மும்பையில் நடைபெற்ற அபிஜத் மராத்தி மொழி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 05th, 07:05 pm

மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, துணை முதலமைச்சர்கள் தேவேந்திர ஃபட்னவிஸ் அவர்களே, அஜித் பவார் அவர்களே, மத்திய அரசில் உள்ள எனது சகாக்களே, தனது பாடல் மூலம் பல தலைமுறைகளில் முத்திரை பதித்த ஆஷா அவர்களே, புகழ்பெற்ற நடிகர்கள் பாய் சச்சின் அவர்களே, நம்தியோ காம்ப்ளே அவர்களே, சதானந்த் மோரே அவர்களே, மகாராஷ்டிர அரசின் அமைச்சர்களான பாய் தீபக் அவர்களே, மங்கள் பிரபாத் லோதா அவர்களே, பிஜேபி கட்சியின் மும்பைத் தலைவர் பாய் ஆஷிஷ் அவர்களே, இதர பிரமுகர்களே, சகோதர, சகோதரிகளே!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற அபிஜத் மராத்தி மொழி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்

October 05th, 07:00 pm

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மராத்தி மொழிக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். இந்தத் தருணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, மராத்தி மொழி பேசும் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை அங்கீகரித்ததோடு, மகாராஷ்டிராவின் கனவை நிறைவேற்றுவதில் பங்களிப்பதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மகாராஷ்டிர மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இந்த வரலாற்று சாதனையின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் தெரிவித்தார். மேலும், பெங்காலி, பாலி, பிராகிருதம் மற்றும் அசாமி மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்த பிரதமர், இந்த மொழிகளுடன் தொடர்புடைய மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தெலுங்கு மொழி தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

August 29th, 03:15 pm

தெலுங்கு மொழி தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தெலுங்கு மொழியைப் பிரபலப்படுத்த பணியாற்றும் அனைவரையும் அவர் பாராட்டியுள்ளார்.

விண்வெளித் துறை சீர்திருத்தங்களால் தேசத்தின் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்: பிரதமர் மோடி 'மன் கீ பாத்' (மனதின் குரல்)

August 25th, 11:30 am

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இன்று மீண்டும் ஒருமுறை தேசத்தின் சாதனைகள், நாட்டுமக்களின் கூட்டு முயற்சிகள் ஆகியவை பற்றிய உரையாடல்களே. 21ஆம் நூற்றாண்டு பாரதத்திலே ஏராளமான விஷயங்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் அஸ்திவாரத்திற்கு உரம் சேர்த்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, இந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று, நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் நமது முதல் தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடினோம். நீங்களும் இதைக் கொண்டாடியிருப்பீர்கள். மீண்டும் ஒருமுறை சந்திரயான்–3இன் வெற்றியை நினைந்து களித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். கடந்த ஆண்டு இதே நாளில் தான் சந்திரயான்-3, நிலவின் தென்பாகத்தில், சிவசக்திப் புள்ளியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. பாரதம் இந்த கௌரவம் மிக்க சாதனையைப் படைத்த முதல் தேசமானது.