற்றும் பல்பொருள் பெட்ரோலிய குழாய்கள் அமைப்பதை நோக்கி நாங்கள் பணியாற்றுவோம். சம்பூர் சூரிய மின்சக்தி திட்டம் துரிதப்படுத்தப்படும். இதற்கும் கூடுதலாக, இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு திரவ இயற்கை எரிவாயு வழங்கப்படும். இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற இரு தரப்பினரும் முயற்சி செய்யப்படும்.பிரயாக்ராஜில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 13th, 02:10 pm
உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர்கள் கேசவ் பிரசாத் மவுரியா அவர்களே, பிரஜேஷ் பதக் அவர்களே, உத்தரப்பிரதேசத்தின் மதிப்பிற்குரிய அமைச்சர்களே, மதிப்பிற்குரிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களே, பிரயாக்ராஜ் மேயர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவரே, இதர சிறப்பு விருந்தினர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே.உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ரூ.5,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
December 13th, 02:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ரூ.5,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சங்கமத்தின் புனித பூமியான பிரயாக்ராஜுக்கு பக்தியுடன் தலைவணங்கி, மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட துறவிகள், சாதுக்களுக்கு மரியாதை செலுத்தினார். தங்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் மகா கும்பமேளாவை மாபெரும் வெற்றியாக்கிய ஊழியர்கள், தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு திரு மோடி நன்றி தெரிவித்தார். மகா கும்பமேளாவின் பிரம்மாண்டம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், 45 நாட்கள் நீடிக்கும் மகா யாகத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்களை வரவேற்கும் உலகின் மிகப்பெரிய கூட்டங்களில் இதுவும் ஒன்று என்று கூறினார். இந்த நிகழ்வுக்காக ஒரு புதிய நகரம் அமைக்கப்பட்டுள்ளது என்றார். பிரயாக்ராஜ் மண்ணில் புதிய வரலாறு எழுதப்படுகிறது என்று பிரதமர் பெருமிதம் கொண்டார். அடுத்த ஆண்டு மகா கும்பமேளா அமைப்பது நாட்டின் ஆன்மீக மற்றும் கலாச்சார அடையாளத்தை புதிய சிகரங்களுக்கு எடுத்துச் செல்லும் என்று கூறிய பிரதமர், ஒற்றுமையின் இத்தகைய 'மகாயாகம்' உலகம் முழுவதும் விவாதிக்கப்படும் என்று கூறினார். மகா கும்பமேளாவை வெற்றிகரமாக நடத்த மக்களுக்கு அவர் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.டிசம்பர் 13 அன்று பிரதமர் உத்தரப்பிரதேசம் பயணம்
December 12th, 02:10 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 13 அன்று உத்தரப்பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். பிரயாக்ராஜ் செல்லும் அவர், நண்பகல் 12.15 மணியளவில் திரிவேணி சங்கமத்தில் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு, நண்பகல் 12.40 மணியளவில், அங்குள்ள தல விருட்சத்தில் பிரதமர் பூஜை செய்கிறார். அதைத் தொடர்ந்து ஹனுமான் மற்றும் சரஸ்வதி கோவில்களில் தரிசனம் செய்கிறார். பிற்பகல் 1.30 மணியளவில், மகா கும்பமேளா நடைபெறும் இடத்தைப் பார்வையிடுகிறார். பிற்பகல் 2 மணியளவில், பிரயாக்ராஜில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் ரூ.5500 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.அகமதாபாத்தில் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரை
December 09th, 01:30 pm
மதிப்பிற்குரிய சுவாமி கௌதமானந்தா ஜி மகராஜ் அவர்களே, ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தின் மதிப்புமிக்க துறவிகளே, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய அனைத்து சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே, வணக்கம்!குஜராத்தில் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
December 09th, 01:00 pm
குஜராத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தா ஜி மகராஜ், ராமகிருஷ்ண மடம் மற்றும் அந்த இயக்கத்தின் துறவிகள், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உள்ளிட்ட அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். சாரதா தேவி, குருதேவ் ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோருக்கு திரு மோடி மரியாதை செலுத்தினார். ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்த மகாராஜின் பிறந்த நாளையொட்டி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024- இன் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
December 09th, 11:00 am
ராஜஸ்தான் ஆளுநர் திரு ஹரிபாவ் பகடே அவர்களே, மாநில முதலமைச்சர் திரு பஜன்லால் ஜி சர்மா அவர்களே, ராஜஸ்தான் அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தொழில்துறை நண்பர்களே, பல்வேறு நாடுகளின் தூதர்களே, தூதரகப் பிரதிநிதிகளே, பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களேராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
December 09th, 10:34 am
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024 மற்றும் ராஜஸ்தான் உலகளாவிய வர்த்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், ராஜஸ்தானின் வெற்றிப் பயணத்தில் இன்று மற்றுமொரு சிறப்பான நாள் என்று குறிப்பிட்டதோடு ஜெய்ப்பூரில் உள்ள பிங்க் சிட்டியில் நடைபெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சி மாநாடு 2024-ல் பங்கேற்ற தொழில்துறை மற்றும் வர்த்தகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், பிரதிநிதிகளுக்கு வாழ்த்தும் தெரிவித்தார். இந்தப் பிரம்மாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக ராஜஸ்தான் அரசையும் அவர் பாராட்டினார்.