7-வது இந்திய மொபைல் மாநாடு தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 27th, 10:56 am

இந்தியா மொபைல் மாநாட்டின் ஏழாவது பதிப்பில் உங்களுடன் பங்கேற்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். 21-ஆம் நூற்றாண்டின் வேகமாக மாறிவரும் உலகில், இந்த நிகழ்வு லட்சக் கணக்கானவர்களின் இயங்குநிலையை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் நாம் எதிர்காலத்தைப் பற்றிப் பேசினோம், அது அடுத்த தசாப்தம் அல்லது 20-30 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது அடுத்த நூற்றாண்டைக் குறிக்கிறது. ஆனால், இன்று, ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள விரைவான மாற்றங்களால், ‘எதிர்காலம், இங்கேயும், இப்போதும் உள்ளது’ என்று சொல்கிறோம். தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம், இணைப்பு, 6ஜி, செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, குறைக்கடத்திகள், ட்ரோன்கள், விண்வெளித் துறை, ஆழ்கடல் ஆய்வு, பசுமை தொழில்நுட்பம் அல்லது பிற துறைகளாக இருந்தாலும், வரவிருக்கும் காலம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இளைய தலைமுறையினர் நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்துகிறார்கள், நமது தொழில்நுட்ப புரட்சியை வழிநடத்துகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயம்.

7-வது இந்திய மொபைல் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்

October 27th, 10:35 am

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 7-வது இந்தியா மொபைல் மாநாடு 2023-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (27.10.2023) தொடங்கி வைத்தார். இந்திய மொபைல் மாநாடு (ஐஎம்சி) என்பது ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பாகும். இந்த மாநாடு 2023 அக்டோபர் 27 முதல் 29 வரை 'உலகளாவிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு' என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது. ஐஎம்சி 2023 முக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களின் மேம்பாடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 '5ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை பிரதமர் வழங்கினார்.

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 05th, 03:31 pm

இன்று, 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. குடிநீர், எரிவாயு குழாய், 4 வழிச்சாலை என எதுவாக இருந்தாலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும் திட்டங்கள் இவை. இதனால் இங்குள்ள விவசாயிகள் நிச்சயம் பயனடைவார்கள்; புதிய தொழிற்சாலைகள் மற்றும் ஆலைகள் இங்கு அமைக்கப்படும், நமது இளைஞர்களுக்கும் இங்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ரூ.12,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

October 05th, 03:30 pm

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் ரூ.12,600 கோடி மதிப்பிலான சாலை, ரயில், எரிவாயு குழாய், வீட்டுவசதி மற்றும் தூய குடிநீர் போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நிறைவு செய்யப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ராணி துர்காவதியின் 500-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஜபல்பூரில் 'வீராங்கனா ராணி துர்காவதி நினைவிடம் மற்றும் பூந்தோட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவையில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 19th, 01:50 pm

இது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தொடக்க மற்றும் வரலாற்று அமர்வு ஆகும். மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மக்களவையில் பிரதமர் உரையாற்றினார்

September 19th, 01:18 pm

அவையில் உரையாற்றிய பிரதமர், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் அமர்வு நடைபெறுவதாகக் குறிப்பிட்டு, இந்த நிகழ்வில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாளன்று சிறப்பு அமர்வில் அவையில் உரையாற்ற வாய்ப்பு வழங்கிய மக்களவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்த அவர், உறுப்பினர்களுக்கு அன்பான வரவேற்பளித்தார். இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குச் செல்வதன் மூலம் எதிர்காலத்திற்கான உறுதியுடன் இந்தியா முன்னேறி வரும் நிலையில், இது அமிர்த காலத்தின் விடியல் என்று குறிப்பிட்டார். அண்மைக்கால சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், அறிவியல் துறையில் சந்திரயான் 3-ன் வெற்றி மற்றும் ஜி20 அமைப்பு மற்றும் உலக அளவில் அதன் தாக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். இந்தியாவுக்குத் தனித்துவமான ஒரு வாய்ப்பு இருப்பதாகவும், இந்த வெளிச்சத்தில், நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். விநாயகர் சதுர்த்தியின் மங்களகரமான நிகழ்வைக் குறிப்பிட்ட பிரதமர், செழிப்பு, மங்களம், பகுத்தறிவு மற்றும் ஞானத்தின் கடவுள் விநாயகர் என்று கூறினார். தீர்மானங்களை நிறைவேற்றி, புதிய உற்சாகத்துடனும் சக்தியுடனும் புதிய பயணத்தைத் தொடங்க வேண்டிய தருணம் இது என்று பிரதமர் மேலும் கூறினார். விநாயகர் சதுர்த்தி மற்றும் புதிய தொடக்கத்தை முன்னிட்டு லோகமான்ய திலகரை நினைவு கூர்ந்த பிரதமர், சுதந்திரப் போராட்டத்தின் போது, லோகமான்ய திலகர் விநாயகர் சதுர்த்தியை நாடு முழுவதும் சுயராஜ்ஜிய சுடர் ஏற்றுவதற்கான ஊடகமாக மாற்றினார் என்று கூறினார். இன்று நாம் அதே உத்வேகத்துடன் நகர்கிறோம் என்று திரு மோடி கூறினார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 19th, 11:50 am

மதிப்பிற்குரிய குடியரசு துணைத்தலைவர் அவர்களே! மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே! மதிப்பிற்குரிய மூத்த பிரமுகர்கள் மற்றும் 1.4 பில்லியன் குடிமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்பிற்குரிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களே!

நாடாளுமன்ற சிறப்பு அமர்வின்போது மைய மண்டபத்தில் உறுப்பினர்களிடையே பிரதமர் உரையாற்றினார்

September 19th, 11:30 am

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துப் பிரதமர் உரையைத் தொடங்கினார். நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் அவை நடவடிக்கைகள் இடம்பெறும் இன்றைய சந்தர்ப்பம் பற்றி அவர் குறிப்பிட்டார். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உறுதியுடனும் தீர்மானத்துடனும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி நாம் செல்கிறோம் என்று பிரதமர் கூறினார்.

யஷோபூமியை நாட்டுக்கு அர்ப்பணித்து, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 17th, 06:08 pm

மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் இந்த அற்புதமான கட்டிடத்தில் கூடியுள்ள அன்பான சகோதர சகோதரிகளே, 70 க்கும் மேற்பட்ட நகரங்களிலிருந்து இந்த திட்டத்தில் இணைந்த எனது சக குடிமக்களே, இதர சிறப்பு விருந்தினர்களே எனது குடும்ப உறுப்பினர்களே!

இந்தியா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டமான யசோபூமியை புதுதில்லியில் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

September 17th, 12:15 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள துவாரகாவில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டமான 'யசோபூமி'யை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். 'யசோபூமி' ஒரு அற்புதமான மாநாட்டு மையம், பல கண்காட்சி அரங்குகள் மற்றும் பிற வசதிகளைக் கொண்டுள்ளது. விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பாரம்பரிய கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான 'பி.எம் விஸ்வகர்மா திட்டத்தை' அவர் தொடங்கி வைத்தார். பிரதமர் விஸ்வகர்மா லோகோ, டேக்லைன் மற்றும் போர்ட்டலையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தனிப்பயனாக்கப்பட்ட முத்திரைத் தாள், உபகரண கையேடு மற்றும் வீடியோவையும் அவர் வெளியிட்டார். 18 பயனாளிகளுக்கு விஸ்வகர்மா சான்றிதழ்களை பிரதமர் வழங்கினார்.

மத்தியப் பிரதேச வேலைவாய்ப்பு முகாமில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 21st, 12:15 pm

இந்த வரலாற்றுக் காலத்தில் கற்பிக்கும் மிக முக்கியமான பொறுப்புடன் இன்று நீங்கள் அனைவரும் தங்களை இணைத்துக் கொள்கிறீர்கள். இந்த ஆண்டு, நாட்டின் வளர்ச்சியில் தேசிய பண்பு எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது குறித்து செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து விரிவாக பேசினேன். இந்தியாவின் எதிர்கால சந்ததியை வடிவமைத்து, அவர்களை நவீனமாக வடிவமைத்து, அவர்களுக்கு ஒரு புதிய வழியைக்காட்ட வேண்டியது உங்கள் அனைவரின் கடமையாகும். மத்தியப் பிரதேசத்தின் தொடக்கப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள 5500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 3 ஆண்டுகளில் மத்தியப் பிரதேசத்தில் சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக மாநில அரசையும் பாராட்டுகிறேன்.

மத்தியப் பிரதேச வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் உரையாற்றினார்

August 21st, 11:50 am

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இன்று நியமனக் கடிதங்களைப் பெறுபவர்கள் இந்த வரலாற்றுக் காலத்தில் கற்பிக்கும் முக்கிய பொறுப்பில் இணைந்துள்ளனர் என்று கூறினார். நாட்டின் வளர்ச்சியில் தேசிய பண்பின் முக்கியப் பங்கை விவரிக்கும் வகையில் செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர், இன்று வேலை பெறுபவர்கள் அனைவரும் இந்தியாவின் எதிர்கால சந்ததியினரை வடிவமைத்து, அவர்களை நவீனமயமாக்கி, அவர்களுக்கு ஒரு புதிய திசையை வழங்கும் பொறுப்பை வகிப்பார்கள் என்று சுட்டிக் காட்டினார். இந்த வேலைவாய்ப்பு முகாமின் மூலம் இன்று மத்தியப் பிரதேசத்தின் தொடக்கப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஐந்தாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கடந்த 3 ஆண்டுகளில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பிரதமர், இந்த சாதனைக்காக மாநில அரசைப் பாராட்டினார்.

இந்த சவாலான காலங்களில் இந்தியாவின் பொருளாதாரம் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக பிரகாசிக்கிறது: பிரதமர்

August 19th, 06:42 pm

இந்தியா மீதான நம்பிக்கைக்கான காரணங்கள் குறித்து மணிகன்ட்ரோல் வலைத்தளத்தின் கட்டுரைகள் மற்றும் இன்போகிராபிக்ஸ் தொகுப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்திய பொருளாதாரத்தின் வலுவான வளர்ச்சி மற்றும் நெகிழ்ச்சியான உணர்வை மீண்டும் உறுதிப்படுத்தினார் .

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

August 15th, 02:14 pm

எனதருமை 140 கோடி குடும்ப உறுப்பினர்கள், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, இப்போது மக்கள் தொகையின் கண்ணோட்டத்தில் கூட நாம் நம்பிக்கையில் முதலிடத்தில் இருக்கிறோம் என்று பலர் கருதுகின்றனர். இவ்வளவு பெரிய நாடு, 140 கோடி நாட்டு மக்கள், எனது சகோதர சகோதரிகள், எனது குடும்ப உறுப்பினர்கள் இன்று சுதந்திரத் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். இந்தியாவை நேசிக்கும், இந்தியாவை மதிக்கும், இந்தியாவைப் பற்றி பெருமிதம் கொள்ளும் கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் இந்த மாபெரும் சுதந்திரத் திருநாளில் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

India Celebrates 77th Independence Day

August 15th, 09:46 am

On the occasion of India's 77th year of Independence, PM Modi addressed the nation from the Red Fort. He highlighted India's rich historical and cultural significance and projected India's endeavour to march towards the AmritKaal. He also spoke on India's rise in world affairs and how India's economic resurgence has served as a pole of overall global stability and resilient supply chains. PM Modi elaborated on the robust reforms and initiatives that have been undertaken over the past 9 years to promote India's stature in the world.

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

August 15th, 07:00 am

உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் அதே போல் மக்கள் தொகை பின்னணியிலும் நாம் முதலாவது இடத்தில் இருப்பதாக நம்பிக்கைக் கொண்டுள்ளோம். அத்தகைய மகத்தான தேசம் இன்று தனது 140 கோடி சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் சுதந்திரத் திருநாளைக் கொண்டாடுகிறது. இந்த முக்கியமான, புனிதமான தருணத்தில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், நமது தேசமான இந்தியாவை நேசிக்கும், மதிக்கும் மற்றும் பெருமை கொள்ளும் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

21st century is about fulfilling every Indian's aspirations: PM Modi in Lok Sabha

August 10th, 04:30 pm

PM Modi replied to the Motion of No Confidence in Lok Sabha. PM Modi said that it would have been better if the opposition had participated with due seriousness since the beginning of the session. He mentioned that important legislations were passed in the past few days and they should have been discussed by the opposition who gave preference to politics over these key legislations.

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பிரதமர் பதிலுரை

August 10th, 04:00 pm

அவையில் உரையாற்றிய பிரதமர், அரசின் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை காட்டியதற்காக இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவிக்க வந்துள்ளதாக அவர் கூறினார். இது அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு அல்ல, 2018 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அதனை அவையில் அறிமுகம் செய்தவர்களுக்கானது என்று குறிப்பிட்டதை அவர் நினைவுகூர்ந்தார். 2019 ஆம் ஆண்டில் நாங்கள் தேர்தலைச் சந்தித்தபோது, மக்கள் அவர்கள் மீது மிகுந்த பலத்துடன் நம்பிக்கை இல்லை என்று அறிவித்தனர் என்று பிரதமர் கூறினார், தேசிய ஜனநாயகக் கூட்டணி, பிஜேபி ஆகிய இரண்டும் அதிக இடங்களை வென்றன என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஒருவகையில், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் அரசுக்கு அதிர்ஷ்டம் என்று பிரதமர் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியும், பிஜேபியும் அனைத்து சாதனைகளையும் முறியடித்து மக்களின் ஆசீர்வாதத்துடன் 2024-ல் வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற லோகமான்ய திலகர் விருது வழங்கும் விழா 2023-ல் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

August 01st, 12:00 pm

இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியமானது. நான் இங்கே உற்சாகமாகவும், உணர்ச்சிகரமாகவும் இருக்கிறேன். இன்று, நமது முன்மாதிரியும், இந்தியாவின் பெருமையுமான பாலகங்காதர திலகரின் நினைவு தினம் ஆகும். மேலும், இன்று அன்னா பாவ் சாத்தே அவர்களின் பிறந்த நாளாகும். லோகமான்ய திலகர் அவர்கள் நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றின் நெற்றித் திலகம் போன்றவர். அதேசமயம், சமூக சீர்திருத்தங்களுக்கு அன்னா பாவ் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது, அசாதாரணமானது. இந்த இருபெரும் ஆளுமைகளின் பாதங்களில் மரியாதையுடன் தலைவணங்குகிறேன்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் லோக்மான்ய திலக் தேசிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது

August 01st, 11:45 am

விழா நடைபெறும் இடத்திற்கு வந்த பிரதமர், லோக்மான்ய திலகர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், லோக்மான்ய திலகரின் நினைவு நாளில், அவருக்கு அஞ்சலி செலுத்தினார், மேலும் இது அவருக்கு ஒரு சிறப்பு நாள் என்று கூறினார். லோக்மான்ய திலகரின் புண்ணிய திதி மற்றும் அன்னா பாவ் சாத்தேவின் பிறந்த தினம் இன்று என்று பிரதமர் குறிப்பிட்டார். லோக்மான்ய திலகர் அவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 'திலகம்' என்று பிரதமர் கூறினார். சமூகத்தின் மேம்பாட்டிற்காக அன்னா பாவ் சாத்தேவின் அசாதாரணமான மற்றும் இணையற்ற பங்களிப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார். சத்ரபதி சிவாஜி, சபேகர் சகோதரர், ஜோதிபா புலே மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோர் அவதரித்த பூமிக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். முன்னதாக தக்துஷேத் கோவிலில் பிரதமர் ஆசி பெற்றார்.