சிட்னி பேச்சுவார்த்தையில் பிரதமரின் முக்கிய உரை

November 18th, 09:19 am

சிட்னி பேச்சுவார்த்தையின் தொடக்க நிகழ்வில் முக்கிய உரை நிகழ்த்த நீங்கள் என்னை அழைத்திருப்பது இந்திய மக்களுக்கான மிகப்பெரிய கௌரவமாகும். இந்திய-பசிபிக் பிராந்தியம் மற்றும் வளர்ந்துவரும் டிஜிட்டல் உலகம் ஆகியவற்றில் இந்தியாவின் மையப் பங்களிப்பை அங்கீகரிப்பதாக இதனை நான் பார்க்கிறேன். இந்தப் பிராந்தியத்திற்கும் உலகத்திற்கும் நன்மை செய்யும் சக்தியாக உள்ள நம்மிரு நாடுகளுக்கிடையே விரிவான உத்திகள் வகுத்தல் பங்களிப்புக்கு இது ஒரு சிறப்பு என்றும் கருதுகிறேன். வளர்ந்துவரும் முக்கியமான சைபர் தொழில்நுட்பங்கள் குறித்து கவனம் செலுத்துவதற்காக சிட்னி பேச்சுவார்த்தையை நான் பாராட்டுகிறேன்.

சிட்னி பேச்சுவார்த்தையில் முக்கிய உரை நிகழ்த்திய பிரதமர் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புரட்சி குறித்து பேசினார்

November 18th, 09:18 am

சிட்னி பேச்சுவார்த்தையின் தொடக்க நிகழ்வில் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று முக்கிய உரை நிகழ்த்தினார். இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புரட்சியின் மையக்கருத்து குறித்து திரு மோடி பேசினார். ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரிசனின் அறிமுக உரைக்கு முன்னதாக இந்த உரை இடம்பெற்றது.