டிஇஆர்ஐ-யின் உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் முக்கிய அம்சங்கள்

February 16th, 06:33 pm

7 ஆண்டுகளாக எல்இடி பல்பு விநியோகத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டம் 220 பில்லியன் யூனிட் மின்சாரத்தை சேமிக்க உதவியதுடன், ஆண்டுக்கு 180 பில்லியன் டன் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவும், உதவியுள்ளது. அத்துடன் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்த தேசிய ஹைட்ரஜன் இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பசுமை ஹைட்ரஜன் வளத்தைப் பயன்படுத்துவதற்கான நிலையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய, எரிசக்தி மற்றும் வள நிறுவனம் (TERI) போன்ற கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.

உலகின் நீடித்த வளர்ச்சிக்கான தேரி உச்சிமாநாட்டில் பிரதமர் தொடக்க உரையாற்றினார்

February 16th, 06:27 pm

எரிசக்தி மற்றும் வள நிறுவனத்தின் (TERI) உலக நீடித்த வளர்ச்சிக்கான உச்சிமாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக தொடக்க உரையாற்றினார். டொமினிக் குடியரசின் அதிபர் திரு லூயி அபிநாடெர், கயானா கூட்டுறவு குடியரசின் அதிபர் டாக்டர் முகமது இர்ஃபான் அலி, ஐநா துணைப் பொதுச் செயலாளர் திருமதி ஆமீனா ஜெ முகமது, மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாடு 2018-ஐ நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்

February 15th, 03:04 pm

2018ம் ஆண்டுக்கான உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டை நாளை வெள்ளிக்கிழமை 2018 பிப்ரவரி 16ம் தேதி பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறார். நீடித்த வளர்ச்சி, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் உள்ள உலகளாவியத் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களை ஒரு பொது மேடையில் ஒன்றாக கொண்டு வருவதற்கான எரிசக்தி மற்றும் வளங்கள் பயிற்சி நிறுவனமான டெரியின் முன்னோடி அமைப்பே உலக நீடித்த வளர்ச்சிக்கான உச்சிமாநாடு,