2022 மிகவும் ஊக்கமளிக்கிறது, அற்புதமானது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

December 25th, 11:00 am

நண்பர்களே, இவை அனைத்துடன் கூடவே 2022ஆம் ஆண்டு, மேலும் ஒரு காரணத்திற்காக நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்கும். அது என்னவென்றால், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் விரிவாக்கம் தான் அது. நாட்டுமக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கொண்டாடும் விதமாக அற்புதமான பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. குஜராத்தின் மாதவ்புரின் திருவிழாவிலே ருக்மணி திருக்கல்யாணம், பகவான் கிருஷ்ணரின் வடகிழக்குடனான தொடர்புகள் ஆகியவை கொண்டாடப்படுகின்றன; அல்லது காசி-தமிழ் சங்கமம் ஆகட்டும், இந்தக் காலங்களில் ஒற்றுமையின் பல வண்ணங்கள் தென்பட்டன. 2022ஆம் ஆண்டிலே நாட்டுமக்கள் மேலும் ஒரு அமர இதிஹாசத்தை எழுதினார்கள். ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வீடுதோறும் மூவண்ணம் இயக்கத்தை யாரால் மறந்து விட முடியும்!! அந்த ஒப்பற்ற கணங்களிலே நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் சிலிர்ப்பை உணர்ந்தார்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழிந்த நிலையில், இந்த இயக்கம் நாடு முழுவதையும் மூவண்ணத்தால் நிரப்பியது. 6 கோடிக்கும் அதிகமானோர் மூவண்ணக்கொடியோடு செல்ஃபி புகைப்படத்தை எடுத்து அனுப்பினார்கள். சுதந்திரத்தின் இந்த அமுதப் பெருவிழாவிலே அடுத்த ஆண்டும் இதே போலவே நடக்கும் – அமுதகாலத்தின் அடித்தளத்தை இது மேலும் பலமுடையதாக ஆக்கும்.

பஞ்சாப், மொஹாலியில் உள்ள ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 24th, 06:06 pm

பஞ்சாப் ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்களே, முதல்வர் திரு.பகவந்த் மான் அவர்களே, மத்திய அமைச்சரவையை சேர்ந்த டாக்டர் திரு.ஜிதேந்திர சிங் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.மனீஷ் திவாரி அவர்களே, அனைத்து மருத்துவர்களே, ஆராய்ச்சியாளர்களே, மருத்துவ உதவியாளர்களே, பிற ஊழியர்களே, மற்றும் எனது அன்பு சகோதர, சகோதரிகளே, பஞ்சாபின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வந்துள்ளவர்களே..

PM dedicates Homi Bhabha Cancer Hospital & Research Centre to the Nation at Sahibzada Ajit Singh Nagar (Mohali)

August 24th, 02:22 pm

PM Modi dedicated Homi Bhabha Cancer Hospital & Research Centre to the Nation at Mohali in Punjab. The PM reiterated the government’s commitment to create facilities for cancer treatment. He remarked that a good healthcare system doesn't just mean building four walls. He emphasised that the healthcare system of any country becomes strong only when it gives solutions in every way, and supports it step by step.

பவள விழா மைல்ஸ்டோன் புக் ஆஃப் டாடா மெமோரியல் புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்

May 25th, 11:08 am

பவள விழா மைல்ஸ்டோன் புக் ஆஃப் டாடா மெமோரியல் புத்தகத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீ மோடி, புற்று நோய் சிகிச்சைக்கு, திரு ரத்தன் டாட்டா மற்றும் டாட்டா மெமோரியல் மருத்துவமனையின் பங்களிப்பை பாராட்டினார். புற்று நோய் மிக பெரிய சவால்களில் ஒன்றாகும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, அதனால், நோயாளிகள் குறைவான செலவில் சிகிச்சை பெற ஒரு பொதுவான தளத்தை உண்டாக்குவது மிக அவசியம் என்றார்.