அசாம் மாநிலம் குவஹாத்தியில் ஜூமோயிர் பினாந்தினி நிகழ்ச்சியில் (மாபெரும் ஜூமோயிர் நடனம்) பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 24th, 06:40 pm
அசாம் ஆளுநர் திரு லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா அவர்களே, துடிப்புமிக்க முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மத்திய அரசின் எனது சகாக்களான டாக்டர் எஸ். ஜெய்சங்கர், சர்பானந்த சோனோவால் அவர்களே, திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா அவர்களே, ஏனைய அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்களே, அனைத்து கலைஞர்களே, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே,அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற ஜுமோயிர் பினாந்தினி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்
February 24th, 06:39 pm
அசாம் மாநிலம் குவஹாத்தியில் இன்று நடைபெற்ற ஜுமோயிர் பினாந்தினி (மெகா ஜுமோயிர்) 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்த நிகழ்ச்சியில் ஆற்றல், உற்சாகம் மற்றும் எழுச்சி நிறைந்த ஒரு சூழல் இருந்தது என்றார். தேயிலைத் தோட்டங்களின் நறுமணத்தையும் அழகையும் பிரதிபலிக்கும் ஜுமோயிர் கலைஞர்களின் ஈர்க்கக்கூடிய தயாரிப்புகளையும் அவர் குறிப்பிட்டார். ஜுமார் மற்றும் தேயிலைத் தோட்ட கலாச்சாரத்துடன் மக்களுக்கு ஒரு சிறப்பு பிணைப்பு இருப்பதைப் போலவே, தானும் அதேபோன்ற தொடர்பைப் பகிர்ந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டார். இன்று ஜுமார் நடனத்தை நிகழ்த்தும் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான கலைஞர்கள் ஒரு சாதனையை நிகழ்த்துவார்க என்று அவர் மேலும் கூறினார். 2023-ஆம் ஆண்டில் அசாம் சென்றபோது, 11,000 கலைஞர்கள் பிஹு நடனத்தை நிகழ்த்தி சாதனை படைத்ததை நினைவு கூர்ந்த பிரதமர், அது தனக்கு மறக்க முடியாத நினைவாக இருந்தது என்றும், இதேபோன்ற கண்கவர் நிகழ்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் கூறினார். பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக அசாம் அரசுக்கும், அதன் முதல்வருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். தேயிலை சமூகத்தினரும், பழங்குடியின மக்களும் கொண்டாட்டங்களில் பங்கேற்பதால் அசாமுக்கு இன்று பெருமை சேர்க்கும் நாள் என்று அவர் குறிப்பிட்டார். இந்த சிறப்பு நாளில் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமரின் பதிலின் ஆங்கில மொழிபெயர்ப்பு
February 04th, 07:00 pm
மாண்புமிகு குடியரசு தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன். நேற்றும் இன்றும் இரவு வெகுநேரம் வரை, அனைத்து மாண்புமிகு எம்.பி.க்களும் இந்த நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை தங்கள் கருத்துகளால் வளப்படுத்தினர். பல மாண்புமிகு அனுபவம் வாய்ந்த எம்.பி.க்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர், மேலும், ஜனநாயகத்தின் பாரம்பரியத்தைப் போலவே, தேவை இருந்த இடத்தில், பாராட்டு இருந்தது, ஒரு பிரச்சனை இருந்த இடத்தில், சில எதிர்மறை விஷயங்கள் இருந்தன, ஆனால் இது மிகவும் இயல்பானது! திரு. சபாநாயகர் அவர்களே, நாட்டு மக்கள் 14வது முறையாக இந்த இடத்தில் அமர்ந்து குடியரசு தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவிக்க எனக்கு வாய்ப்பளித்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம், எனவே, இன்று நான் மக்களுக்கு மிகுந்த மரியாதையுடன் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவையில் விவாதத்தில் பங்கேற்று விவாதத்தை வளப்படுத்திய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் பதில்
February 04th, 06:55 pm
மக்களவையில் இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பதிலளித்தார். அவையில் உரையாற்றிய பிரதமர், நேற்றும் இன்றும் விவாதங்களில் பங்கேற்ற அனைத்து மரியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புகளையும் பாராட்டினார். ஜனநாயகத்தின் பாரம்பரியம் என்பது தேவையான இடங்களில் பாராட்டு மற்றும் கூடவே சில எதிர்மறையான கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. இது இயற்கையானது என்று பிரதமர் குறிப்பிட்டார். 14 ஆவது தடவையாக குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்க மக்கள் வாய்ப்பு வழங்கியதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், குடிமக்களுக்கு தனது மரியாதைக்குரிய நன்றியைத் தெரிவித்ததுடன், கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவரையும் தங்கள் எண்ணங்களால் விவாதங்களைச் செழுமைப்படுத்தியதற்காக பாராட்டினார்.India has a robust system of agriculture education and research based on its heritage : PM Modi
August 03rd, 09:35 am
Prime Minister Narendra Modi inaugurated the 32nd International Conference of Agricultural Economists, emphasizing the need for global cooperation in agriculture and the importance of sustainable farming practices. The PM also highlighted India's efforts in digital agriculture, water conservation, and soil health management.வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
August 03rd, 09:30 am
புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-08-2024) தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள், நிலையான வேளாண்-உணவு முறைகளை நோக்கிய மாற்றம் என்பதாகிம். பருவநிலை மாற்றம், இயற்கை வளங்கள் குறைதல், அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள், மோதல்கள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நிலையான விவசாயத்திற்கான அவசர தேவையை சமாளிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் 75 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.அசாம் தேயிலைத் தோட்ட சமூகத்தினரின் கடின உழைப்புக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
March 09th, 02:15 pm
அசாம் தேயிலை உலகம் முழுவதும் பரவியுள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார். தேயிலைத் தோட்ட சமூகத்தினரின் மன உறுதி மற்றும் கடின உழைப்பை அவர் பாராட்டினார்.