தஞ்சாவூர் உண்மையிலேயே மிக அழகாகனது: பிரதமர்
December 08th, 09:40 pm
தஞ்சாவூர் பயணம் குறித்து ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பிரதமர் சென்னையில் ஆற்றிய உரை
February 14th, 11:31 am
பிரதமர் திரு.நரேந்திரமோடி, சென்னையில் இன்று, பல்வேறு முக்கியத் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், அர்ஜுன் பீரங்கி(எம்கே-1ஏ)யை ராணுவத்திடம் ஒப்படைத்தார்.தமிழ்நாட்டில் பல்வேறு முக்கியத் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
February 14th, 11:30 am
பிரதமர் திரு.நரேந்திரமோடி, சென்னையில் இன்று, பல்வேறு முக்கியத் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், அர்ஜுன் பீரங்கி(எம்கே-1ஏ)யை ராணுவத்திடம் ஒப்படைத்தார்.பிப்ரவரி 14-ம் தேதி தமிழகம், கேரளாவுக்கு பிரதமர் பயணம்
February 12th, 06:10 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி பிப்ரவரி 14-ஆம் தேதி தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். சென்னையில், அன்று காலை 11.15 மணியளவில், பிரதமர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், அர்ஜூன் போர் பீரங்கி வண்டியை ( எம்கே-1ஏ) ராணுவத்திடம் ஒப்படைக்கிறார். மாலை 3.30 மணியளவில், கொச்சியில், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்தத் திட்டங்கள், இந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கிய உத்வேகத்தை அளிப்பதுடன், முழுமையான வளர்ச்சி ஆற்றலை கொண்டு வரும் வேகத்துக்கு பெரிதும் உதவும்.உள்ளூர் விளையாட்டுப் பொருள்களுக்கு ஊக்கமளிக்கும் நேரமிது என்று மனதின் குரலில் பிரதமர் கூறினார்
August 30th, 03:43 pm
புதிய விளையாட்டுப் பொருள்களை குழந்தைகளுக்கு எவ்வாறு கிடைக்கச் செய்வது மற்றும் பொம்மை தயாரிப்பின் பெரிய மையமாக இந்தியாவை எப்படி மாற்றுவது என்பது குறித்து காந்தி நகரில் உள்ள குழந்தைகள் பல்கலைக்கழகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலச் அமைச்சகம், கல்வி அமைச்சகம், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் ஆகியவற்றோடு நடந்த தனது உரையாடல்களைக் குறித்து மனதின் குரலின் புதிய உரையில் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார். விளையாட்டுப் பொருள்கள் செயல்பாட்டை அதிகரிக்கும் அதே வேளையில் நமது ஆசைகளுக்கும் சிறகு கட்டி விடுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். விளையாட்டுப் பொருள்கள் மனதுக்கு மட்டும் மகிழ்ச்சியை அளிப்பதில்லை, மாறாக அவை மனதை செம்மைப்படுத்துவதிலும், நோக்கத்தை ஆழப்படுத்துவதிலும் துணை புரிகின்றன என்று அவர் கூறினார்.