Tuticorin International Container Terminal marks a significant milestone in India’s journey towards a Viksit Bharat: PM Modi
September 16th, 02:00 pm
PM Modi addressed the inauguration of Tuticorin International Container Terminal. Speaking on the occasion, the PM underlined that this marks a significant milestone in India’s journey towards becoming a developed nation and hailed the new Tuticorin International Container Terminal as the ‘new star of India's marine infrastructure’.தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் சர்வதேச சரக்குப் பெட்டக முனையத் திறப்புவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை
September 16th, 01:52 pm
தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டக முனையத் திறப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கிய இந்தியாவின் பயணத்தில், இன்று ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார், மேலும் புதிய தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டக முனையம், 'இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம்' என்று பாராட்டினார். வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் திறனை விரிவுபடுத்துவதில் இந்தியாவின் பங்கை எடுத்துரைத்த பிரதமர், 14 மீட்டருக்கும் அதிகமான ஆழமான கச்சா எண்ணெய் தளம் மற்றும் 300 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த முனையம், வ.உ.சி. துறைமுகத்தின் திறனை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றார். புதிய முனையம், துறைமுகத்தில் தளவாட செலவுகளைக் குறைப்பதுடன், இந்தியாவுக்கு அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார். தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாம் மேற்கொண்ட பயணத்தின் போது வ.உ.சி. துறைமுகம் தொடர்பாக தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டதில் அவர் திருப்தி தெரிவித்தார். முனையத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்று, பாலின பன்முகத்தன்மைக்கான அதன் அர்ப்பணிப்பாகும், அதன் ஊழியர்களில் 40% பெண்கள், இது கடல்சார் துறையில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியைக் குறிக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.